Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்புவோமா?
#7
பாடசாலைகளில் பாடசாலைத் தேவைக்கு அதிகமாக நூல்களைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்... குறிப்பாக உயர்கல்விக்குரிய (அதாவது பட்டப்படிப்புக்குரிய) நூல்களை அங்கு மாணவர்கள் பயன்படுத்துதல் குறைவு...அப்படியான நூல்கள் இருப்பின் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தற்காலிக யாழ் பொது நூலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்... அங்கு பலதுறை சார்ந்தோரும் கடனாகவும் வந்தும் நூல்களைப் பெற்றுப் படித்துப் பயன்பெறுகின்றனர்....!

கல்விக்குள் அரசியல் என்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டிய விடயம்... புத்தகமும் செங்கட்டியும் என்றும் வெண்தாமரை இயக்கம் என்றும் சந்திரிக்கா - அனுரத்த ரத்வத்தை - சாத்வீக-ஆயுத சனநாயகக் கும்பல்கள் என்று முப்பரிமான அரசியல் சித்து விளையாட்டு காட்டும் அமைப்புக்கள் தமிழரின் கல்வியல் சொத்துக்களுடன் சமாதானம் காட்ட விளைவதை நிச்சயம் புறக்கணிக்க வேண்டும்...!

ஆனால் நூல்களைப் புறக்கணிக்காதீர்கள்...யாழ் மண்ணில் இன்னும் கல்வித் தாகத்துடன் சிறார்கள் உருவாகின்றனர்...காத்திருக்கின்றனர்....! அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது... நாம் சிறார்களாய் இருந்த போது ஒரு நூலகம் இல்லாமல் பட்ட துன்பம் போதும்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-07-2004, 04:15 AM
[No subject] - by Eelavan - 12-07-2004, 07:32 AM
[No subject] - by tamilini - 12-07-2004, 02:08 PM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 05:10 PM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 05:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)