![]() |
|
யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்புவோமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்புவோமா? (/showthread.php?tid=6267) |
யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்புவோமா? - aathipan - 12-06-2004 நாம்; படித்த புத்தகங்களை யாழ் நூலக்திற்கு அனுப்பிவைத்தால் அது எம்மவர்க்கு பயன்படும் என்று நினைக்கிறேன். அதற்கு எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என யாராவது தெரியப்படுத்தினால் நல்லது. - sri - 12-07-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நாம்; படித்த புத்தகங்களை யாழ் நூலக்திற்கு அனுப்பிவைத்தால் அது எம்மவர்க்கு பயன்படும் என்று நினைக்கிறேன். அதற்கு எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என யாராவது தெரியப்படுத்தினால் நல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்னிடமும் நிறைய உண்டு எங்கு அனுப்ப வேண்டும் :?: :?: - Eelavan - 12-07-2004 அன்பின் நன்பர்களுக்கு. முதற்கண் நீங்கள் படித்த புத்தகங்களை யாழுக்கு அனுப்பும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. ஆனால் பயன்பாட்டளவையும் தேவையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது யாழ் பொது நூலகத்துக்கு அதனை அனுப்புவதை விட நீங்கள் படித்த முன்னைநாள் பாடசாலை நூலகங்களுக்கோ அல்லது உங்கள் பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களுக்கோ அவற்றை அனுப்பி உதவுங்கள்.பாடசாலையில் ஒழுங்கான நூலக வசதி இல்லாமலிருந்தால் அதனைச் சீர் செய்து கொடுங்கள். யாழ் பொது நூலகம் அரசியலில் சிக்கித் தவிக்கின்றது உங்கள் உதவி பயனுள்ளதாக இருக்கவேண்டுமானால் அவரவர் தங்கள் பிரதேச நூலகங்களை அபிவிருத்தி செய்தாலே பெரிய உதவியாக இருக்கும் - tamilini - 12-07-2004 நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்.. எங்கு என்றாலும் பயன்பட்டால் சரி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்புவோமா? - aswini2005 - 12-07-2004 ஆதிபன் உங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள நு}ல்நிலையங்களிலிருந்து புத்தகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளில் பல வீடுகளில் உறங்குகிறது. நான் வாழும் ஐரோப்பிய நாட்டில் ஆனைக்கோட்டை நு}லகத்தின் பழைய அருமையான நு}ல்கள் எனக்குத் தெரிந்த ஒரு தமிழரின் வீட்டில் இருக்கிறது. எப்படி இந்த நு}ல்கள் வந்தன என்ற எனது கேள்விக்கு வந்தபதில். ஜஉழடழசசிறீனயசமடிடரநஸ'எனது அக்காவின் மகன் யாழ்பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவன் , நான் நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ஆள் , அதுதான் தம்பி அங்கைநான் போனபோது உந்தப்புத்தங்களை எனக்குத் தந்தவன். இப்பவும் ஏதாவது புத்தகங்கள் ஆனைக்கோட்டை நு}லகத்துக்கு வந்தா எடுத்து அனுப்புவான்"ஜஃஉழடழசஸ ஒரு மருத்துவடிபீட மாணவன் ஒரு நு}லகத்தின் நு}ல்களை எடுத்து தனது ஐரோப்பிய சித்திக்கு அனுப்பியிருக்கிறான். பாருங்கள் எவ்வளது தமிழினம் மீதும் எதிர்காலச் சந்ததிமீதும் பற்றுள்ள மாணவன் என்று. ஒரு புத்தகத்தை அந்த நு}லகம் பெறுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்கும். சுயநலமுள்ள இப்படியானவர்கள் உள்ளவரை எங்கள் இனத்தின் விடுதலையும் து}ரம்தான். எங்கள் எதிர்காலச் சந்ததியின் அறிவுகொடுக்கும் நு}ல்களும் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வுதான். பாருங்கள் இப்படியும் மனிதர்கள். குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவன் லண்டனுக்கு மேற்படிப்புக்கு வரப்போகிறார். இவர்போன்றவளுக்கு அறிவுத்தீனி போட்ட புத்தகங்களை இவர் ஐரோப்பா அனுப்புவதை என்ன செய்யலாம் ? - aswini2005 - 12-07-2004 Eelavan Wrote:அன்பின் நன்பர்களுக்கு. நல்லதொரு ஆலோசனை ஈழவன். புத்தகங்களை அனுப்பவிரும்பும் ஆதிபன் , மீரா நீங்கள் ஈழவனின் ஆலோசனைப்படி செய்யலாம் என்பது எனது கருத்தாகவும் இருக்கிறது. - kuruvikal - 12-07-2004 பாடசாலைகளில் பாடசாலைத் தேவைக்கு அதிகமாக நூல்களைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்... குறிப்பாக உயர்கல்விக்குரிய (அதாவது பட்டப்படிப்புக்குரிய) நூல்களை அங்கு மாணவர்கள் பயன்படுத்துதல் குறைவு...அப்படியான நூல்கள் இருப்பின் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தற்காலிக யாழ் பொது நூலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்... அங்கு பலதுறை சார்ந்தோரும் கடனாகவும் வந்தும் நூல்களைப் பெற்றுப் படித்துப் பயன்பெறுகின்றனர்....! கல்விக்குள் அரசியல் என்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டிய விடயம்... புத்தகமும் செங்கட்டியும் என்றும் வெண்தாமரை இயக்கம் என்றும் சந்திரிக்கா - அனுரத்த ரத்வத்தை - சாத்வீக-ஆயுத சனநாயகக் கும்பல்கள் என்று முப்பரிமான அரசியல் சித்து விளையாட்டு காட்டும் அமைப்புக்கள் தமிழரின் கல்வியல் சொத்துக்களுடன் சமாதானம் காட்ட விளைவதை நிச்சயம் புறக்கணிக்க வேண்டும்...! ஆனால் நூல்களைப் புறக்கணிக்காதீர்கள்...யாழ் மண்ணில் இன்னும் கல்வித் தாகத்துடன் சிறார்கள் உருவாகின்றனர்...காத்திருக்கின்றனர்....! அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது... நாம் சிறார்களாய் இருந்த போது ஒரு நூலகம் இல்லாமல் பட்ட துன்பம் போதும்...!
|