12-07-2004, 05:10 PM
Eelavan Wrote:அன்பின் நன்பர்களுக்கு.
முதற்கண் நீங்கள் படித்த புத்தகங்களை யாழுக்கு அனுப்பும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றி.
ஆனால் பயன்பாட்டளவையும் தேவையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது யாழ் பொது நூலகத்துக்கு அதனை அனுப்புவதை விட
நீங்கள் படித்த முன்னைநாள் பாடசாலை நூலகங்களுக்கோ அல்லது உங்கள் பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களுக்கோ அவற்றை அனுப்பி உதவுங்கள்.பாடசாலையில் ஒழுங்கான நூலக வசதி இல்லாமலிருந்தால் அதனைச் சீர் செய்து கொடுங்கள்.
யாழ் பொது நூலகம் அரசியலில் சிக்கித் தவிக்கின்றது உங்கள் உதவி பயனுள்ளதாக இருக்கவேண்டுமானால் அவரவர் தங்கள் பிரதேச நூலகங்களை அபிவிருத்தி செய்தாலே பெரிய உதவியாக இருக்கும்
நல்லதொரு ஆலோசனை ஈழவன். புத்தகங்களை அனுப்பவிரும்பும் ஆதிபன் , மீரா நீங்கள் ஈழவனின் ஆலோசனைப்படி செய்யலாம் என்பது எனது கருத்தாகவும் இருக்கிறது.
:::: . ( - )::::

