08-02-2003, 03:24 PM
வலி.தெற்கு பிரதேச சபை சுகாதாரப் பகுதி ஊழியர்களின் மெத்தனத்தால் சுன்னாகம் பஸ் நிலையப்பகுதி மற்றும் மீன்சந்தைப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அழுக்குகளை அள்ளி - வாய்க்கால் ஓரமாக - வீதி யில் ஊழியர்கள் குவித்து விட்டுச் செல்வதாகவும் -இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் -
பொதுமக்கள் கூறுகின்றனர்.இதேபோன்று சுன்னாகம் மீன் சந்தையில் உள்ள கழிவுப்பொருள்கள் மற்றும் வாழைக்குலைச் சந்தைப் பகுதியில் உள்ள கழிவுகளை வீதி யோரங்களில் அள்ளி குவித்துவிட்டுச் செல்வதன் மூலம் அப்பகுதியில் குடி யிருக்கும் பொதுமக்கள் அதிக சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
அகற்றப்படும் கழிவுப்பொருள்களை சேர்ந்து கிடக்கவிடாது உடனடியாக அப்புறப்படுத்தினால் மோசமான சுகாதாரச் சீர்கேடு உருவாவதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.