Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு
#2
அனுசரணை பணியை தொடருமாறு சிறிலங்கா அரசு நோர்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் ஸ்கன்ரி நேவிய நாடான நோர்வே அனுசரணை பணியாற்றி வருவது குறித்து தென்னிலங்கையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.

நியாயத்தின்பால் எவரும் நிற்கும்போது அநியாய வாதிகளுக்கு அது அருவருப்பாக சூத்திரமாகத்தான் தெரியும். :!:

சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியாற்றுவதற்கு முதலில் அழைப்பு விடுத்தவர் ஜனாதிபதி சந்திரிகாதான். :!: பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் நோர்வேயின் அனுசரணையை தாறுமாறாக விமர்சனம் செய்தார். பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். :evil:

நோர்வே மீது ஜனாதிபதிக்கு ஒரு கசப்பான பார்வையுடன் நோக்கத் தொடங்கினார். சிங்கள இனவாதப் பிக்குகள் கொழும்பிலுள்ள நோர்வே மீது து}தரகம் வரைச் சென்று ஆர்ப்பாட்டம்; செய்து அட்டகாசம் புரிந்து நோர்வேக் கொடியை எரித்து நாசகார நடவடிக்கையில் ஈடுபட்ட போதெல்லாம் அம்மணி மௌனமாகவே இருந்தார்.

தான் நினைத்தது தமது அபிலாசைகளை இந்த இனவாதப் பிக்குகள் நிறைவேற்றுகின்றனர். என்ற உள்ளுர மகிழ்ச்சி அப்போது அம்மணிக்கு ஏற்பட்டது. :evil:

அதற்கு ஒருபடி மேலாக போரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகள் நோர்வேயின் அனுசரணைப் பணியை துவசம் செய்யும் வகையில் அட்டகாசமாக தென்னிலங்கையில் முழக்கமிட்டனர்.

நோர்வேயின் சமாதானத் து}துவர் சொல்ஹெய்ம் மீது போலிச் சாயம் புூசி அவது}றான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஐ.தே.முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியைப் பிடித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசும் அனுசரணைப்பணியை உதாசீனம் செய்து உதறித் தள்ளிவிடவில்லை சர்வதேச சமூகத்தின் பார்வை நோர்வேயின் சமாதான அனுசரணை பணி குறித்து திருப்தியான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதால் புறந்தள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் நோர்வே பிரதிநிதிகள் கொழும்பு வரும்போது அவர்களுக்கு வழங்கும் கௌரவங்கள், வரவேற்பு என்பன எந்தளவிற்கு இன்றைய சிறிலங்கா அரசு நோர்வே மீது அக்கரை காட்டுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன.

நோர்வே தரப்பினர் இருதரப்புச் சமாதான முயற்சிகளில் காட்டிவரும் வேகம், ஆர்வம் சிறிலங்கா அரச தரப்பிடம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நோர்வேயின் கருத்துக்களுக்குச் செவிமடுத்துச் சமாதானப் பணியை முன்னேடுப்பதற்கு அரசு தயாராகவில்லை.

தற்போது அரசின் ஒரு அங்கமாக செயற்படும் ஜே.வி.பி. நோர்வேயின் அனுசரணைப் பணியை படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றது.

நோர்வே அனுசரணையிலிருந்து மத்தியஸ்த நிலைக்கு வந்து விட்டதாகவும் தமது ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்துள்ளது.

இந் நிலையில் நோர்வேயின் அனுசரணைப் பணியை தொடருமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

தலையாடாமல் வால் ஆடுவது போல் ஜே.வி.பி தன்னிச்சையாக செயற்படுவது ஒருபுறமிருக்க. சமாதானச் சூழல் தற்போது கேள்விக்குறியோடு இருக்கும் நிலையில் நோர்வேயின் அனுசரணைப் பணியை நிறுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு சிக்கல் நிலையை உருவாக்கவே இன்றைய இனவாதிகள் வலை வீசியுள்ளனர் என எண்ணத் தோன்றுகின்றது.

எனவே ஆத்திரம் கொண்டு அனுசரணையாளர்களைப் பேசினால் மட்டும் எதுவும் சாதித்து விட முடியாது. எனவே இன்றைய சிறிலங்கா அரசு சமாதானத்தை முன்னெடுப்பதாயின் அனுசரணை பணியாற்றும் நோர்வேயின் கருத்துக்களுக்கும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 12-07-2004, 02:37 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 03:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)