08-02-2003, 02:54 PM
உங்கள் கருத்துக்கு நன்றி பரணி.
ஒரு சிலர் அடிபடுகிறார்கள் உண்மைதான்.
இலங்கையிலும் சரி, புலம் பெயர் நாடுகளிலும் சரி திரைப்படம் - வீடியோ - தொலைக்காட்சி என உள்ள பணம் படைத்தவர்கள் மற்றும் அவற்றைக் கையில் வைத்திருப்பவர்கள் யோசிக்கிறார்களா?
இவர்களும் பொக்கட்டைத்தான் நிரப்புகிறார்கள்.
நான் இவர்களோடு பல முயற்சிகளுக்கு சென்று வேதனையோடு திரும்பியிருக்கிறேன்.உண்மைகளைச் சொன்னால் பிழைக்கத் தெரியாதவன் என திட்டுகிறார்கள்.எனவே எனது வழியை வேறு திசைக்கு மாற்றி விட்டேன்.
இலங்கைத் தமிழர்கள் இன்று படும் வேதனைக்கு ஆரம்ப அரசியல்வாதிகள் காரணம் போல எமது கலை வளராததற்கு இந்த அதிபதிகள்தான் காரணம்.அவர்களை வளர்ப்பது யார்? நாங்கள்தான்............
எமது வீழ்ச்சியும்,எழுச்சியும் நம் கையில்தான் இருக்கிறது.
எத்தனையோ சனத் தொகை குறைந்த நாடுகள் தமக்கென்று ஒரு சினிமாவை - கலை -இலக்கியத்தை படைக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. ஆனால் நாம்?
பிரச்சனை எங்கே என்று தேடுங்கள்?