Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு
#1
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவும், இலங்கை அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையிலும் நார்வே தூதுக் குழுவினர் செயல்படுகின்றனர் என்று ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சி ஜே.வி.பி., என அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா. விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது இக்கட்சி. தற்போது, நார்வே தூதுக் குழுவினர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளது.


இக்கட்சியின் பொதுச் செயலாளர் சில்வின் சில்வியா கொழும்பில் இருக்கும் நார்வே தூதருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள விவரங்களை "சண்டே லீடர்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

நார்வே துõதுக் குழுவினர் மீது எங்கள் கூட்டணி அரசு கொண்டிருந்த நம்பிக்கை மொத்தமாக வீழ்ந்து விட்டது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தூதுக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் தனி ஈழம் அமைவதற்கே ஆதரவாக உள்ளன. இவ்விஷயத்தில் நீங்கள் இரட்டை நிலையை கடைபிடித்து வருகிறீர்கள். இதன்மூலம் இலங்கை அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டீர்கள். மேலும், புலிகளின் கடற்படை பிரிவிற்கு பயிற்சி அளிப்பதிலும், ஆஸ்லோ மாநாட்டில் புலிகள் நிதியுதவி திரட்டவும் உதவி செய்துள்ளீர்கள்.

இவ்வாறு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அதே பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு செய்தியில், ஜே.வி.பி., சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், இலங்கை அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், ""புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நார்வே தூதுக் குழுவினர் நல்லெண்ணத்துடனும், கருணை அடிப்படையிலும் செயலாற்றுகின்றனர். ஜே.வி.பி.,யின் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளும் கூட்டணி அரசுக்கும் சம்பந்தமில்லை,'' என்று கூறியுள்ளார்.
Reply


Messages In This Thread
நார்வே தூதுக் குழுவினர் மீது குற்றச்சாட்டு - by aathipan - 12-06-2004, 07:09 AM
[No subject] - by Kanani - 12-07-2004, 02:37 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 03:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)