08-01-2003, 03:36 PM
<b>கன்னத்தில் முத்தமிட்டால்</b>
மேலிருந்து பலரது கருத்துகளை கவனித்து வந்தேன்.
இன்னமும் நாம் வெகு தூரம் முன்னேற வேண்டிய தேவை நமக்கு இருப்பது தெரிகிறது.
பெற்றோரை இழந்து வளர்ப்பு பெற்றோர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தை மற்றும் அப் பேற்றோருக்கும் வளர்ப்பு குழந்தைக்கும் இடையிலான மனப் போராட்டம்; இவைதான் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில்
ஈழவர் பிரச்சனை ஊடாக கதையாக சொல்லப் பட்டிருக்கிறது.
தாய் அக் குழந்தையை விட்டுச் செல்வதற்கான காரணமாக்க ஈழமக்களது யுத்தம் திணிக்கப் பட்டிருக்கிறது.அல்லது நயமாக பழத்தினுள் ஊசி ஏற்றுவது போல் சினிமாவாக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் கன்னத்தில் முத்தமிட்டால்
வாயிலாக ஈழத்தில் யுத்த பகுதிகளில் மக்கள் படும் அவலங்கள், வேதனைகள் , இன்னும் எத்தனையோ விடயங்கள் ஈழத் தமிழர்கள் தவிர்ந்த எத்தனையோ பேருக்கு போய் சோந்திருக்கிறது.
அதற்காக மணிரத்தினத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
வாழ்த்துகள் அத்தனை கலைஞர்களுக்கும்.
வாழ்துவதற்கும் மனசு வேண்டும்.
தவிர இத்திரைப் படத்துக்கு கிடைத்த விருது குறித்து பெருமைப் படலாம்.இதனால் ஈழ மக்கள் பற்றி அறவே தெரியாத மேலும் பலருக்கு அடிப்படை பிரச்சனை தொடர்பான வியங்களின் ஒரு சில துளியாவது சென்றடைய வாய்ப்புகளுண்டு.......
2003, 16 - 23 March
festival international de films de fribourg
திரைப்பட விழாவில் கன்னத்தில் முத்தமிட்டால்
திரையிப்பட்ட போது ஈழத்தமிழரின் அவலங்களைக் கண்டு கலங்கிய வேற்று நாட்டு மக்களைக் கண்டு அதிர்ந்து போனேன்.இவர்கள் பலர் பொருளாதார அகதிகளாக எம்மைக் கருதியிருந்தது அவர்களது உரையாடல் வழீ புரிய முடிந்தது.
இத் திரைப் படத்தில் ஈழவர் பிரச்சனைக்கான கோணத்தில் பார்த்தால் பல வெற்றிடங்கள் - தவறுகள் இருக்கின்றன.
தமிழைவிட சிங்கள மொழியில் இடம் பெறும் ஒரு வார்த்தை மொழி தெரியாத காரணத்தால் தவராக மட்டுமல்ல தூசனமாகவே (கெட்ட வார்த்தையாக) பாவிக்கப் பட்டிருக்கிறது.
அக் காட்சி:-
வளர்ப்பு பெற்றோருடன் குழந்தை தன் தாயை தேடிப் போக பஸ்ஸில் ஏறியிருக்கும் போது பிரகாஸ்ராஜ் சிங்களத்தில் ஒரு வார்த்தை கேலியாக சொல்வார்.
(நாம் சில சிறு பிள்ளைகளைப் பார்த்து உன்னைக் கலியாணம் பண்ண பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது போன்ற கேலியான வார்த்தைகளை சொல்வதுண்டு.)
அப்படிச் சொல்வதாக நினைத்து பிரகாஸ்ராஜ்:- (ஒயாட்ட மம மகுள் கரணவா)
நான் உன்னை கட்டிலில் சந்திக்கிறேன், என்பார்.
(இவ்வார்தையின் உண்மையான மொழி பெயர்ப்பை எழுத முடியாமலிருக்கிறேன்.........)இவ் வார்த்தையை சொல்லி விட்டு பஸ்ஸை விட்டு இறங்குகிறார்.
இதற்கு முக்கிய காரணம் மொழியை அல்லது அந்த சமூகத்தை சரியாகத் தெரியாதவர்களை (அரை குறைகளை) தமது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதுதான். இவற்றுக்கான பொறுப்பை இயக்குனர்தான் ஏற்கவேண்டும்.
இப்படியான இன்னும் பல லொஜிக்காக உதைக்கும் தவறுகள்..............
1.எந்த ஒரு ஈழத் தாயும் தன் பச்சிளம் குழந்தையை விட்டு ஒரு போதும் போர் ஒன்றுக்கு போகவே மாட்டாள்.
(கள்ளிப் பால் கொடுத்து சாகடிக்கும் தாய்மாரை இலங்கையில் பார்க்கவே முடியாது.)ஈழத்தைப் பற்றிய தேடல் இன்னும் அதிகமாகவே மணிரத்தினத்துக்கு வேண்டியிருக்கிறது.
2.எந்த ஒரு போராளியும் இப்படியான ஒரு தாயை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். போராளிகள் தனது மக்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர மாபியாக்களாகவல்ல. அப்படி நினைத்தால் சுபாஸ் சந்திரபோஸின் போரட்டமும் அப்படியாகிவிடும்.
இபபடி எத்தனையோ முரண்பாடுகள்.
இருப்பினும் ஒரு சினிமாவாக எவ்வளவோ சாதித்திருக்கிறது கன்னத்தில் முத்தமிட்டால் என்பது மிகையில்லை.
உலகத் தமிழன் ஒருவனுக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்தலாம்,பாராட்டாலாம்.அது நம்மால் செய்யப் பட வேண்டியது.
எம்மால் (ஈழத்தமிழரால்) கலை வடிவமாக நமது பிரச்சனைகளை முன் வைப்பதில் நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு.
அது தீர நீண்ட நாள் எடுக்கும்.