11-26-2004, 02:50 PM
thaiman.ch Wrote:ம்ம்ம் எல்லாம் வாய்ப்பேச்சு வீரா்கள்! நாங்க சொன்னமா போராட வாறம் என்டு? சும்மா நீங்களா கற்பனை பண்ணிகிட்டு இருக்காதீங்க. வயசு போன புத்தியும் குறஞ்சா போகும்?
தமிழீழம் பகல் கனவு என்டு சொன்னதுவள் எல்லாம் இப்ப விசுவாசத்தைப் பற்றி எனக்கு சொல்லுதுவள். காலமடா சாமி.....
ஓ... நீங்க போராடாம கடதாசியில தமிழீழம் வாங்கிற ஆக்கள் போல...உங்கட கருத்துகள் தான் இப்ப இங்க அவசியம்... வாங்கோ வந்து வையுங்கோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> -----------------------------------------
அர்ப்பணிப்புடன் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்! : கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர்
பல அர்ப்பணிப்புக்களோடு விதைக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவுகளை நாம் நனவாக்க வேண்டும் சண்டைக் களங்களில் எம்மை வெல்ல முடியாதவர்கள் சமாதான காலத்தில் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டு எமது போராளி களின் உயிர்களைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு திருக்கோயில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் இலக்கியன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், எமது உரிமையைப் பெற வேண்டுமானால் நாம் போராடித்தான் ஆக வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் சந்திரிகா அம்மையார் எமக்கு எதையும் வழங்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வல்வெட்டித்துறையில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை சிங்களப் படைகள் சுட வேண்டுமா இது மிகவும் பாரியதொரு யுத்த நிறுத்த மீறலாகும் என்றார்.
இந்நிகழ்வில் உடும்பன் குளகோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் நிலாகரன், அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தாரகா, அம்பாறை மாவட்ட மாவீரர் காப்பகப் பொறுப்பாளர் பத்மன், வீரமுனைப் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆதிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அ. சந்திரநேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------
புதினம் தந்தது... ஒன்றும் செய்ய வேணாம் தினமும் புதினம் வாசிங்கோ கொஞ்சம் என்றாலும் நிகழ்காலம் விளங்கும்...அதுக்குப் பிறகு களத்தில எழுதலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

