![]() |
|
தமிழருக்கு ஒரு விடிவெள்ளி-தாயகன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழருக்கு ஒரு விடிவெள்ளி-தாயகன் (/showthread.php?tid=6340) Pages:
1
2
|
தமிழருக்கு ஒரு விடிவெள்ளி-தாயகன் - hari - 11-26-2004 <img src='http://img124.exs.cx/img124/8575/praba.gif' border='0' alt='user posted image'> 'எப்போது தர்மம் அழிந்து அதர்மம் தலை து}க்குகிறதோ அப்போது நானே என் பிறப்பை நிகழ்த் துகிறேன்." இப்படி இன்று கடவுளாகத் தொழப்படும் கிருஷ்ணன், பாரதப் போருக்கு முன்பு போர்வீரன் அருச்சுனனுக்கு கூறியதாக பகவத்கீதை கூறுகிறது. இது கற்பனையா? உண்மையா? என ஆய்வு செய்ய நாம் தயாரில்லை. என்றோ ஒருநாள் இப்படி யுத்தம் நடந்ததா? இல்லையா? என எமக்குள் கேள்விகளும் எழும். ஆனபோதும் இந்த வசனத்தை இப்போது உரைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றால், அதர்மம் இடம் பெற்ற பூமிதனில் தமிழரை நிமிர்த்திட, அதர்மத்தை ஒழித்திட தமிழர்க்கு ஒரு சூரியன் கிடைத்ததே. அதைப்பற்றி மானிடரால் பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில் எவராலும் புரிய முடியாத உலகில் இருக்கும் அந்தப் புதிர் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிரான அந்தக் கதிரவன் உதித்து பொன்விழா ஆகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் இங்கு போராட்டத்தை தொடங்கமுன்பு அப்படி என்னதான் அதர்மம் நடந்தது? 1948இல் சிறீலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்ததாம் என கூறப்படுகிறது. அன்று முதல் என்ன நடந்தது? தமிழ்ப் பெயர் கொண்ட நிலங்களில் சிங்களக்குடியேற்றம் நடந்து? அதன் பெயர்கள் சிங்களப் பெயர்களாக்கப்பட்டன. மனிதன் தன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தும் சாதனமான மொழி எமக்கு மறுக்கப்பட்டது. தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்தார்கள். வாகனங்களில் கட்டாயம் சிங்கள 'ஸ்ரீ" போட வேண்டுமாம். ஒரே கேள்வி, ஒரே விடை. ஆனால் பல்கலைக்கழகம் போக சிங்கள மாணவர்கள் குறைந்த புள்ளிகளும் தமிழ் மாணவர்கள் கூடிய புள்ளிகளும் எடுக்க வேண்டுமாம். அரச கரும மொழியாக சிங்களம் மட்டும் தானாம். தமிழர்கள் சத்தியாக்கிரகம், கறுப்புக் கொடி என எல்லாமே செய்தார்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டார்கள், எரிக்கவும் பட்டார்கள், சுட்டும் கொல்லப்பட்டார்கள். கலவரம் என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளும், உடல்களும் எரிக்கப்பட்டன. அவர்கள் உயிர்கள் எடுக்கப்பட்டன. அட இதுவா வாழ்க்கை, எமக்கு விடிவே இல்லையா? என ஏங்கினர் எம் மக்கள். தந்தை செல்வா கூட கூறினாராம். 'இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று. இப்படியான சூழலில்தான் தலைவரால் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் தர்மமும், நீதியும் இருந்தது. அதனால் அது அழிக்கப்பட முடியாமல் போனது. இன்று தன் இலக்கை நெருங்கி நிற்கிறது. இதற் கெல்லாம் அடி நாதமாக, அத்திவாரமாக விளங்கும் தமிழர் தலைவர் பிரபாகரன் இன்று தமிழினத்தை உலகில் உயர்த்தி விட்ட ஒப்பற்ற தலைவராவார். 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று பாட்டு மட்டுமே முன்னர் பாடமுடிந்தது. உலகில் நிமிர்ந்து நிற்க தமிழர்க்கென நாடில்லை. ஒரு கொடி இல்லை. மொழி கூட இல்லாமற் போகுமோ என அஞ்சினோம். ஆனால் இன்று பிரபாவின் காலத்தில் தமிழ்மொழி பெருஞ்சிகரமாய் நிமிர்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். தலைவர் பிரபாகரன் எந்த நாட்டின் உதவியுமின்றி, எந்த நாட்டினதும் வழி நடத்தலுமின்றி எத்த னையோ நாட்டின் பண, ஆயுத உதவிகளுடன் போரிடும் ஸ்ரீலங்காப் படைகளை எவ்விதம் கையாண்டார்? அந்த வெற்றியின் இரகசியம் என்ன? இந்த ஆற்றலை, அறிவை அவர் எப்படிப் பெற்றார் என்பது ஒரு அறிய முடியாத புதிரே. போராட்டத்தை முன்னெடுக்கும் காலகட்டங்களில் அவர் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், சவால்கள் எம்மால் கணக்கிடவே முடியாதவை. ஆனால் அவற்றைக் கண்டு சோர்ந்து போராட்டத்தை கைவிடாது அதை கட்டி வளர்த்து தமிழரை நிமிரச் செய்ததன் மூலம் உறுதிக்கு உறைவிடம் என்றால் பிரபாகரன்தான் என கூறும் அளவுக்கு அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு போராட வேண்டும்? மறைமுகமாக வாழ்ந்து கொண்டு தன்னையே தமிழினத்திற்காக அர்ப்பணித்து, உலகெங்கும் சிறகடித்து பறக்காமல் இளமையிலேயே ஏன் அப்படி அவர் முடிவெடுத்தார்? அவருக்கு குடும்பத்தில் வறுமை இல்லையே! படித்து அரசதொழில் செய்து வாழ்ந்திருக்கலாமே, அவரது குடும்பத்தினருக்கோ, அவருக்கோ அரச ஒடுக்கு முறைகளால் பாதிப்பு ஏற்படவில்லையே! ஆனால் அவர் போராடினார். அவர் பல்கலைக்கழகம் போகாவிட்டாலும், யாரோ ஒரு தமிழன் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தன் தாயின் மார்பில் சிங்களச் ஸ்ரீ பொறிக்கப்படாவிட்டாலும் யாரோ ஒரு தமிழ்த் தாயின் மார்பில் சிங்களச் ஸ்ரீ இனியும் பொறிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழர்கள் இனியும் ரயர் போட்டு எரிக்கப்படக்கூடாது என்பதற்காக போராடத் தொடங்கினார். இதை இன்னும் சிலர் விளங்கியும் விளங்காதவர் போல் அரசின் கால்களை அரவணைப்பது எத்தனை வெட்கக்கேடு. இன்று ஸ்ரீலங்கா அரசின் கால்களைப் பிடித்து வாழ்வு நடத்தும் சில தமிழ்த் துரோகிகள் கதிரைக்கும், அமைச்சுப் பொறுப்புக்களுக்கும் அலைகிறார்கள். ஆனால் அவர் முதலமைச்சர் பதவியையும் வேண்டாம் என்றவர். தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை அவர் எடுக்கும் முடிவுகளில் எப்போதும் துளிகூட பின்னகரவே மாட்டார். நியாயம் மிக்க அந்த முடிவுகளில் விட்டுக் கொடுப்புக்கே இடமிருக்காது. உதாரணமாக தமிழகத்தில் வைத்து புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் என்பன தமிழகப் பொலிசாரால் பறிக்கப்பட்டபோது உணவு, நீர் அருந்தாது சாகும்வரை உண்ணாவிர தத்தை தலைவர் ஆரம்பித்தார். பின்பு அவை மீள ஒப்படைக்கப்பட்ட பின்பே உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவர் இன்று உலகில் வாழ்பவர்களுக்குள் அதிக தொலைநோக்குக் கொண்டவராக விளங்குகிறார். உதாரணமாக 1983 பகுதிகளில் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் அணியொன்று பயிற்சியை முடித்து வெளியேறியபோது அந்த இறுதி நாள் நிகழ்வில் கேணல் கிட்டு உட்பட எமது போராளிகள் பலர் இந்திய இராணுவம் பயிற்சியாளர்களை விட்டுப் பிரியும் வேளை பிரிவுத்துயரில் அதிகமாய் மூழ்கியிருந்தனர். அந்தவேளை தலைவர் கூறினாராம், 'சில நேரம் இதே இந்திய இராணுவ வீரர்களுக்கு எதிராக நாம் போர் புரியும் காலமும் வரலாம்" என்று. அது போல அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியா, இங்கு வந்ததும், தமிழ்த் தேசவிரோதக் குழுக்களுடனும், சிங்களப்படைகளுடனும் சேர்ந்து சுட்டும், வெட்டியும், கற்பழித்தும் ஆறாயிரத்துக்கு அதிக மாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் தனித்து நின்று தலைவர் பிரபாகரனின் புலிப்படைகள் மோதி வென்றதும் வரலாறு. தலைவர் பிரபாகரன் எப்படி இதை சாதித்தார் என்பது அதிசயப்படக்கூடியதுதான். ஏனெனில் உலகின் நான்காவது வல்லரசின் இலட்சக்கணக் கான படைகள், ஸ்ரீலங்காவின் படைகள், தமிழ்த் தேச விரோதக் குழுக்கள், அவர்களிடம் கடல், மற்றும் வான் படைகள், நவீன ஆயுதங்கள். மறுபுறத்தில் தலைவர் பிரபாகரனிடம் சிறிய ஒரு போராளிக்குழு, சிறிய ஆயுதங்கள், எத்தனையோ காட்டிக் கொடுப்புக்கள். ஒரு காலத்தில் தலைவர் மணலாற் றுக் காட்டிற்குள் இருந்தபோது ஆயிரக்கணக்கில் இந்தியப்படைகள் சுற்றி வளைத்து நின்றன. உணவு, உடை, நீர் யாவுக்கும் காட்டிற்குள் என்றால் சொல்லவா வேண்டும். வெளியே ஏற்ற தொடர்புகள் இல்லை. ஆண், பெண் போராளிக ளுக்கு உணவு, உடை, பயிற்சிகள் யாவும் வழங்க வேண்டும். இவற்றிற்கிடையில் சண்டை புரிய வேண்டும். நோயாளிகளை பராமரிக்க வேண்டும். காட்டுக்குள் நீர்த் தட்டுப்பாடு, கிணறு வெட்ட வேண்டும். இதை விட ஆயிரக்கணக்கில் இராணுவம் தலைவரை கைது செய்ய சூழ்ந்து நிற்கிறது. அந்தச் சு10ழலை யோசித்துப் பாருங்கள். எங்கள் தலைவர் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? ஏன் அவர் அப்படி சுமைகள் தாங்க வேண்டும்? ஒரு குடும்பத்தில் சிறு கஷ்டம் வந்து விட்டால் குடும்பத் தலைவர் படும் அவலம் நாம் நேரில் பார்த்ததே. ஆனால் இங்கு அதைவிட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாய் கஷ்டங்கள். முதலமைச்சர் பதவியை தவிர்த்து இப்படியெல்லாம் தலைவர் தமிழர்க்காக சுமைகள் தாங்கினார். சிலுவை சுமந்ததையும், முள்முடி தாங்கியதையுமே சுமையின் அடையாளமாய் வரலாற்றில் படித்தபோதும் இந்தக் காலங்களில் தலைவரும் போராளிகளும் பட்ட துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் ஏராளம். எதுவித சம்பளமுமின்றி உயிர், உடல் இரண்டையும் இன்னொருவருக்காக அர்ப்பணித்து இப்படி வாழ்வது சாதாரணமாக முடியாது. தலைவர் கூறுவார் 'எந்த ஒரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அந்தப் பலவீனத்தை கண்டு பிடித்து அதற்கு ஏற்ற வகையில் துணிகரமான நட வடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எமது வெற்றியே தங்கியிருக்கிறது. அசுரபலம் கொண்ட கோலியாத்தை சிறுவன் தாவீது வென்றது இவ் விதமே" என்று. அதை கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அந்தப் பலவீனத்துக்கு ஏற்ற வகையில் அவர் துணிகர நடவடிக்கைகளையும் தந்திரமாக நகர்த்தி வெற்றி கண்டு விடுவார். 'இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு நான் முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் போரை எதிர்கொள்ளுமளவிற்கு எம்மிடம் சக்தி உண்டா என்பதுபற்றி சிந்தித்து, இழப்புக்கு பயந்து ஓரினம் தனது உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை" என்றார் அவர். கோலியாத்தை தாவீது வென்ற கதையையே அறிந்த எமக்கு அதைவிட மேலான நிகழ்வை தலைவர் காட்டினார். தலைவர் பிரபாகரன் எப்போதும் வித்தியாசமான பார்வையில் சிந்திப்பவர். அவருக்கு தனித்துவமான புலனாய்வுப் பார்வை உள்ளது. இன்று உலகில் உள்ள தலைவர்களுள் இவர் தனித்துவமானவர். இதற்குக் காரணம் யாதெனில் எந்த நாட்டுத் தலைவரையும் பார்த்தால் அவர்களிடம் தனித்துவ திறமை என்று ஏதோ ஒன்றுதான் இருக்கும். ஆனால் தலைவர் பிரபாகரனிடம் எல்லா திறமைகளும் பொதிந்து கிடக்கின்றன. அவர் ஒரு உலகப் பல்கலைக்கழகம். அரசியல், புலனாய்வு, இராணுவம், பொறியியல், மொழியியல், மருத்துவம், நீதி நிர்வாகச் செயற்பாடுகள், அறிவியல், தொழில்நுட்பம் என நீண்டு செல்லும் அனைத்து விடயங்களும் தமிழீழத்தில் தலைவரால் நேரடியாக உருவாக்கப்பட்டு நேரடி வழிநடத்தலில் இயங்குகின்றன. உலகில் எந்த நாட்டுத் தலைவரும் இப்படியில்லை. அவர்கள் இவற்றை கண்காணிப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆனால் தலைவர் பிரபாகரனோ அனைத்து விடயங்களிலும் அனுபவமும், ஆளுமையும், நேரிய பார்வையும் கொண்டவராக விளங்குகின்றார். வானே இடிந்து தலையருகே வந்துவிட்டாலும் அதைக்கண்டு குழம்பிப் போகுபவரல்ல பிரபாகரன். அதற்கு ஏற்ற வகையில் முடிவெடுக்கும் திறன் அவருக்குண்டு. துரோகி கருணா பிரிந்து சென்றபோது உலகமே பிரபாகரன் இதை எப்படிச் சமாளிப்பார் என எண்ணியபோது, அவர் சிரித்தபடியே சாதாரணமாக அதை முடித்து விட்டார். அது என்ன சக்தி என அறியும் ஆற்றல் எவருக்கும் இல்லை. இதனால் தான் இன்று தமிழ் மக்கள் 'தலைவர் இருக்கின்றார் சரியாகப்பார்த்துக்கொள்வார் என்ன பயம்" என எண்ணி அந்தச் சூரியனைத் தங்கள் நம்பிக்கைக் கோபுரமாய் ஏற்றுக்கொள்கின் றார்கள். தலைவர் பிரபாகரனின் இராணுவ ஆற்றல் இன்று அனைத்து உலக இராணுவ நிபுணர்களையும் வியப்பில் ஆழ்த்திய ஒன்று. ஏனெனில் ஸ்ரீலங்கா, அமெரிக்கா, இந்தியா என எல்லா நாடுகளிலும் இராணுவ நிபுணர்கள் யாரோ ஒருவர் எழுதிய இராணுவ நுட்பங்களை, இராணுவ அறிவுகளையே படித்தவர்கள். ஆனால் பிரபாகரன் தானே கற்றுக்கொண்டார். அவர் கூறுவார், 'இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு, எனது வழி காட்டி" என்று. அவரின் வித்தியாசமான இராணுவ நடவடிக்கைகள், அதன் வெற்றிகளை உலகே அறியும். அவர் சிங்கத்தின் வயிற்றுக்குள் சிலந்தி வலை கட்டுவித்தவர். கட்டுநாயக்கா விமான நிலைய தகர்ப்பு இதற்கு உதாரணம். புலனாய் விலும் அவர் புலிதான். புலனாய்வு நட வடிக்கை களை நேரடியாக அவரே நெறிப்படுத்துகிறார். இன்று பலம் மிக்க விசித்திரமான புலனாய்வுக் கட்டுமாணம் தமிழீழத்தில் தலைவரால் உருவாக் கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பணியை ஒருங்கி ணைக்க அதற்கென தனி அதிகாரி இருந்த போதும் அதனை தலைவரே நெறியாள்கை செய்கிறார். காவல்துறையும் அப்படித்தான். அவர் உருவாக்கிய காவல்துறைக்கு அவர் அமைத்த சீருடை உலகின் ஏனைய காவல்துறைச் சீருடைகளுள் வித்தியாசமானது. அதுபோல் புலிகளின் இராணுவச் சீருடையும். இப்படியாக உலகில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டு வித்தியாசமான முறையில் அவர் திட்டங்களைத் தீட்டுபவர். கடற்புலிகள் என்ற ஒரு கடற்படை இன்று தமிழருக்கு உண்டு. கடற்புலிகளின் தியாகமும், புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும் அதன் ஆற்றலும் தலைவர் இட்ட அத்திவாரமே ஆகும். அதன் சாதனைகளை உலகமே அறியும். இந்த உலகத்தில் இதுவரை தமிழர்க்கென தனியான விமானப்படை இல்லை. ஆனால் வீரத்தலைவர் பிரபாகரன் தமிழர்க்கென கடற்படை, தரைப்படை, விமானப் படை யாவும் தந்தார் . தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வரி இப்போது தான் எமக்கு பொருந்துகிறது. அரசியல் நகர்த்தல்களிலும் அவரைப் பற்றி யாவரும் அறிவர். உலகப் பல்கலைக்கழகங்களில் அரசியல் படித்து அதில் முதிர்ச்சி அடைந்த பலர் தலைவருக்கு எதிரான அணிகளில் நின்று பல நாடுகளுடன் இணைந்து அரசியல் காய்களை நகர்த்தினர். நகர்த்தியும் வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் தனது நுட்பமான முறைகளால் தலைவர் எப்படிக் கையாள்கிறார் என்பது தெரிந்ததே. இந்திய இராணுவம் கூட 'செக்மேற்" என்ற இராணுவ நடவடிக்கைகளை அவருக்கு எதிராகச் செய்து தோல்வி கண்டது. இதுபோல அவரை விஞ்ஞானி என்று சொல்லுமளவிற்கு பல செயல்களைச் செய்தும், செய்து கொண்டும் இருக்கிறார். உலகில் பல விஞ்ஞானிகள் ஆயுதங்களை, வெடிபொருட்களை கண்டு பிடிப்பார்கள். அவர்கள் அப்படியான ஒன்றைக் கண்டுபிடித்து விட்டுப் போவார்கள். அதன் பின் வரும் விஞ்ஞானிகளே அதன் ஏனைய வளர்ச்சிப் படிகளை செய்து முடிப்பார்கள். ஆனால் இங்கு தலைவரோ நிதி, பொருளாதார நெருக்கடி சுற்றிவர இராணுவம் இருந்த காலத்தில் 'ஜொனி" எனப்படும் மிதி வெடியை காட்டுக்குள் உரு வாக்கி அதன் மூலம் இந்திய இராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து 'ஜொனி விசேடம்" எனப்படும் அதன் விசேட வளர்ச்சியை அவரே மேற்கொண்டார். மருத்துவம், தொழிநுட்பம், கணிணியியல், பொறியியல் என சொல்லிக் கொண்டே போகலாம். தலைவர் பிரபாகரன் ஒரு விமர்சகர். கலை, இலக்கியம் தொடர்பான தேடலும், ஆர்வமும் நிறையவே அவரிடம் உண்டு. தமிழீழத்தில் உல கத்தரத்திற்கு ஒப்பான பாடல்கள், திரைப்படங்கள், கவிதை, சிறுகதை இலக்கியங்கள் உருவாகுவதற்கு அவரின் இது சார்ந்த செயற்பாடுகளே உந்துசக்தியாக அமைந்தன. தமிழீழத்தில் கலை பண்பாட்டுக்கழகம், நுண்கலைக் கல்லு}ரி, இசைக் கல்லு}ரிகள், வெளியீட்டுப் பிரிவு ஏனைய பல்வகை ஊடகங்கள், வெளியீடுகள் என பலவற்றை தலைவர் ஆரம்பித்து வைத்ததால் இன்று கலை, இலக்கியம் தமிழீழத்தில் நிமிர்ந்து நிற்கிறது. வெளிவரும் படைப்புக்கள் அனைத்தையும் அவரே பார்வை செய்து அது தொடர்பான சரியான குறை நிறைகளை முன் வைப்பார். தலைவர் நியாயமான கலை இலக்கிய விமர்சகர். தலைவரின் உள்ளம் வித்தியாசமானது. தமிழீழ தேசத்தில் எவரும் உறவின்றி அநாதைகளாக இருக்கக்கூடாது என்பது அவர் ஆசை. அதனால் தான் உறவுகளை இழந்த சிறுவர்களுக்காக அவர் காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை இவற்றை உருவாக்கினார். பல்வேறு காலங்களில் விடுதலைப் புலிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோதும் அந்த சுமைகளை போராளிகள் தாங்கி இந்த இல்லங்களை இன்பகரமாகவே வைத்திருந்தனர். நாங்கள் கஷ்டப்பட்டாலும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது அவர் ஆசை. அதுவே அவருக்கு சந்தோசம். அந்தப் பிள்ளைகளுடன் உறவாடி மகிழ்வது அவரின் பெரு விருப்பு. இது போல கவனிப்பாரின்றி உள்ள மூத்தோர்களை பராமரிக்க அன்புச்சோலை, மூதாளர் பேணலகம் தமிழீழத்தில் இயங்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் எம்மக்கள் தலைவரை தம் இதயத்தில் போற்றிப் புகழ்ந்து அவர் மீது தளராத நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இப்படியான தலை வரின் செயற்பாடுகளும் ஒரு காரணம். மக்கள் அவரை புதிய பிறப்பாகவே பார்க்கின்றனர். அவரின் ஐம்பதாவது அகவை இந்த கார்த்திகை இருபத்தாறில் வருகிறது. மழைத்துளிகள் வந்து வாழ்த்துரைக்கும் இக்காலத்தில் ஐம்பதாவது பிறந்த நாள் மிக வித்தியாசமாக அமைகிறது. ஏனெனில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கார்த்திகை விளக்கீடு அன்றுதான் வருகிறது. எப்போதும் கோயில் விளக்கீடு, வீட்டு விளக்கீடு இரண்டும் வௌ;வேறு நாட்களில் வருவது வழக்கம். இம்முறை இரண்டு விளக்கீடுகளும் ஒரே நாளில் தலைவரின் அவதார தினத்தில் வருவது இன்னும் ஒரு சிறப்பே. தலைவர் பிரபாகரன் தமிழ் மொழி வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை உடையவர். சங்க காலத்தில், தொல் காப்பியர் காலத்தில் தமிழ்மொழி எப்படி சிறப்பாக இருந்தது. இன்று எப்படி கெட்டுப் போய்விட்டது என நாம் வேதனைப்பட்டோம். ஆனால் அந்த வேதனையை தீர்த்தவர் பிரபாகரன் அன்றி வேறு யாருமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இதை நாம் அறியலாம். போராளிகளுக்கு சூட்டப்பட்ட து}ய தமிழ்ப் பெயர்கள் மூலமும் ஏனைய அனைத்து நடவடிக்கைகள் மூலமும் தமிழுக்கு தலைவர் கொடுத்த முக்கியத்துவத்தை அறிய முடியும். உலகில் இப்படி தமிழைக் காக்கும் சீரான நடவடிக்கைகள் எங்கும் இல்லை. பலர் அதற்கு தயாராக இருந்த போதும் சூழலின் தன்மைகளும், உரிய ஒத்துழைப்பின்மையும் அவர்களுக்கு உதவவில்லை. பாரதி இன்று இருந்திருந்தால் தமிழீழத்தைப் பற்றி எப்படி எல்லாம் பாடி இருப்பான்! மகாத்மா காந்தி கூறினார் 'எப்போது இந்தியாவில் நடுநிசி வேளை ஆபரணங்களுடன் ஒரு பெண் தனியே பயமின்றி நடமாட முடியுமோ அன்றே இந்தியாவுக்கு சுதந்திரம்" என்று. தலைவர் பிரபாகரன் அந்தச் சூழலை இன்றே உருவாக்கித் தந்து விட்டார். ஆனாலும் இப்படியெல்லாம் இமாலய பணிகளை புரிந்த பின்பும் அவர் கூறுவது 'நானும் சாதாரண போராளியே. நானும் உங்களைப் போன்றவனே. நான் எனது கடமையை சீராக முடித்தவனாக இருந்தால் ஒன்று இந்த மக்களுக்காக வீரச்சாவடைந்து மாவீரனாக இருக்க வேண்டும். அல்லது தமிழீழத்தை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்" என்று. அவர் வீணாக எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை. தமிழ் மக்களுக்கு எவர் இன்னல் விளைவிக்கின்றனரோ அவர்கள் மீதே உரிய நடவடிக்கைகளை எடுப்பவர். அவர் கூறுவார் 'அவலத்தை தந்தவ னுக்கே அவலத்தை திருப்பிக்கொடு" என்று. அவரின் இதயத்து உணர்வுகள் எப்படி எல்லாம் இருக்கும்? அதை எப்படி உரைப்பது? இன்று சாவுக்கு தேதி குறித்து உடலில் வெடிகுண்டு சுமந்து தமிழ் மக்களின் வாழ்வுக்காக உடலை வெடிக்க வைத்து தம்மை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு கரும்புலி வீரர்களும் கூறுவது 'நான் தலைவரை நம்பியே கரும்புலியாகப்போகிறேன். அவர் நிச்சயமாக தமிழருக்கு விடுதலையை பெற்றுக் கொடுப்பார்" என்று. அதுபோல இன்று மாவீரர்களான ஒவ்வொருவரும் தலைவரை நம்பியே இயக்கத்தில் இணைந்து அவன் காட்டிய வழிசென்று இனத்திற்காக வீழ்ந்தவர்கள். ஒன்றாக கூடி இருந்து ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக சண்டை புரிந்த அந்த வேங்கைகள் களத்தில் வீழ்கிறபோதும் அவர்கள் இந்த விடுதலைக்காக பட்ட கஷ்டங்கள் துன்பங்களை எண்ணும் போதும் தலைவனின் உளம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடியாது. அதைத் தாங்குவதே பெரிய சுமைதான். அதற்கு மத்தியில் அந்த வீரர்களின் கனவுகளை நனவாக்க உறுதியோடு துணிகரமாக தலைவர் போராட்டத்தை நெறிப்படுத்துகிறார். இனத்திற்காக வெடிக்கப் போகும் கரும்புலிகள் தன்னோடு உணவருந்தி புகைப்படம் எடுக்கும் போது தலைவன் உணர்வுகள்? உலகில் இப்படி எங்குதான் நடந்தது.? இதுவரை புறநானு}ற்றுக்கால வீரத்தையும், தியாகத்தையும் படித்த எமக்கு, தலைவர் பிரபாகரனின் காலம் அதைவிட ஆழமான எத்தனையோ நானு}றுகளை விதைத்து விட்டதே. முருகன் சூரனையும், பிள்ளையார், கயமுகாசுரனையும், சக்தி மகிடாசுரனையும், திருமால் நரகாசுரனையும் அழித்து உலகில் தர்மத்தை காத்ததாக வரலாற்றை படித்தோம். ஆனால் இன்று சிலவற்றை நேரே பார்க்கிறோம். இயேசுநாதர் கூட ஆலயத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஒருவனை அடித்தாராம். ஆனால் இங்கு ஆலயத்தை உடைத்து அதற்குள் வைத்தே பத்தாக, நு}றாக பாலகர் முதல் வயது வந்தவர் வரை தமிழரை கொன்று இரத்தம் குடித்த வருக்கு பதிலடி கொடுப்பதையே பிரபாகரன் செய்தார். இப்படியான கொடூரமானவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களை துரோகிகள் என கூறாமல் மாமனிதர்கள் என்றா அழைப்பது? இன்று தமிழீழத்தில் பெண்களின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் தலைவர் பிரபாகரன் ஆற்றிய பணி உலகில் தனித்துவமானது. தற்போதைய உலகில் தமிழீழத்தில் பெண்கள் அதன் முப்படைகளிலும் உள்ளதோடு களமுனைகளில் இராணுவத்தள பதிகளாய் உள்ளனர். இதைவிட பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், நிதி நீதி நிர்வாகம் இப்படியான அனைத்து விடயங்களிலும் பெண்கள் பலவற்றை தலைமையேற்று செய்கின்றார்கள். மணக்கொடை(சீதனம்) தடைச்சட்டமும் தமிழீழத்தில் உண்டு. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை விடவும் புரட்சிப்பெண்களாக இங்கு பெண்கள் நிமிர்ந்ததற்கு தலைவரின் நெறியே முதன்மை வகிக்கிறது. திரைப்படங்களிலும், கதைகளிலும் கற்பனைக் கதாநாயகர்களையே பார்த்த எமக்கு கண்முன் ஒரு கதாநாயகன் கிடைத்தான். இவன் உலகத் தமிழருக்கு நாயகன். உண்மை நாயகன். உலக நாயகன் பிரபாகரன். நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (14.11.04) - hari - 11-26-2004 <img src='http://www.tamilnatham.com/tamilnaatham20041126/naatham20041126/leader20041126.jpg' border='0' alt='user posted image'> நன்றி தமிழ்நாதம் - hari - 11-26-2004 கருத்துக்கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழரின் இந்த பொன் நாளில் கருத்துக்களத்தில் உள்ள நச்சு பாம்புகள் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதுகள், கள உறுப்பினர்கள் கவனமாக சிந்தித்து செயற்படுங்கள், மோகன் அண்ணா நீங்களும் இந்த காலப்பகுதில் கூடிய கவனத்துடன் செயற்படுங்கள்! - vasisutha - 11-26-2004 [b]<span style='font-size:14pt;line-height:100%'>தமிழீழத்தேசியத்தலைவர்அவர்களுக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்</span> - hari - 11-26-2004 <b>தேசவிரோதிகளுக்கு பொருத்தமான கவிதை ஒன்று!</b> விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய் எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய் நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய் மன்னித்துவிடு தந்தையே நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்றி :தென்செய்தி.கொம் - Suji - 11-26-2004 உன்னால்தான் நாம் தலை நிமிர்ந்தோம். உன்னால் நாம் முகவரி பெறுவோம் அடுத்த உமதுபிறந்தநாள் தமிழீழத்தில் நடைபெறவேண்டுமென்ற என் ஆவல் நீங்கும் தலைவா... தம்பி ஹரி அசத்துகிறாய் - tamilini - 11-26-2004 Quote:கருத்துக்கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இனி கருத்துக்களத்திற்கு வாறவைக்கு ஒரு ஸ்மோல் ரொஸ்ட் வைக்கனும் அதில சித்தி பெறுறவையை தான் உள்ளே எடுக்கணும்.. யார் யார் எப்படி பட்டவர்கள் என்று புரிய மாட்டேங்குது...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 11-26-2004 [quote=tamilini][quote]கருத்துக்கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழரின் இந்த பொன் நாளில் கருத்துக்களத்தில் உள்ள நச்சு பாம்புகள் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதுகள், கள உறுப்பினர்கள் கவனமாக சிந்தித்து செயற்படுங்கள், மோகன் அண்ணா நீங்களும் இந்த காலப்பகுதில் கூடிய கவனத்துடன் செயற்படுங்கள்..![/quote] இனி கருத்துக்களத்திற்கு வாறவைக்கு ஒரு ஸ்மோல் ரொஸ்ட் வைக்கனும் அதில சித்தி பெறுறவையை தான் உள்ளே எடுக்கணும்.. யார் யார் எப்படி பட்டவர்கள் என்று புரிய மாட்டேங்குது...?? இப்படித்தான் உளவாளிகள் எழுதுவாங்களாம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-26-2004 Quote:இப்படித்தான் உளவாளிகள் எழுதுவாங்களாம்....! எஸ்கியு}ஸ் மீ உளவு என்றால் என்ன..?? :oops: - kuruvikal - 11-26-2004 tamilini Wrote:Quote:இப்படித்தான் உளவாளிகள் எழுதுவாங்களாம்....! இப்படி அப்பாவிகள் போலவும் காட்டிக்குவாங்களாம்... உளவாளிகள்... ஜாக்கிரதை...! :wink: Hari...உங்கள் எச்சரிக்கை எங்கள் கழுகுக் கண்களை திறக்க வைத்திருக்கின்றன...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 11-26-2004 Quote:இப்படி அப்பாவிகள் போலவும் காட்டிக்குவாங்களாம்... உளவாளிகள்... ஜாக்கிரதை...! என்ன குருவியாரே உங்கள் கழுகு கண்கள் அப்பாவிகள் பக்கமா திறந்திருக்கு ?? :oops: - kuruvikal - 11-26-2004 tamilini Wrote:Quote:இப்படி அப்பாவிகள் போலவும் காட்டிக்குவாங்களாம்... உளவாளிகள்... ஜாக்கிரதை...! தப்பு... அப்பாவிகள் போல இருக்கும் உளவாளிகள் பக்கம்...! உண்மையான உளவாளி... புலி போலவே இருப்பான்... ஏன் புலியாகவும் இருப்பான்...ஆனா உள்ளம் மட்டும் உளவு பார்க்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கட குறுக்குக் கேள்விகளப் பாத்தா...குருவிகளின் கழுகுக் கண் சரியாத்தான் பாக்குது போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- thaiman.ch - 11-26-2004 குருவிகள் நீா் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீரா? அன்டைக்கு விட்ட வசனங்களுக்கு இவ்வளவுக்கும் கரும்புலியா போயிருப்பியள் என்டு நினச்சன். - kuruvikal - 11-26-2004 ஓ.... குருவிகள் கரும்புலியாக நீங்கள் கடைப்புலியா ஊர் சுத்த கணக்குப் பாக்கிறியள் போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உளவாளிகள் இப்படியும் இருப்பினம்...விசுவாசம் போல காட்டி விசம் பாச்சுவினம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- thaiman.ch - 11-26-2004 ம்ம்ம் எல்லாம் வாய்ப்பேச்சு வீரா்கள்! நாங்க சொன்னமா போராட வாறம் என்டு? சும்மா நீங்களா கற்பனை பண்ணிகிட்டு இருக்காதீங்க. வயசு போன புத்தியும் குறஞ்சா போகும்? தமிழீழம் பகல் கனவு என்டு சொன்னதுவள் எல்லாம் இப்ப விசுவாசத்தைப் பற்றி எனக்கு சொல்லுதுவள். காலமடா சாமி..... - kuruvikal - 11-26-2004 thaiman.ch Wrote:ம்ம்ம் எல்லாம் வாய்ப்பேச்சு வீரா்கள்! நாங்க சொன்னமா போராட வாறம் என்டு? சும்மா நீங்களா கற்பனை பண்ணிகிட்டு இருக்காதீங்க. வயசு போன புத்தியும் குறஞ்சா போகும்? ஓ... நீங்க போராடாம கடதாசியில தமிழீழம் வாங்கிற ஆக்கள் போல...உங்கட கருத்துகள் தான் இப்ப இங்க அவசியம்... வாங்கோ வந்து வையுங்கோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ----------------------------------------- அர்ப்பணிப்புடன் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்! : கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பல அர்ப்பணிப்புக்களோடு விதைக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவுகளை நாம் நனவாக்க வேண்டும் சண்டைக் களங்களில் எம்மை வெல்ல முடியாதவர்கள் சமாதான காலத்தில் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டு எமது போராளி களின் உயிர்களைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு திருக்கோயில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் இலக்கியன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், எமது உரிமையைப் பெற வேண்டுமானால் நாம் போராடித்தான் ஆக வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் சந்திரிகா அம்மையார் எமக்கு எதையும் வழங்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வல்வெட்டித்துறையில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை சிங்களப் படைகள் சுட வேண்டுமா இது மிகவும் பாரியதொரு யுத்த நிறுத்த மீறலாகும் என்றார். இந்நிகழ்வில் உடும்பன் குளகோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் நிலாகரன், அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தாரகா, அம்பாறை மாவட்ட மாவீரர் காப்பகப் பொறுப்பாளர் பத்மன், வீரமுனைப் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆதிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அ. சந்திரநேரு ஆகியோர் கலந்து கொண்டனர். -------------------------------------------- புதினம் தந்தது... ஒன்றும் செய்ய வேணாம் தினமும் புதினம் வாசிங்கோ கொஞ்சம் என்றாலும் நிகழ்காலம் விளங்கும்...அதுக்குப் பிறகு களத்தில எழுதலாம்...! - tamilini - 11-26-2004 kuruvikal Wrote:tamilini Wrote:Quote:இப்படி அப்பாவிகள் போலவும் காட்டிக்குவாங்களாம்... உளவாளிகள்... ஜாக்கிரதை...! அப்படியா...?? சரி யாருக்கு உளவு பாக்கிறம் என்று சரியாச்சொல்லீட்டால்.. நீங்கள் உண்மையான உளவாளி தான்.. எங்க சொல்லுங்கோ பாப்பம்...?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- thaiman.ch - 11-26-2004 குருவியள் கருணாவுக்கு உளவு பாக்கினம் போல இருக்கு. நாங்க பேப்பா்ல என்டாலும் தமிழீழம் இருக்கு என்டு நினைக்கிறம். ஆனா உங்களை மாதிரி ஆக்கள் அதை பகல் கனவு என்டு சொல்றாங்க. இதை எங்க போய் சொல்லுறது? குருவியளின்ற சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆச்சு!!! - thaiman.ch - 11-26-2004 ஆமா குருவிகளே யாருடைய கனவை நீங்கள் நினைவாக்க விரும்புகிறீா்கள்? நீங்கள் தான் தமிழீழம் பகல் கனவு என்று சொன்னவராச்சே!! - kuruvikal - 11-26-2004 tamilini Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:Quote:இப்படி அப்பாவிகள் போலவும் காட்டிக்குவாங்களாம்... உளவாளிகள்... ஜாக்கிரதை...! நீங்கதான் அதில முதன்மையானவர்...போதுமா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|