11-23-2004, 11:00 PM
tamilini Wrote:தெய்வங்கள் நீங்கள்
தியாகங்கள் நீங்கள்
செம்மல்கள் நீங்கள்
தேசிய வீரர்கள் நீங்கள்
எமக்காய் உயிர் கொடுத்தவர்கள் நீங்கள்
உயிரை உறவை துறந்து
உங்கள் உறுதியில் குறியாய் நின்று
பகைவன் குகை புகுந்து
கதை முடித்தீர்..
பல அரசுகள் கூர்ந்து கவனிக்கும்
நிலை படைத்தீர்
தமிழன் எண்ணும் சொல்லுக்கு
பொருள் படைத்தீர் --
தியாகம் செய்தது நீங்கள்
உங்கள் பெயரில் குளிர்
காய்வதா நாங்கள்..??
இன்னல் பல கண்டிருக்கலாம்
மண்ணில் பற்றிருக்கலாம்
உயிருக்காய் போராடியிருக்கலாம்
எப்படியிருந்தாலும்
சொந்த மண் துன்பத்தில்
இருத்தல் கண்டும்
உயிரை சுமந்து
ஊர் மாறிய நாம்
எம் மண் என்று கூற
உங்கள் நாமம் உச்சரிக்க
எமக்கென்ன அருகதை
சிந்திக்க முடியவில்லை
உணர்வுகள் ஒன்றாய் இருக்கலாம்
உண்மைகள் உறைக்கிறது எங்கோ...??
நீங்கள் ஆயுதம் தூக்கிட
கைகளில் நாம் புத்தகம் தூக்கினோம்
வயது அதுவென்று நினைத்தேன்
ஆயுதம் தூக்கும் வயதில்
அகதியானோம்
அவமானமாய் இருக்கிறது இன்று
நாளைய சந்ததி நம்மை கேள்வி கேட்கும்...
நீங்கள் செய்தது என்னவென்று
சொல்ல முடியாது எம் தலை
குனியும் அப்போது...!
கவலைப்படாதேங்க தமிழினி.. நாளை உங்கள் பிள்ளையை தமிழீழ இராணுவ வீரனோ வீராங்கனையாகவோ மாற்ற மாட்டியளா என்ன...!!!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

