11-23-2004, 01:44 PM
Sriramanan Wrote:செல்வசந்நிதியிலிருந்து முருகனின் வேல் கதிர்காமம் போவதையும் அறிந்திருக்கிறம்.
ஆயிரம் மனைவிகளை வைச்சிருந்த கண்ணன் கதையும் அறிந்திருக்கிறம்.
2 மனைவி வைச்சிருக்கிற முருகன் கதையும் திருமணம் செய்யாமல் இரண்டு வப்பாட்டி வைச்சிருக்கிற யானைத் தலையன் பிள்ளையாரின் கதையும் அறிஞ்சிருக்கிறம்.
ஆபத்தில்போய் சிவனின் காலில் வீழ்ந்து அவனின் வரம் பெற்று அவனின் தலையில் வாழும் பிறை(சந்திரன்) பற்றியும் அறிந்திருக்கிறம்.
இராவணனுடன் போர் புரிய இராமனுடன் துணைக்குச் சென்ற குரங்குகள் கரடிகள் பற்றி அறிஞ்சிருக்கிறம்.
பூமியில் முதல் தோன்றிய உயிரினம் முதல் தற்கால மனிதர்கள் வரை வழிபட்டுவரும் சைவசமயம் பற்றி அறிந்திருக்கிறம். மன்னிக்கவும் சைவம் கல்தோன்றி மண் தோன்றாக கலத்துக்கு முன் தோன்றியதல்லவா?
இதைவிட நிறைய அறிந்திருக்கிறம். இன்னும் வேணும் எண்டா எழுதிறம்.
செல்வச்சந்நிதி வேல் கதிர்காமம் போவதில் ஆச்சரியமில்லை... இரண்டு கோவில்களுக்கும் இடையே பக்தர்கள் போய் வருகிறார்களே...அப்ப எடுத்துப் போவார்கள்...!
கண்ணன் கடவுளாக சித்தரிக்கப்பட்டு அவருக்கு ஆயிரம் மனைவிகள் என்பது கதை... ஆக பெண்கள் நினைத்தால் கூட கடவுளின் வரத்தைப் பெறலாம்... அவர்கள் கடவுளால் தீண்டப்படாத பிறவிகள் அல்ல என்பதைச் சொல்ல....! ஒரு காலத்தில் பெண்கள் கடவுளை (ஞான நிலையை - சக்தியின் ஒரு நிலையை) அடைய முடியாத பிறவிகள் என்ற சமூகக் கோட்பாடு இருந்தது அதைத் தகர்க்க இப்படி ஒரு கதை புனையப்பட்டிருக்கலாம்...!
முருகனுக்கு இரு மனைவிகள் என்று பார்ப்பது தவறு... பெண்கள் சக்தியின் வடிவங்கள்... உண்மைதானே உடலும் தந்து இயங்க உயிரும் தருவது யார் பெண்கள் தானே... முருகனை இயக்க இரண்டு சக்திகள்... அதேபோல் தான் விநாயகரை ஞானத்தின் முதல்வனை இயக்க இரண்டு சக்திகள்... சித்தி மற்றும் புத்தி... (சித்தி - செல்வம் (பணமல்ல அனைத்து வகை செல்வங்களும்) புத்தி...அறிவு)
இன்று நாய்கள் கண்ணி வெடி அகற்ற முடியுது இன்னும் எத்தனையோ பணிகள் ஆற்ற முடியுதென்றால் அன்று குரங்குகள் ஏன் மனிதருக்காக போரிட பயிற்சி அழிக்கப்பட்டிருக்க முடியாது...ஒருவேளை சூழல் மாற்றங்களால் அந்த வகைக் குரங்குகள் அழிந்திருக்கவும் கூடும்...!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடிகளும் மொழியும் என்று சொல்வது சைவத்தையோ இல்ல இந்து மதத்தத்தையோ அல்ல தமிழையும் தமிழர்களையும்...!
அகிலத்தின் தோற்றமே விளங்கமுடியாப் புதிர்...அதை மனித சிந்தனை அவிழ்க்குமா... மனிதன் கற்றதே கைமண் அளவு கல்லாதது முடிவிலி அளவு.... சிவபெருமாந்தான் ஒருவேளை முடிவிலியின் முடிவோ.... உங்களிடம் ஒரு கேள்வி சூரியன் சந்திரன் பூமி...இவை இல்லையோ பிறை கண்ணுக்குத் தெரியாது...ஏன் இன்னும் இன்னொரு சந்திரன் தோன்றவில்லை.....???!
பிரபஞ்சத்தின் வயதோடு ஒப்பிடும் போது மனிதனின் தோற்றமும் அழிவும் சில மைக்கிரோ வினாடிகள் போன்றதாகவே இருக்க முடியும்... அதற்குள் எத்தனை ஆட்டங்கள் போடப் போறான் மனிதன்....அதற்குள் எங்கள் ஆயுள்.... மிக மிக மிக மிக மிக மிகச் சிறிய காலம்...அதற்குள் எல்லாம் அறிவதென்பது....சாத்தியமல்ல... சாத்தியமானதை அறிவதே மனிதனின் தேடல்...காரணம் அவன் பகுத்தறிவாளனாக இருப்பதால்...!
சிறீரமணன் அப்படி எழுத எங்களுக்கு இப்படித்தான் பதில்கள் வந்தன..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

