11-23-2004, 11:09 AM
எல்லா நன்மைகளும் பெற்றிட தெய்வ வழிபாடு தெய்வ அன்பு முதலியவைகளைப் பயன்கருதிச்செய்வது உயர்ந்த இலட்சியமாகாது. செல்வ வசதிக்காகவும் பதவிக்காகவும் உத்தியோகத்திற்காகவும் சந்ததிக்காகவும் நோய்தீர்வதற்காகவும் இப்படிப்பலர் பலவகையான பயன்களைக் கருதிக் கோவிலுக்குப் போய் வழிபடுகின்றார்கள். எந்த எந்தப் பயனை நினைக்கின்றார்களோ அந்த அந்த பயனை இறைவனும் அவர்களுக்குத் தருகின்றான். ஆனால் அந்தப்பயனுடன் அது நின்று விடுகிறது. இறைவன் திருவருளை வேண்டி வழிபட்டால் அந்தத் திருவருளால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைந்து இனிமேல் பிறவாத நலமும் உண்டாகும்.
கோயிலுக்குள்ள சிறப்பு
மற்ற இடங்களில் இறைவனை நினைத்து தியானிப்பதாலும் துதிப்பதாலும் வழிபடுவதாலும் வினைகள் வெதும்புகின்றன. கோவிலில் இறைவனை வழிபட்டால் வினைகள் வினைகள் வெந்து எரிந்து கரிந்து நீராகிவிடுகின்றன. கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால் அந்தத்துணி வெதும்புமே தவிர சாம்பலாகாது. சூரிய காந்தக்கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழ்வரும் மற்றொரு வெயிலில்(ஒளியில்) துணியை வைத்த உடனே அது சாம்பலாகி விடுகிறது. நேர்வெயிலுக்கு இல்லாத ஆற்றல் சூரிய காந்தக்கண்ணாnயின் கீழ்வருகின்ற வெயிலுக்கு உண்டு. பரந்து விரிந்து இருக்கின்ற சூரியனுடைய வெப்பத்தை ஒன்றுபடுத்தி தன்கீழே சூரியகாந்தக்கல் பாய்ச்சுகிறது. பிறஇடங்களில் இறைவனை வழிபடுவது வெயிலில் வேட்டியை வைப்பது போலாகும். திருக்கோவிலில் இறைவனை வழிபடுவது சூரியகாந்தக்கண்ணாடியின் கீழ் வேட்டியை வைப்பது போலாகும்.
வாரியார்

----------