11-21-2004, 08:25 AM
ஊமை Wrote:ஜூட் சொல்லுறேன் என்று குறை நினைக்காமல் ஒருக்கா The Passion of christ என்ற படத்தை தவறாமல் பாருங்கள் ஜேசுநாதரின் வரறலாறு அங்கே சொல்லப் படுகிறது. நீங்அள் சொன்ன மாதிரி அங்கு சொல்லபடவில்லையே ?
இல்லை, சொல்லப்படவில்லை. காரணம், அந்த படத்தை எடுத்த மெல் கிப்சன் ஒரு குறிப்பிட்ட அடிப்படைவாத கிறிஸ்தவ சமயத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவ÷. அந்த சமயத்தின் பாதிரியா÷ ஒருவரின் வழிகாட்டலிலேயே அந்த கதையை அமைத்திருந்தா÷. கத்தோலிக்கரும் யூதரும் இந்த படத்துக்கு கடும் எதி÷ப்பு தெரிவித்திருந்தன÷.
Last Temptation of Jesus Christ என்ற படத்தை நீங்கள் பா÷க்கவில்லையா? இந்த கதைக்கும் கடும் எதி÷ப்பு இருந்தது.
சினிமா படம் எடுப்பவ÷கள் கதை உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதும் இல்லை, அக்கறை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சினிமா மக்களை கவ÷ந்து, அதனால் பணம் பெருக வேண்டும் என்ற நோக்கிலேயே சினிமா படங்களும் அவற்றின் கதைகளும் அமைந்திருக்கின்றன.
இதற்கு மாறாக, விஞ்ஞான ஆராய்ச்சிகள் உண்மையை அறிந்து உலகுக்கு தெரியப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை. இங்கே கண்டுபிடிப்புகள் உண்மை என்பதற்கு ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும். மற்ற விஞ்ஞானிகள், மண்டபம் நிறைய இருக்கும் விஞ்ஞானிகள் முன்னால் கேள்வி கேட்பா÷கள். தவறான கண்டுபிடிப்பாக இருந்தால் மானம் போய்விடும். புதிய ஆராயச்சிகளுக்கும். பல சந்த÷ப்பங்களில் சம்பளத்துக்கும் கூட நிதி கிடைக்காமல் போய்விடும். ஆகவே விஞ்ஞானிகள் தீர ஆராய்ந்து தான் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டும். நான் எழுதிய கிறிஸ்துவின் வரலாறு இவ்வாறாக பல விஞ்ஞானிகளால் அண்மையில் வெளியிடப்பட்டதகவல்களில் இருந்து பெறப்பட்டதை, இணைப்புகளை தொட÷ந்து செல்லும் போது நீங்களும் காணமுடியும்.
ஊமை Wrote:ஜூட்
நான் ஏதோ தவறாக எழுதியதாக குறிப்பிடு இருக்கிறீர்கள் என்ன அது ?
ஊமை
கிழே தொட÷ந்து படிக்கவில்லையா? படியுங்கள், புரியும்.

