07-29-2003, 02:09 PM
19ம் நூற்றாண்டுகாலப் பகுதியில் இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆட்சியாளர்களால், மலையக தோட்டத்தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இத்தகைய தமிழர்கள் கிட்டத்தட்ட இலங்கை மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 5 வீதமானவர்கள் என்று முன்னைய கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பல வருடங்களாக எதுவித குடியுரிமை அந்தஸ்தும் இல்லாது வாழ்ந்த இந்த இந்தியத் தமிழர்களும் இவர்களது இலங்கையில் பிறந்த வம்சாவளித் தமிழர்களும் தங்கள் குடியுரிமைக்காக நீண்டகாலம் குரல் கொடுத்து வந்தனர்.
இத்தகைய மலையகத் தமிழர்களில் ஒரு இலட்சத்து அறுபத்தெட்டாயிரம் மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 1964ம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கையில் பிறந்த 84,000 பேருக்கும், 1983ம் ஆண்டுக்குப் பின்னர், இந்தியாவுக்குத் திரும்ப முடியாமற்போன 84,000 பேருக்கும் இத்தகைய குடியுரிமை அந்தஸ்தை வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இதனடிப்படையில் மொத்தம் 168,141 வம்சாவளி இந்தியத் தமிழர்கள், இலங்கைக் குடியுரிமை பெறுவார்களென்றும் அதற்கான உத்தியோகபுூர்வ சட்டமூலம் ஆவணிமாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளாh