07-29-2003, 01:58 PM
சமையலறையிலிருந்த ~சிலிண்டரில் காஸ்| கசிந்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்க முயற்சித்த அவரது கணவரின் இரு கைகளிலும் எரிகாயங்கள் ஏற்பட்டன.யாழ்ப்பாணம், நீராவியடி கடையிற் சுவாமி வீதியி லுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு குழந்தைக்குத் தாயான நீருஜா(வயது 18)என்பவரே பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி நேற்று யாழ். மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது கணவரான க.வசீகரன்(வயது 22) கைகளி லேற்பட்ட தீக்காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.சமயலறையிலிருந்த ~காஸ் சிலிண்டரில்| கசிவு ஏற்பட்டு ~காஸ்| வெளியேறி அந்த அறையைச் சூழ்ந்திருந்ததாக வும், இதனை உணராத நீருஜா அடுப்பை பற்றவைக்க தீக்குச்சியை உரசியதும் அறையில் நிறைந்திருந்த ~காஸ்| தீப்பிடித்துக்கொண்டதாகவும் அதில் நீருஜா சிக்கி கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் - உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
தீயில் சிக்கிய மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது கணவர் தீயை அணைக்க முயன்றபோது, அவரது கைகளிலும் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.பலத்த எரிகாயங்களுக்கு உள் ளான நீருஜா உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச் சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சை பயனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.