11-20-2004, 05:49 AM
Meera Wrote:கடவுள் இல்லை என்று வாதிடுவோரே....தேவாலயம் வந்தற்காக பின்பக்கம் திரும்பும் அவர் இருந்த இடத்திலிருந்து வெறும் இருநூறு மீட்டர் தூரத்திலுள்ள வியாபர நிலையம் மீது எறிகணை வீழ்ந்து வெடித்து மக்கள் சிலர் உடல் சிதறிப் பலியானவேளை எங்கோ போனார்??
மானிப்ாய் மருதடி விநாயக÷ ஆலயத்தில் இடம் பெற்றதை நீங்கள் அறியவில்லையா?
இந்த ஆலயத்திற்கு எதி÷ பக்கமாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டதால் மூல விக்கிரகம் மேற்கு பக்கமாக திரும்பியதை அறியவில்லையா?
அல்லது யேசு பிரான் உயி÷த்தெழுந்ததை அறியவில்லையா?
முன்னே தேவாலயத்தைப் பார்க்காமல் மறுக்கம் திருப்பிய பிள்ளையாருக்கு திரும்பியதிலிருந்து முன்னால் என்ன இருக்கிறது எண்டு தெரியுமா உங்களுக்கு? நாள் தோறும் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்களை எரிக்கும் மயானம் "பிப்பிலிச் சுடலை". மருதடிப் பிள்ளையார் பிணங்கள் சரியாக எரிகின்றனவா எண்டு கண்காணிக்கத் திரும்பினாரோ தெரியாது.
தேவாலயத்தைப் பார்ப்பதிலும் பார்க்க பிணங்கள் எரிவதைப் பார்த்து ரசிக்க பிள்ளையார் விரும்புகிறார். வாழ்க் பிள்ளையார்! இவரைப் போன்ற கடவுள்கள் வாழ்க!
மீரா தொடர்ந்து அந்த யானைத் தலையனைக் கும்பிடுங்கள் விகாரையோ அல்லது பள்ளி வாசலோ அவருக்கு முன்னால் கட்டினால் உடனே திரும்புவார். ஆனால் அவருக்கு அவருக்கு அருகில் அவரின் பக்தர்கள் செத்து மடிந்தால் கண்ணை மூடுவார்.
இதை எழுதும் போது இந்த கோயிலில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 1993-1995 ஆண்டுக்கிடையில் திருடர்கள் இந்தக் கோயிலுக்குள் இருந்த பெருந்தொகைப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். அப்போது இந்தப் பிள்ளையார் என்ன செய்தார். உனது வாழ்விடத்திலேயே திருட்டை ஊக்குவிக்கும் பிள்ளையாரே நீ வாழ்க!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

