11-20-2004, 01:10 AM
கார்த்திகை இருபத்தியேழு கார்த்திகை இருபத்தியேழு
காலத்தை வென்றவரின் கார்த்திகையிருபத்தியேழு
காத்திருந்துதொழு காத்திருந்து தொழு காவல்தெய்வங்களின்
கார்த்திகையிருபத்தேழைக் கைகூப்பித்தொழு
வீரம் செறிந்த மண்ணிலே
வீழ்ந்த நல்ல விதைகளே
வீழ்ந்து விருட்சம் ஆகியே
வீசும் காற்றில் கலந்தீரே
சாவை சவாலிற்கழைத்து
சாவிற்கே மணியடித்து
சாதனை சமைத்த சோதியே
சாந்தமான சண்ட மாருதியே
நட்ட நடு நிசியிலும்
நடுக்காட்டின் பிடியிலும்
நதியோடைகளின் கரையிலும்
நம்நாடு முழுவதும்
எங்களைக்காக்கவென்று
எதிரிபடைகளைவென்று
எமக்காக உனைக்கொன்ற
எம்காவல்தெய்வங்களே
மாவீரா நீ மரணம் வென்றாய்
மாவீரா நீ மறுசனனம் கண்டாய்
சாகாத வரம் பெற்ற சாதகனே
சரணடைகின்றோம் உந்தன் பாதத்திலே.
தளத்தில் உள்ள இனிய நல்ல தமிழ் நெஞ்சங்களுடன் சேர்ந்து எனது கவிதைக்காணிக்கை.
அன்புடன்
Jaya
காலத்தை வென்றவரின் கார்த்திகையிருபத்தியேழு
காத்திருந்துதொழு காத்திருந்து தொழு காவல்தெய்வங்களின்
கார்த்திகையிருபத்தேழைக் கைகூப்பித்தொழு
வீரம் செறிந்த மண்ணிலே
வீழ்ந்த நல்ல விதைகளே
வீழ்ந்து விருட்சம் ஆகியே
வீசும் காற்றில் கலந்தீரே
சாவை சவாலிற்கழைத்து
சாவிற்கே மணியடித்து
சாதனை சமைத்த சோதியே
சாந்தமான சண்ட மாருதியே
நட்ட நடு நிசியிலும்
நடுக்காட்டின் பிடியிலும்
நதியோடைகளின் கரையிலும்
நம்நாடு முழுவதும்
எங்களைக்காக்கவென்று
எதிரிபடைகளைவென்று
எமக்காக உனைக்கொன்ற
எம்காவல்தெய்வங்களே
மாவீரா நீ மரணம் வென்றாய்
மாவீரா நீ மறுசனனம் கண்டாய்
சாகாத வரம் பெற்ற சாதகனே
சரணடைகின்றோம் உந்தன் பாதத்திலே.
தளத்தில் உள்ள இனிய நல்ல தமிழ் நெஞ்சங்களுடன் சேர்ந்து எனது கவிதைக்காணிக்கை.
அன்புடன்
Jaya

