11-19-2004, 03:25 PM
வர வேண்டும்..
நீங்கள் மீண்டும்.
எம் மண்ணில் மைந்தர்களாய்..
ஈழம் விடிந்தபின் மீண்டும்..
விடுதலை என்னும்
வேள்வியிலே உயிர்களை
ஆகுதியாக்கிய உத்தமர்கள்..
மீண்டும் நம் மண்ணில் வரவேண்டும்..
குண்டுகள் ஏந்திய உடல்கள்...
புன்னகை சொரிந்திட
வாழ்வைத் தொலைத்திட்ட
நம் சந்ததி
வழியைக்கண்ட பின்
உங்களை இழந்திட்ட உறவுகள்...
உயிரோடு இருக்கையில்..
மீண்டும் நீங்கள் வரவேண்டும்..
இலட்சிய வேள்வியில்..
இன்னல்கள் பல கண்டும்..
ஈழத்திற்காய் விதையானீர்
முளையாகி மீண்டும் வரவேண்டும்..
இடிகளும் வெடிகளும் தாங்கி..
இன்னல்கள் சுமந்த ஈழத்தாய்..
பசுமையாய் இருக்கையில்...
பார்த்து ரசிக்க நீவீர் வரவேண்டும்..
பகைவன் என்னும் கொடியவன் வென்று
புலிக்கொடி வானில் பறந்திட
அதனை ஆராதனை செய்திட
மீண்டும் நீங்கள் இங்கே வரவேண்டும்..
துப்பாக்கிக்கு இரையாகிப்போன..
உங்கள் உடல்கள்
துள்ளி விளையாட வேண்டும்..
தூய்மையான ஈழ மண்ணில்.
தலைவனை ஒருவனாய் கொண்டு..
கொள்கைக்காய் உயிர் நீத்தவர்கள்..
தலைமுறை பல கண்டு
தமிழ் மண்ணில் வாழ
மீண்டும் வர வேண்டும்..
உரிமைக்காய் நீத்த
உங்கள் உயிர்கள்..
உரிமை பெற்ற உணர்வுடன்
மீண்டும் வர வேண்டும்..
ஈழம் மலர்ந்த பின்
மழலைகளாய் எம் மண்ணில்
வாழ்வாங்க வாழ
மீண்டும் ஒரு முறை
உங்களை எம் மண்
உரிமையுடன் தங்கிட
நீங்கள் தவழ்ந்திட வேண்டும்....!
www.tamilini.blogspot.com
நீங்கள் மீண்டும்.
எம் மண்ணில் மைந்தர்களாய்..
ஈழம் விடிந்தபின் மீண்டும்..
விடுதலை என்னும்
வேள்வியிலே உயிர்களை
ஆகுதியாக்கிய உத்தமர்கள்..
மீண்டும் நம் மண்ணில் வரவேண்டும்..
குண்டுகள் ஏந்திய உடல்கள்...
புன்னகை சொரிந்திட
வாழ்வைத் தொலைத்திட்ட
நம் சந்ததி
வழியைக்கண்ட பின்
உங்களை இழந்திட்ட உறவுகள்...
உயிரோடு இருக்கையில்..
மீண்டும் நீங்கள் வரவேண்டும்..
இலட்சிய வேள்வியில்..
இன்னல்கள் பல கண்டும்..
ஈழத்திற்காய் விதையானீர்
முளையாகி மீண்டும் வரவேண்டும்..
இடிகளும் வெடிகளும் தாங்கி..
இன்னல்கள் சுமந்த ஈழத்தாய்..
பசுமையாய் இருக்கையில்...
பார்த்து ரசிக்க நீவீர் வரவேண்டும்..
பகைவன் என்னும் கொடியவன் வென்று
புலிக்கொடி வானில் பறந்திட
அதனை ஆராதனை செய்திட
மீண்டும் நீங்கள் இங்கே வரவேண்டும்..
துப்பாக்கிக்கு இரையாகிப்போன..
உங்கள் உடல்கள்
துள்ளி விளையாட வேண்டும்..
தூய்மையான ஈழ மண்ணில்.
தலைவனை ஒருவனாய் கொண்டு..
கொள்கைக்காய் உயிர் நீத்தவர்கள்..
தலைமுறை பல கண்டு
தமிழ் மண்ணில் வாழ
மீண்டும் வர வேண்டும்..
உரிமைக்காய் நீத்த
உங்கள் உயிர்கள்..
உரிமை பெற்ற உணர்வுடன்
மீண்டும் வர வேண்டும்..
ஈழம் மலர்ந்த பின்
மழலைகளாய் எம் மண்ணில்
வாழ்வாங்க வாழ
மீண்டும் ஒரு முறை
உங்களை எம் மண்
உரிமையுடன் தங்கிட
நீங்கள் தவழ்ந்திட வேண்டும்....!
www.tamilini.blogspot.com
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

