11-19-2004, 11:30 AM
சியாம் கூறியது:
மதத்தை பற்றியும் அரசியல் பற்றியும் நான் விவாதிக்க விரும்புவதில்லை.காரணம் பலர் மனங்கள் புண்படும் எனவே ஒதுங்குகிறேன்.
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் விளைப மொழிவதாம் சொல்
என்பது வள்ளுவர் சொல் ஆகவே எப்படி எப்படி எவரிடம் எந்த விடயத்தைக் கூறவேண்டும் என்ற கலையை கூறுபவர் அறிந்திருந்தால் மனங்கள் புண்படுவதைக்குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்.
மனங்கள் புண்படும் என்று உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறாமல் மனதில் அவைகளைப்போட்டு மனதைப் பாரமாக்க வேண்டாம் பாண்டியா. மனதில் எழுபவைகளை பக்குவமாக வள்ளுவர் கூறியது போல கூற முனையுங்கள்.
மதம் என்பது சாதாரண மக்களிற்கு இன்றி அமையாததாக அமைகின்றது. காரணம் சாதாரண மக்கள் தங்களைநேரடியாக ப்பார்ப்பதில்லை. மறறயவர்களிற்கூடாகத்தான் தங்களைப்பார்க்கின்றார்கள்.
அதனால்த்தான் அவர்களிற்கு அவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிவதில்லை. என்று ஒரு மனிதன் மற்றயவர்கள் மேல் பதிந்திருக்கும் தனது பார்வையை தன்னை நோக்கி தனது உளத்தை நோக்கிப்பார்க்கின்றானோ அவனிற்கு கடவுள் என்றால் என்ன என்று புரிந்துவிடும். அப்பொழுதுதான் காயமே கோவிலாக என்ற சொற்களின் உண்மைப்பதம் புரியத்தொடங்கும்.
மீண்டும் தொடர்வேன்
அன்புடன் Jaya