![]() |
|
Kadavul!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: Kadavul!!! (/showthread.php?tid=6412) Pages:
1
2
|
Kadavul!!! - thaiman.ch - 11-17-2004 எல்லா கடவுள் பக்கதா்களிற்கும் வணக்கம். கடவுள் இருக்கா இல்லையா என்பதை அதற்காக நாம் செய்கிற முட்டாள் தனாமான விடயங்களை நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கின்றது. இன்று வெளிநாடுகளில் கோயில் என்பது ஒரு வியாபார மையமாக மாறிவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது. சென்ற வருடம் சுவிசில் சுரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் நிா்வாகத்தினா்க்கும் பூசாரிக்கும் நடைபெற்ற தகராறு கைகலப்பில் முடிவடைந்தது. இது அனைத்தும் கோயிலிற்குள் நடைபெற்றது. இவ÷களா உண்மையான மத பக்கதா்கள்? மதா, பிதா, குரு, தெய்வம் என்று எமது இந்து மதம் தானே வரிசைப்படுத்திக் காட்டுகிறது. மதா என்றால் எமது தாய். தாயும், தாய் நாடும் எனது பாா்வையில் ஒன்றே! முதலாவது இடத்தில் இருக்கும் தாயிற்கும், தாய் நாட்டிற்கும் பணி செய்வதில் எவா் இறைவனைக் காண்கிறாரோ அவரே உண்மையான மத பக்கதா். தெய்வம் என்பதை எமது இந்து மதம் நான்காவது இடத்தில் தானே வைத்துப்பாா்கிறது. இதற்கு முன் வரும் மதா, பிதா, குரு என்பனவற்றை நாங்கள் மறந்து விடுகிறோம். உலகயே காப்பவா் கடவுள் என்றால் ஏன் அந்த கடவுளை ஆலயங்களிற்குள் பூட்டி வைக்க வேண்டும்? திருட்டு போய்விடும் என்ற பயமா? உககையே காக்கின்ற கடவுளிற்கு தன்னை காக்க தெரியவில்லையா? தன்னையே காக்க முடியாத கடவுளா எங்களை காக்க போகிறாா்? சரி அப்படியே இந்த கடவுள் தான் எம்மை படைத்தவா் என்று பாா்த்தால் அவா் ஏன் எங்களிற்கு கை, கால், அறிவு என்று வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் தர வேண்டும்? நாங்களாக சிந்தித்து, எங்களுடைய வாழ்க்கையை நாங்களே அமைப்ததற்காக இருக்கலாம் அல்லவா? ஆனால் நாங்கள் என்ன பண்ணுகிறோம்? மறுபடியும் போய் கடவுளிடமே நிற்கிறோம். எமது மதம் மாமிசம் சாப்பிடுவதை கண்டிக்கிறது. அப்படியானால் சிவபெருமான் எதற்காக புலித்தோலை அணிந்திருக்கிறாா்? இந்துக்களின் தேவார புத்தகத்திலயே உள்ளது புலித்தோலை தசைக்கரைத்தவனே என்று. சிவபெருமான் மிருகங்களை கொல்லாமா? ஒரு ஆலய பூசகரிடம் போல் நீங்கள் இயேசுவையோ, அல்லாவையோ நம்புகிறீா்களா என்றால் அவா் இல்லை என்று தான் சொல்லுவாா். எமது மதம் வேறு எந்த மதமும் இருப்பதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவன் எந்த மதமுமே இல்லை என்று சொன்னால் அது தவறு? மதத்தால் மனிதா்கள் அடித்து கொண்டு சாகாத வரைக்கும் எம் மதமும் சம்மதமே! இன்று எங்கே மனிதா்கள் மதத்தால் அமைதியாக வாழ்கிறாா்கள்? வெளிநாட்டுகளில் இடம் வாங்கி கோயில்கள் அமைக்கும் அடி முட்டாள்களிற்கு என் அறிவிப்பு. நீங்கள் அமைக்கின்ற இந்த கோயில்களை உங்களிற்கு பிறகு தொடா்ந்து நடத்துவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல! நீங்கள் உண்மையிலயே எமது மதத்தை நேசித்தால் தாயகத்தில் இன்றும் எத்தனையோ ஆலயங்கள் போரினால் பாதிக்கப்பட்டு புனரமைக்க வேண்டியுள்ளது. அதை நீங்கள் செய்யுங்கள் நாங்களும் தோள் கொடுப்போம். பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே! - shiyam - 11-17-2004 நாட்டில் ஆலயங்கள் புனரமைக்கமுதல்அனாதையாய் அகதியாய் எத்தனை தமிழ் மக்கள் உள்ளனர்.மக்களே நீங்கள் இங்கும் நாட்டிலும் கோயிலுக்கு கொட்டும் பணத்தை அவர்களிற்கு உதவுங்கள்.(தர்மம் தலை காக்கும்) - thaiman.ch - 11-17-2004 கோயில்களின் வேலை எதுவோ அதை மட்டும் செய்ய விடுவமா?? அனாதைப்பிள்ளைகளை காக்க எமது நாட்டிலும் இங்கும் எத்தனையோ அமைப்புக்கள் இருக்கின்றன. அதை தங்களுடைய கடமைகளை நன்றாகவே செய்கின்றன. - shiyam - 11-17-2004 கோயில்களே அல்லது கோயிலில் இருக்கும் சாமிகளே எப்பவுமே எந்தவேலையுமே செய்ததில்லை அதை நடத்துபவர்கள்தான் அதன்பேரில் மக்களிடம் சுரண்டி தங்கள் சுய தேவைகளை செய்கின்றனர்.அங்கு உதவிசெய்ய இங்கு பல நிறுவனஙங்கள் உள்ளனதான்.அவை நன்றாகவும் வேலை செய்கின்றனதான்.ஆனாலும் அவை போதவில்லை.ஒரு கோயிலை புனரமைப்பதை விட ஒரு பாடசாலையை புனரமைக்கலாம் என்பதுஎனது கருத்து - MEERA - 11-17-2004 எல்லா கோயில்களையும் குறை சொல்ல முடியாது பாருங்கோ. - Sweta - 11-18-2004 Religions are there to guide human beings. But, we misuse everything, interpret everything in our own way to see our own benefits. Hinduism does not say that you build a temple with billions while billions of children are around the world without proper food, shelter and education. saving a life is more than the value of building a temple. "Ullam perunkoyil OOnudampalayam Vallat piranarkku vaai kopuravasal Thellath thelintharkku seevan sivalingam Kallappulanainthum Kaala mani vilakke" Please use your money in useful ways. Please help our homeland and people. Please help them to see at least a portion of what we have in these developed countries. Help them for their education. Not the education for certificates. Education for them to think, act and live. :evil: - paandiyan - 11-18-2004 Sweta Wrote:Religions are there to guide human beings. But, we misuse everything, interpret everything in our own way to see our own benefits. Hinduism does not say that you build a temple with billions while billions of children are around the world without proper food, shelter and education. அடடா இதையெல்லாம் தமிழில் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக இருக்குமே. ஏம்மா, த்மிழை விளங்கித்தானே பதிலெளுதிறயள் பிறகேன் இந்த ஆங்கிலப் பிரயோகம். இங்கு ஆங்கிலம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் எண்டாவது நீங்கள் நினைத்துப் பார்ப்பதில்லையா ??? ஏதோ நீங்களும் தமிழ்தான் என்று நம்புவோமாக. - shiyam - 11-18-2004 சுவேதா.
- MEERA - 11-18-2004 சகோதரி தயவு செய்து தமிழில் எழுதுங்கோ................... - tamilini - 11-18-2004 நல்ல கருத்தைச்சொலிலீயிருக்கா.... அக்கா தமிழிழ எழுதுங்கோ....??? ஏன் முடியாத இங்க திண்டுவிடுவினம் தமிழிழ எழுதாட்டால்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-18-2004 உண்மையில் இந்தத் தலைப்புக்குரிய இடம் இதுவல்ல... எனினும் பேசப்பட்ட விடயத்துடன் இவ்விடயமும் அமைவதால் இவ்விணைப்பு இங்கே தரப்படுகிறது... http://www.yarl.com/forum/viewtopic.php?p=...b951ac156#45234 - Jaya - 11-18-2004 சமூகத்தில் இறைவனிற்கு ஒரு அங்கம் இருக்கின்றது இதுபற்றி விவாதிப்பதை விட தனிமனிதர்கள் கிரகித்துப்புரிந்து கொள்வதே மேலானது. Jaya - MEERA - 11-18-2004 புரிந்து கொள்ள முடியாதவ÷களுக்கு புகட்ட வேண்டும்.. - Jaya - 11-19-2004 http://sooriyan.com/index.php?option=conte...=1020&Itemid=34 புதிய மதங்கள் தமிழரின் ஒற்றுமையைக்குலைப்பதை இக்கதையில் தெளிவாக காணமுடிகின்றது. அன்புடன் Jaya <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Jaya - 11-19-2004 மீரா கட்டாயம் உங்களின் வேண்டுகோளிற்கேற்ப மதம் பற்றி என்னால் முடிந்த சிறு விளக்கம் எழுதுவேன் விரைவில். அன்புடன் Jaya - Jaya - 11-19-2004 என்ன எல்லோரும் ஒரு சோகமா இருக்கிறீர்கள்? ஆளையாள் இடையிடையே கடிப்பதும் சுகாதாரமானது ஆனால் கடிக்கும் பொழுது வேட்டைப்பல்லு படாமல் வெட்டும் பற்களால் மட்டும் மெதுவாகக் கடியுங்கள். அன்புடன் Jaya - shiyam - 11-19-2004 மதத்தை பற்றியும் அரசியல் பற்றியும் நான் விவாதிக்க விரும்புவதில்லை.காரணம் பலர் மனங்கள் புண்படும் எனவே ஒதுங்குகிறேன் - paandiyan - 11-19-2004 Jaya Wrote:சமூகத்தில் இறைவனிற்கு ஒரு அங்கம் இருக்கின்றது இதுபற்றி விவாதிப்பதை விட தனிமனிதர்கள் கிரகித்துப்புரிந்து கொள்வதே மேலானது. ஜெயா 100% சரியாச் சொல்லியிருக்கிறியள். மீரா தெரிந்தவர்கள் யாராவது ஏதும் சொல்லப்போனால் அவர்களையும் நமது சமுதாயம் ஏதோ விசரனைபார்ப்பது மாதியே பார்க்கிறது. என்ன நான் சொல்வது சரிதானே. - Jaya - 11-19-2004 சியாம் கூறியது: மதத்தை பற்றியும் அரசியல் பற்றியும் நான் விவாதிக்க விரும்புவதில்லை.காரணம் பலர் மனங்கள் புண்படும் எனவே ஒதுங்குகிறேன். கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் விளைப மொழிவதாம் சொல் என்பது வள்ளுவர் சொல் ஆகவே எப்படி எப்படி எவரிடம் எந்த விடயத்தைக் கூறவேண்டும் என்ற கலையை கூறுபவர் அறிந்திருந்தால் மனங்கள் புண்படுவதைக்குறைக்கலாம் அல்லது தடுக்கலாம். மனங்கள் புண்படும் என்று உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறாமல் மனதில் அவைகளைப்போட்டு மனதைப் பாரமாக்க வேண்டாம் பாண்டியா. மனதில் எழுபவைகளை பக்குவமாக வள்ளுவர் கூறியது போல கூற முனையுங்கள். மதம் என்பது சாதாரண மக்களிற்கு இன்றி அமையாததாக அமைகின்றது. காரணம் சாதாரண மக்கள் தங்களைநேரடியாக ப்பார்ப்பதில்லை. மறறயவர்களிற்கூடாகத்தான் தங்களைப்பார்க்கின்றார்கள். அதனால்த்தான் அவர்களிற்கு அவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிவதில்லை. என்று ஒரு மனிதன் மற்றயவர்கள் மேல் பதிந்திருக்கும் தனது பார்வையை தன்னை நோக்கி தனது உளத்தை நோக்கிப்பார்க்கின்றானோ அவனிற்கு கடவுள் என்றால் என்ன என்று புரிந்துவிடும். அப்பொழுதுதான் காயமே கோவிலாக என்ற சொற்களின் உண்மைப்பதம் புரியத்தொடங்கும். மீண்டும் தொடர்வேன் அன்புடன் Jaya - shiyam - 11-19-2004 கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் விளைப மொழிவதாம் சொல் என்பது வள்ளுவர் சொல் ஆகவே எப்படி எப்படி எவரிடம் எந்த விடயத்தைக் கூறவேண்டும் என்ற கலையை கூறுபவர் அறிந்திருந்தால் மனங்கள் புண்படுவதைக்குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்... யெயா எனக்குஅப்படி பக்குவமாய் சொல்லதெரியாது.என் கருத்துக்கள கொஞ்சம் காட்டமாய் இருக்கும்.ஏற்கனவேபல நணபர்களை இப்படியான விவாதங்களால் மன சங்கடங்களிற்கு ஆளாக்கியிருக்கினே;. எனவே ஒதுங்குவது நல்லதல்லவா?? |