11-18-2004, 06:34 PM
<img src='http://thatstamil.com/images25/rajini-jaya2-500.jpg' border='0' alt='user posted image'>
தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. பட்டு வேட்டி, சட்டையில் தனுசும் பட்டுச் சேலையில் ஐஸ்வர்யாவும் தகதகத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க 10.50 மணிக்கு தனுஷ் தாலி கட்டினார்.
இத் திருமணத்தில் ரஜினியின் உறவினர்கள் 10 கார்களில் பெங்களூரில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தனுஷ் குடும்பத்திலும் பெரும் எண்ணிக்கையில் உறவினர்கள் பங்கேற்றனர்.
இயக்குனர் பாலசந்தர், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு, சத்யராஜ், அம்ரீஷ் புரி, சிரஞ்சீவி, சத்ருகன் சின்கா, ஹேமமாலினி, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், இளையராஜா, தேவா, கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா, பி.வாசு, பாலாஜி, புஷ்பா கந்தசாமி, டத்தோ சாமிவேலு, இந்திராணி சாமிவேலு,
ஏவி.எம் சரவணன், பாலகுமாரன், வைரமுத்து, இந்து ராம், சோ, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம், பாக்யராஜ், மீனா, சிவக்குமார், சூர்யா, விஜயக்குமார், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் நடந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை ரஜினிலதா தம்பதியும் கஸ்தூரிராஜாவிஜயலட்சுமி தம்பதியும் வாயிலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர். அவர்களை வாழ்த்திய ஜெயலலிதா திருமணப் பரிசை வழங்கிவிட்டு விடை பெற்றார்.
திருமண அழைப்பிதழ் உடையவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாசலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.சி. நகர் மேயர் ராமனாதன் செட்டியார் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அன்றைய தினம் பகலில் விருந்து அளிக்கப்படுகிறது.
தனுஷ் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறைப்படி நேற்றிரவே தனுசின் குடும்பத்தினர் ரஜினியின் வீட்டில் சென்று தங்கியிருந்து இன்று காலையில் திருமணம் முடித்தனர்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>