11-17-2004, 07:26 PM
அடி பொடிச்சி... என்ர காலத்தில் உந்தச் சினிமாக் கோதாரி இருக்கேல்ல... சும்மா மேடையில கூத்தும் நாடகமும் தான்.... விடிய விடிய பாத்துட்டு மாட்டு வண்டில் கட்டி வீட்ட வாறது... என்ன ஒரு ஆனந்தம்... இப்ப எல்லாம் போச்சு.... வசுவாம் காராம் புளேனாம்... உந்தக் கோதாரிகள் ஏறி இறங்கவே முழங்கால் சில்லு விலகிடும் போலக் கிடக்கு... இப்ப எங்க பழைய கறுப்பு வெள்ளப் படம் போடுறாங்கள்...சும்மா சிறுக்கியள் அரையும் குறையுமா ஆடுவாளவ அதையெல்லே படம் எண்டு காட்டுறாங்கள்...அவளவைக்குப் பின்னால் ஒரு குத்தியன் நாய் மாதிரி திரிய...அதை கலைச்சுக் கலைச்சுப் படம் எண்டு எடுத்துக் காட்டுறாங்கள்... கண்றாவி.... உதுகளப் பாத்துத்தானோ பொடிச்சி நீயும் சீரழியுறா.... பேசாம கோயில் குளம் எண்டு சுத்தன நிம்மதியாவது கிடைக்கும்....இல்ல கொப்பர் கொம்மாவை கண்கலங்காமப் பாருங்க அதுகள் சந்தோசப்பட்டா உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்....ஏதோ என்ர அனுபவத்தில சொல்லுறன்.. பழசு பிணாத்துது எண்டால் என்ன கேட்டுத் திருந்தினா என்ன..... எல்லாம் உங்கட கையிலதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>