11-16-2004, 09:31 PM
kavithan Wrote:ஆமா, ஒரு கோடி கண்கள்
ஆனால் நியமான உங்கள் கண்கள் அல்ல
ஏன் உங்களிடம் இருக்கும் அறிவுக்கண்களும் அல்ல
இவை மனக்கண்கள்
மனிதர் தம் மனங்களுள்
ஆண் பெண் உறவுகளுக்குள் எழும்
காதல்
அது தான் காதல் தேசம்
இயற்கை தந்தது காதல் தேசம் அல்ல
நீங்கள் ஆழும் தேசம்
வாழும் தேசம்
உங்களை வாழவைக்கும் தேசம்
ஆனால்
காதல் தேசத்தில்
ஒருவனுக்காக ஒருத்தியோ
ஒருத்திக்காக ஒருத்தனோ
மனம் ஒத்து வாழ்வார்கள்
ஆனால் பாருங்கள்,
உங்கள் தேசத்தில்
உங்களுக்கா நீங்களே வாழமுடியாத நிலை
மாந்தோப்பிலோ மட்டற்ற பிரச்சனை
மன்னிக்க தெரியாத மனிதர்கள்
உற்று நோக்கும் ஊதாரி கண்கள்
அவற்றுக்கு பயந்து நழுவி வீடு செல்ல துடிக்கும்
உங்கள் பாதங்கள்
இப்போது தான் நரகத்தில் இருகிறீர்கள்
காதலில் விழுந்தாவது
காதல் தேசத்துக்கு போங்கள்
அது சொர்க்கம் என்கிறார்கள்
எதுக்கும்
நரகமா..? சொர்க்கமா.. ? என்று
அனுபவித்தபின்
எனக்கும் சொல்லி அனுப்புங்கள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
இயற்கையவள்
படைப்புத்தானே ஆணும் பெண்ணும்
பூமியும் வானும்
படைப்புக்குள் காதல்
சர்வ சாதாரணம்
சாதாரணம் நமக்கு வேண்டாம்
அசாத்தியங்கள் சாதிக்க வேண்டும்
சாவு எமக்குப் பாரமில்லை
சரிவுகள் எமக்கு சிரமமில்லை
சரித்திரம் எமக்குத் தேவையில்லை
சாதிக்க நினைப்பது முடிக்க வேண்டும்...!
சாதிப்பது எம்மோடு எமக்காய்
நாளை மற்றவனுக்குப் பயனாய்
பறவையாகினும் பாருக்குப் பலனாய்
பாரமாய் அன்றி....!
வாழ்வெனினும் புனிதம் வேண்டும்
காதல் எனினும் புனிதம் வேண்டும்
சாதாரண காதல் வேண்டாம்
புனிதக் காதலுக்கு மனங்கள் தயார் இல்லை
புனிதம் என்றால் என்ன
புதிராய்ப் பார்க்கும் உலகில்
எம் காதல் வாழா
அது நிச்சயம்....!
முடிவு நிச்சயமான பின்
காதல் தேசம் என்று பிதட்ட
சின்னப் பறவை இது
சித்தம் கலங்கியா இருக்கு....!
சிந்தை தெளிந்தது
சீராகப் பறக்குது
சுதந்திர வானில்
சுதந்திரப் பறவையாய்
சாதிக்கும் தீரத்துடன்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

