Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கரங் கொடுப்போம்"
#3
நிச்சயமாக எமது பாரம்பரியக் கலைகள் அவற்றின் பண்புகள் விழுமியங்கள் சிதையாது பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதேவேளையில் இளைய தலைமுறையை கவரும் வகையில் நவீனத்துவம் புகுத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்டும் அவை சமூகத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்...! அதன் போது அடிப்படை பண்புகள் விழுமியங்கள் இழக்கப்படாது பாதுகாத்தும் கொள்ள வேண்டும்...! உதாரணத்துக்கு போர்த்துக்கீச பொப் இசை அதன் தனித்தன்மையை மேற்கில் இழந்து போனாலும் ஈழத்தில் காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப பல சவால்களுக்கும் மத்தியில் அது வெளிக் கொணரப்படுவது போல....!

எமது பாரம்பரியக் கலைகளை இன்று நாம் பாதுகாக்கத் தவறின் நாளை எமது சந்ததி மேற்கின் றொக்கிற்குள் றக்காகிக் கிடப்பது நிச்சயம்...! அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது...! தமிழ் சினிமாப் பாடல்களே ராகம் தாளம் தாண்டி மேற்குலக பேயாட்டத்துக்குள் சிக்கித் தவிக்கிறது....! மேற்கில் கூட மெலோடியை நோக்கி இளையவர்கள் மீளத் தொடங்கி இருக்கிறார்கள்...! இது எதைக்காட்டுகிறது புதுசு புதிசா எது வந்தாலும் நல்ல நயமான கலைகள், கலை வடிவங்கள் என்றும் ரசிக்கப்படும் என்பதையே.....! கலையை ரசிப்பது மனித மனமே அன்றி வேறில்லை...அது எந்தக் காலத்திலும் தன்னை மயக்கவல்ல கலைக்கு அடிமையாகாது என்று பார்த்து பாரம்பரியக் கலைகளை அம்சங்களை கைவிட எண்ணுவது தவறான பார்வையாகும்....எனவே நாளை எமது தலைமுறைக்கு எமது பாரம்பரிய கலையை அதன் வடிவங்களை பண்புகளை விழுமியங்களை பாதுகாத்து எடுத்துச் சென்று உணர வைக்க வேண்டியது எம் பொறுப்பாகும்... அதற்காய் இயன்றது செய்வோம்....முயற்சியாளர்களுடன் இன்றே கரங்கோர்ப்போம்....!

இன்றேல் சிதைந்துபோன எம் பாரம்பரிய அறிவியல் போன்று இவற்றையும் இன்னும் ஒரு நூற்றாண்டுகளில் இழப்பது நிச்சயம்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Nada - 11-16-2004, 05:25 PM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 08:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)