![]() |
|
"கரங் கொடுப்போம்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: "கரங் கொடுப்போம்" (/showthread.php?tid=6417) |
"கரங் கொடுப்போம்" - Nellaiyan - 11-16-2004 ஈழத் தமிழ்த் தேசியத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் திட்டமிட்ட முறையில் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டு வருகின்றது. இப்படி அருகிவரும் கலைகளில் ஈழத்து பழமை வாய்ந்த வடமோடி நாடகக் கூத்துமொன்றாகும். ஈழத்துக் கிராமியக் கலைகளின் கானகமாக திகழும் தென் தமிழீழத்தில் இன்று அருகி அழிந்துவரும் இவ்வடமோடிக் கூத்தானது போர், பொருளாதாரம் போன்ற பல காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளித் தினத்தன்று ரி.ரி.என் தொலைக்காட்சியில், இன்னும் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்று தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ள திருமதி சிவகாமி முருகமூர்த்தி என்ற சகோதரியின் பேட்டி ஒலிபரப்பப்பட்ட்து. தனது கணவரால் ஆடப்பட்டு வந்த இக்கலையை, அவரின் இளப்பிற்குப் பின் தனது இரு மகன்களோடு, தனது சிறு வருமானத்தையுமே இக்கலையை வளர்ப்பதற்காக உழைப்பதானது "நமது மண்ணைக் காக்க கையில் ஆயுதம் ஏந்திய போராளியின் உணர்வுகளுக்கு சமமானது". புலத்தில் எம்மவர்கள் இந்திய சினிமா மோகத்தில், அவர்களது தரமான படைப்புகள் என்றால் வரவேற்போம், ஊக்குவிப்போம் அதை விடுத்து தரமற்ற குப்பை, கூழாங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் முதலிட்டு, எம் பணத்தை விரயமாக்குகிறார்கள் என்பதைவிட கலை, கலாச்சார, சமூக சீரளிவுகளையும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால் எம்மவர்களின் கலைகளை ஊக்குவிக்க இவர்கள் செய்தது என்ன? 70துகளில் கொடிகட்டிப் பறந்த, இன்றும் நம்மவர்களால் வரவேற்கப்படும் ஈழத்துப் பொப்பிசை! எமது பழப்பெரும் நாடகக் கலைகள்(காத்தன் கூத்து, வடமோடிக் கூத்து, ...)! தெருக்கூத்துக்கள்! ....... இல்லை ஈழத்து விடுதலை எழுச்சி கீதங்கள்! ஏதாவது ஒன்றின் வளர்ச்சிக்கேதும் உதவீனீர்களா? தயவு செய்து இந்திய தமிழ் சீரளிவுக் குப்பைகளுக்கு கொட்டப்படும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியையேனும் திருமதி சிவகாமி முருகமூர்த்தி போன்றோருக்கு கைகொடுத்து உதவுங்கள். - Nada - 11-16-2004 நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் ாீ.ாீ.என் தீபாவளி தினத்தில் நிகழ்ச்சிகளை இலவசமாக ஒலிபரப்பி எல்லா மக்கள்முன்னும் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அவ÷கள் அதை விரும்பவில்லை. அவ÷கள் தேசியத்தொலைக்காட்சி என்று வா÷த்தைக்கு வா÷த்தை சொல்கிறா÷கள் செயலளவில் பூச்சியம். இந்த ஐரோப்பா வாழ் எத்தனை இளைஞ÷கள் கூத்து பற்றி அறிவா÷கள் இங்கு எத்தனை சினிமா நட்சத்திரத்தின் நிகழ்வுகளை நடத்தியுள்ளன÷. தாய்மண்ணிலிருந்து இப்படியான கலைஞ÷கள் வரவழைக்கப்பட்டுள்ளனரா? தேசியதொலைக்காட்சியிலாவது முழுதாக இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளதா? ஆரம்பகாலத்திலிருந்து இந்த ஆண்டுவரை அதன் சந்தாதாரராக இருந்தவன் என்றமுறையில் என்பதில் இல்லையென்பதே. இவ÷களிடம் இதற்கான தா÷மீகப் பொறுப்பு இருக்கிறது. இங்கு வீடுகளுக்கும் உணவுவிடுதிகளுக்கும்.வீதிகளிலும் நின்று மக்கள் மத்தியில் களிசடை நிகழ்வுகளை கொண்டு செல்வதிலும் பா÷க்க இப்படியான அழிந்துபோகும் கலைகளை வாழவைக்க முயற்சிக்கலாம்தானே... இவ÷களையும் முன்வரவையுங்கள் நாங்களும் பின்னே வருகின்றோம். - kuruvikal - 11-16-2004 நிச்சயமாக எமது பாரம்பரியக் கலைகள் அவற்றின் பண்புகள் விழுமியங்கள் சிதையாது பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதேவேளையில் இளைய தலைமுறையை கவரும் வகையில் நவீனத்துவம் புகுத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்டும் அவை சமூகத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்...! அதன் போது அடிப்படை பண்புகள் விழுமியங்கள் இழக்கப்படாது பாதுகாத்தும் கொள்ள வேண்டும்...! உதாரணத்துக்கு போர்த்துக்கீச பொப் இசை அதன் தனித்தன்மையை மேற்கில் இழந்து போனாலும் ஈழத்தில் காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப பல சவால்களுக்கும் மத்தியில் அது வெளிக் கொணரப்படுவது போல....! எமது பாரம்பரியக் கலைகளை இன்று நாம் பாதுகாக்கத் தவறின் நாளை எமது சந்ததி மேற்கின் றொக்கிற்குள் றக்காகிக் கிடப்பது நிச்சயம்...! அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது...! தமிழ் சினிமாப் பாடல்களே ராகம் தாளம் தாண்டி மேற்குலக பேயாட்டத்துக்குள் சிக்கித் தவிக்கிறது....! மேற்கில் கூட மெலோடியை நோக்கி இளையவர்கள் மீளத் தொடங்கி இருக்கிறார்கள்...! இது எதைக்காட்டுகிறது புதுசு புதிசா எது வந்தாலும் நல்ல நயமான கலைகள், கலை வடிவங்கள் என்றும் ரசிக்கப்படும் என்பதையே.....! கலையை ரசிப்பது மனித மனமே அன்றி வேறில்லை...அது எந்தக் காலத்திலும் தன்னை மயக்கவல்ல கலைக்கு அடிமையாகாது என்று பார்த்து பாரம்பரியக் கலைகளை அம்சங்களை கைவிட எண்ணுவது தவறான பார்வையாகும்....எனவே நாளை எமது தலைமுறைக்கு எமது பாரம்பரிய கலையை அதன் வடிவங்களை பண்புகளை விழுமியங்களை பாதுகாத்து எடுத்துச் சென்று உணர வைக்க வேண்டியது எம் பொறுப்பாகும்... அதற்காய் இயன்றது செய்வோம்....முயற்சியாளர்களுடன் இன்றே கரங்கோர்ப்போம்....! இன்றேல் சிதைந்துபோன எம் பாரம்பரிய அறிவியல் போன்று இவற்றையும் இன்னும் ஒரு நூற்றாண்டுகளில் இழப்பது நிச்சயம்...!
|