Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்கு பின்னால்...
#27
<span style='color:darkblue'><b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 12</b>
பெ.கணேஷ்

<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_anju_800.jpg' border='0' alt='user posted image'>
<b>மினிமம் பட்ஜெட் படம்</b>

இதுவரை நீங்கள் சினிமாவுக்குப் பின்னால் தொடரின் மூலம் ஒரு திரைப்படம் எடுப்பதற்கான அத்தனை டெக்னிக்கலான விஷயங்களையும் அறிந்தீர்கள்.

இந்த வாரம் ஒரு மினிமம் பட்ஜெட் படம் எடுப்பதற்கான விபரத்தை அறியப்போகிறீர்கள்.

ஒரு படம் தயாரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில் மிகவும் சிரமமான வேலை. எந்த தொழிலுக்கும் முதலீடு என்பது ஒரு அசையாத சொத்தாகவோ, அசையும் சொத்தாகவோ இருக்கும். ஆனால் சினிமாவில் நம்பிக்கை என்பதுதான் சொத்து. பதிநான்கு ஆயிரம் அடி ஃபிலிம் மட்டுமே கடைசியில் சினிமாவில் சொத்தாகிறது. ஆனால் படம் அவுட் என்றால் அந்த பதினான்காயிரம் அடி பிலிமை எடைக்கு போட்டால் சில ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காது.

இப்படி சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை நம்பி பல கோடிகளை முதலீடாக போடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அதற்கு ஒரே காரணம் இந்த படம் ஜெயித்துவிடும்; இந்த ஹீரோவிற்காக ஹீரோயினுக்காக படம் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கைத்தான். அடுத்து புதிதாக வருகிற தயாரிப்பாளர்களுக்கு இங்கே சினிமாவில் வழக்கமாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பு சம்பந்தமான நெளிவு சுழிவுகளை சீக்கிரமே சொல்லித்தரமாட்டார்கள்.

ஒரு படம் எடுத்து அவராக கற்றுத் தேர்ந்தால் மட்டுமே உண்டு.

சினிமா தயாரிப்பு என்பது தொழில் மட்டுமல்ல. அது ஒரு கலையும்கூட. எந்த ஹீரோவிற்கு என்ன மதிப்பு இருக்கிறது. அவரது படம் எஃப்.எம் (பாரின், மலேஷியா) நாடுகளின் ராயல்டியாக எவ்வளவிற்கு விற்கப்படுகிறது. அந்த ஹீரோவிற்கு ஏ, பி என்கிற பெரு நகரம். நகரங்களில் கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்களா? அல்லது சி என்கிற கிராமப்புறம் சார்ந்த சென்டர்களில் அவரது ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களா? என்பதை அறிந்து அந்த ரசிகர்களை கவரும் வகையில் கதைக்களத்தை அமைத்து படம் தயாரிக்க தெரியவேண்டும்.

அதேபோல் மியூசிக் டைரக்டருக்கு என்ன வேல்யூ இருக்கிறது. அவரது மியூசிக்கில் தயாராகும் பாடல்களை ஆடியோ ரைட்ஸ்ஸாக என்ன விலைக்கு விற்கமுடியும் என்பது தெரியவேண்டும் இப்பொழுது நூற்றி ஐம்பது பாடல்கள் அடங்கிய சி.டி. வெறும் முப்பது ரூபாயில் கிடைக்கிறது.

இதனால் ஆறு பாடல்களை மட்டுமே கொண்ட திரைப்பட கேசட் அல்லது சிடியின் விற்பனை இப்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் இசையமைப்பாளருக்கு கொடுக்கும் பணம் என்பது ஆடியோ ரைட்ஸ் மூலம் திரும்ப கிடைப்பது கடினம் என்பதால் அவரது சம்பளம் இப்போது படத்தின் பட்ஜெட்டோடு சேர்ந்துவிடுகிறது. அப்படியெனில் ஒரு மியூசிக் டைரக்டரின் பாப்புலாரிட்டி மற்றும் அவரின் திறமை இரண்டையும் கணித்து அவரை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த கணிப்பு என்பதை தயாரிப்பாளர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

அடுத்து இயக்குனர் என்பவர் எந்த பட்ஜெட்டில் படம் பண்ணுவார். அவர் படப்பிடிப்பு நடத்தும் நாட்களின் எண்ணிக்கையும், அவர் செலவழிக்கும் நெகடிவ் ரோல்களின் எண்ணிக்கையும் மற்றும் அவரிடமுள்ள கதையின் கரு. அந்த கரு வெற்றி பெறுமா? என்பதை கணிக்கும் ஆற்றலும் ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கவேண்டும்.

அதற்கடுத்து இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர், டான்ஸ்மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் ஆர்ட் டைரக்டர், மேக்கப்மேன், காஸ்ட்யூமர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்கிறபோது அவர்களின் அனுபவம், அவர்கள் பெறும் சம்பளம், அவர்கள் பிரச்னையில்லாத நபர்களா? என்பது அறிந்து ஒப்பந்தம் செய்யவேண்டும்.

அடுத்து தயாரிப்பு நிர்வாகி, ப்ரொடக்ஷன் அசிஸ்டெண்ட் போன்றவரை ஒப்பந்தம் செய்யும்போது அவர்களின் ஒப்புதலுடன் தனக்கு நம்பகமான நபரை அவர்களிடம் வேலை செய்யவிடவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பெரிய அளவில் எந்த தவறும் செய்யமுடியாமல் தடுக்கமுடியும்.

அடுத்து படம் முடிந்ததும் ஏரியா வாரியாக சொந்தமாக ரிலீஸ் செய்யும் திறமை இருக்கவேண்டும். எம்.ஜி. அடிப்படையில் டிஸ்ட்ரிப்யூஷன் கொடுப்பது எப்படி? அல்லது ட்ஸ்ட்ரிபூஷனுக்கு உரிமை கொடுக்கும்போது எந்தெந்த ஏரியா என்னென்ன விலைக்கு போகிறது, பட்ஜெட் படங்கள் எந்தெந்த தியேட்டரில் ரிலீஸ் செய்தால் ஓடும் என்பது தெரியவேண்டும்.

இந்த விசயங்கள் எல்லாம் தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் திடீரென படம் தயாரிக்க வருவது தவறு.

இப்போது ஒரு மினிமம் பட்ஜெட்டுக்கான பட்டியலை சொல்லப்போகிறேன். பெரும்பாலான மினிமம் பட்ஜெட் படங்கள் இந்த பட்டியலில்தான் அமையும். இதை நீங்கள் படித்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் ஒரு படத்திற்கு தேவையான ஃபிலிம். அதாவது நெகடிவ் சென்னையின் பெரிய லேப்களில் கிடைக்கும். உதாரணத்திற்கு பிரசாத் லேப்பில் நாம் காண்ட்ராக்ட் போட்டு ஃபிலிம் வாங்க வேண்டுமென்றால் அதற்கு நம் படத்தில் கேமராமேனாக பணியாற்றும் நபரின் உதவி வேண்டும். அவர் நம்முடன் வந்து லேப்பில் பேசினால் போதும். ஒரு அட்வான்ஸ் தொகை (2 லட்சம்) செலுத்தி ஃபிலிமை வாங்கலாம்.

ஒரு மினிமம் படத்திற்கு நாற்பது ஆயிரம் அடிகள் இருந்தால் போதும். அப்படி பார்க்கையில் ஆயிரம் அடிகள் ஈஸ்ட்மென் ஃபிலிம் நாற்பதாயிரம் + நாற்பது = எட்டு லட்சத்து எண்பதாயிரம் ஆகும்.

அடுத்து அவுட்டோர் யூனிட், கேமரா, லைட்ஸ், டிராக் & டிராலி கிரேன் போன்ற எல்லா பொருட்களும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுவதற்குமாக நமக்கு தருகிற வகையில் அவுட்டோர் யூனிட்டில் மொத்தமாக காண்ட்ராக்ட் போடவேண்டும். அது கிட்டதட்ட ஐந்து லட்சம் வரை ஆகும்.

அடுத்து இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடனஇயக்குனர், மேக்கப்மேன், தயாரிப்பு நிர்வாகி, ஸ்டண்ட் மாஸ்டர் என ஒட்டுமொத்த டெக்னீஷியன்களுக்கும் ஆறு லட்சத்தை தாண்டாத வகையில் திறமையுள்ள டெக்னீஷியன்களை அழைத்து பேசி ஒப்பந்தம் செய்யவேண்டும்.

அதற்கடுத்து இசையமைப்பாளர்களை பொறுத்தவரை அவரது சம்பளம் பாடல் ரிகார்டிங் செலவு, ரீ ரெக்கார்டிங் செலவு என எல்லாமும் சேர்ந்து ஆறு லட்சத்திற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என காண்ட்ராக்ட் கணக்கில் ஒப்பந்தம் செய்வது நல்லது.

அடுத்து ஒரு படத்தின் பாடல் காட்சிக்கான உடைகள், சண்டைக்காட்சிக்கான உடைகள் என மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் பாம்பே, சூரத் போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளரே நேரில் சென்று துணி எடுத்துக்கொண்டு வர முயல்வது நல்லது.

அடுத்து படப்பிடிப்புக்கான மொத்த நாட்கள் நாற்பது நாளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வசன காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என எல்லா காட்சிகளும் நாற்பது நாட்களில் முடித்துவிடுவது நல்லது.

ஒருநாள் ஷடை்டிங் நடத்துவதற்கு நடிகர், நடிகையருக்கான போக்குவரத்து செலவு துணை நடிகர்கள், துணை டெக்னீஷியன்களுக்கான பேட்டா, போர்டிங். லாட்ஜிங், மூன்று வேளை சாப்பாடு என ஒரு நாளைக்கு குறைத்து ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படும். அப்படி பார்த்தால் நாற்பது நாளுக்கு சூட்டிங் செலவு இருபது லட்சத்திலிருந்து இருபத்தைந்து லட்சம் வரை ஆகும்.

அடுத்து சூட்டிங் முடிந்து எடிட்டிங் செய்யவேண்டும். இப்பொழுது ஏவிட் என்கிற கம்ப்யூட்டர் எடிட்டிங் மிகவும் பயனுள்ளது என்பதால் அதற்கும் எடிட்டிங் முடிந்து டப்பிங், மிக்ஸிங் என்கிற லைவ் இசை சேர்ப்பு அடுத்து டப்பிங் பேசும் வசனத்தை பதிவு செய்ய சவுண்ட் நெகடிவ் மற்றும் தலைப்பு மற்றும் படத்தின் உள்ளே கிராபிக்ஸ் யுக்தியை கொண்டு வருவதற்கான ஆப்டிகல் லேப் ஒர்க் என எல்லாம் சேர்த்து ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இத்துடன் படம் முழுதும் தயாரானதும் முதல் பிரதி எடுக்கவும் பப்ளிசிட்டி கொடுப்பது சென்சார் சர்டிபிகேட் வாங்குவது ஃபோஸ்டர் அடிப்பது... மற்ற மாவட்டங்களுக்கான பிரிண்ட் போடுவது என பத்து லட்சங்கள் வரை செலவாகும்.

ஆகமொத்தம், டெக்னீஷியன்கள் மற்றும் படம் தயாரிப்பு, ரிலீசுக்கு ஆயுத்தமாகும் வரையான செலவு அறுபத்து மூன்றரை லட்சங்கள் ஆகும். இதனுடன் நடிகர்களின் சம்பளம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது புதிய ஹீரோவா அல்லது ஒன்றரை கோடிகள் வாங்கும் பெரிய ஹீரோவா என்பதை பொறுத்து பட்ஜெட் அமையும். ஆக இந்த மினிமம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வளரும் நடிகரா அல்லது அறிமுக நடிகர் நடிகையோ ஒப்பந்தம் செய்தால் எண்பது லட்சங்களில் ஒரு படத்தை முடித்துவிடலாம்.

ஆக இதுதான் இன்றைய மினிமம் பட்ஜெட். இந்த பட்ஜெட்டுக்குள் மிகவும் அநாவசிய செலவுகளை தவிர்த்து படமெடுத்தால் படம் சரியாக போகவில்லையென்றாலும் நிச்சயமாக முதலீடு செய்த பணத்தையாவது திரும்ப எடுத்துவிடலாம். அதாவது எஃப்.எம். ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ், வீடியோ ரைட்ஸ், சேட்டிலைட் சானலுக்கான உரிமை, வேற்று மாநிலங்களுக்கான உரிமை என ஒரு கணிசமான தொகை திரும்ப கிடைத்துவிடும் அதனோடு படம் ரிலீசாகி சுமாராக ஓடினாலே நாம் போட்ட முதலீடு நஷ்டமில்லாமல் திரும்பவரும்.

இதுவரை நான் சொன்னது எல்லாமே எனது அனுபவத்தின் மூலமாக பெற்ற விஷயங்கள். இந்த அனுபவங்கள் உங்களுக்குள் திரைப்படம் தயாரிப்பதற்கான ஆவலையும், உந்துதலையும் தருமாயின் அதனால் சினிமாவை நம்பியிருக்கிற நூற்றுக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அப்படி பலருக்கு வேலை தருகிற பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் அது இந்த 'சினிமாவிற்கு பின்னால்' தொடரின் வெற்றியாகும்.
"நன்றி மீண்டும் சந்திப்போம்."</span>
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-16-2004, 11:39 AM
[No subject] - by AJeevan - 09-16-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 09-16-2004, 08:59 PM
[No subject] - by kavithan - 09-16-2004, 10:13 PM
[No subject] - by AJeevan - 09-17-2004, 12:31 AM
[No subject] - by AJeevan - 09-20-2004, 02:52 AM
[No subject] - by AJeevan - 09-24-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 09-24-2004, 04:02 PM
[No subject] - by AJeevan - 09-29-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 04:13 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 07:51 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:08 AM
[No subject] - by tholar - 10-03-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 10-30-2004, 09:50 PM
[No subject] - by AJeevan - 10-30-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:08 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:16 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:54 AM
[No subject] - by tamilini - 11-06-2004, 11:59 AM
[No subject] - by AJeevan - 11-13-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)