Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்கு பின்னால்...
#26
<span style='color:red'><b>சினிமாவுக்கு பின்னால்...
சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்
பாகம் - 11</b>
_ பெ.கணேஷ்


<b>டப்பிங், ரீ_ரெக்கார்டிங், மிக்ஸிங்</b>

தமிழ் : சென்ற வாரம் நீங்க சொன்ன எடிட்டிங் விஷயங்கள் ஓரளவுக்கு புரிந்துவிட்டது. ஆனால் எடிட்டிங்கிற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லவில்லையே?

AVID கம்ப்யூட்டரில் எடிட்டிங் செய்வதென்றால் எண்பதாயிரம் முதல் தொண்டிடிணூறு ஆயிரங்கள் வரை செலவாகும். இது மட்டுமில்லாமல் நெகட்டிவ் கட்டிங் எடிட்டிங் ரூம் வாடகை, எடிட்டர் சம்பளம் என பல ஆயிரங்கள் செலவாகும். இதுமட்டுமில்லாமல் ஆப்டிகல் ஒர்க் என்கிற டிசால்வ் _ சூப்பர் எம்போஸ் எஃபெக்டுகக்கள் செய்வதற்கு தனியாக பணம் கட்டவேண்டும். அல்லது AVID-ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பண்ணுவதென்றாலும் ஒரு நொடிக்கு இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை செலவாகும். இவை மொத்த செலவையும் நாம் லேப்பின் கணக்கின் படியே செய்து கொண்டு பிலிம்.. எடிட்டிங், டப்பிங் மிக்சிங் என எல்லாவற்றிற்கும் மொத்தமாக பணம் செலுத்தும் வசதியும் இருக்கிறது.

<img src='http://www.kumudam.com/cinema/dub1.jpg' border='0' alt='user posted image'>
<b>டப்பிங் :</b>

டப்பிங் என்பது வசனப் பதிவு செய்வது என்று சொல்லலாம் நாம் ஷடை்டிங்கில் உபயோகப்படும் பிலிமிற்கு சப்தத்தை கிரகிக்கும் தன்மை கிடையாது. அதனால், முழுக்க, முழுக்க ஏர்ஃப்ரூப் என்கிற காற்றுப்புக முடியாத அமைதியான டப்பிங் அறைக்குள் நடிகர்கள் பேச அதை ADat என்கிற மேக்னடிக் டேப்பில் பதிவு செய்து பிறகு அதை film நெகடிவ்வோடு இணைத்து டபுள் பாஸிடிவ் என்ற வசனமும், படமும் உள்ள ஃபிலிம் பாஸிடிவ்வை உருவாக்குவார்கள்.

முன்பெல்லாம் டப்பிங் தியேட்டரில் சவுண்ட் நெகட்டிவ்வில் மட்டுமே பதிவு செய்யப்படும் வசதி இருந்தது. அதனால் காட்சிக்கு வசனம் பேசுகிறவர்களுக்கு சிரமம் அதிகமாக இருந்தது, எப்படி, எனில் அப்பொழுது ஒவ்வொரு ரீல் வரிசையில் படத்தை ஓட விடுவார்கள் குறிப்பிட்ட நடிகர் பேச வேண்டிய இடத்தில் அவர் சரியாக சிங் பண்ணவில்லையென்றால் _ அந்த ஒரு ரீலும் ஓடி... முதல் ப்ரேமில் இருந்து திரும்பவும் ரீப்ளே ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

இப்பொழுது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் உதவியோடு டப்பிங் நடப்பதாலும் ADat என்கிற மேக்னடிக் டேப்பில் பதிவு செய்வதாலும், குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட வசனத்திற்கு மட்டும் பன்ச் கொடுத்து... அந்த வசனக்காட்சி மட்டுமே திரையில் ஓடுகிற மாதிரி செய்து டப்பிங் செய்ய முடியும்.

இது மட்டுமில்லை; முன்பெல்லாம் ஒரு காட்சியில் இரண்டு நடிகர்கள் ஒன்றாக அதாவது ஒரே நேரத்தில் பேசி நடித்திருந்தால் டப்பிங்கின்-போது அந்த இரண்டு நடிகரும் வந்திருந்து ஒன்றாக வசனம் பேசவேண்டும். இப்போது அப்படியில்லை ADatல் 32 ட்ராக் உள்ளதால், ஒரே காட்சியில் 32 பேர் பேசி நடித்திருந்தாலும் அவர்களது குரலைத் தனித் தனியாக டப்பிங் செய்து ஒன்றாக மிக்ஸ் செய்ய முடியும்.

<img src='http://www.kumudam.com/cinema/dub2.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் : டப்பிங் பேசும் விதிமுறை எப்படியிருக்கும்?

டப்பிங் பேசுவதற்கென்று தனியாக எந்த விதிமுறையும் இல்லை. ஆனால் டப்பிங் பேச டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும். அடுத்து டப்பிங் பேசும்போது திரையில் நடிக்கும் நடிகரின் முகபாவத்திற்கும் அந்த காட்சியின் தன்மைக்கும் ஏற்ற வகையில் குரலை மாற்றி பேசவேண்டும் அதாவது அந்த காட்சிகளின் உணர்வுகள் குரலில் வெளிப்படும் விதமாக பேசவேண்டும். அடுத்து, நடிகரின் உதட்டசைவிற்கு ஏற்ற வகையில் வசனத்தை சிங் செய்ய வேண்டும். இதைப்பற்றி தெளிவாகச் சொல்வதென்றால் நடிகரின் உதடு திறக்கும் நேரத்தில் மிகச் சரியான வசனத்தை ஆரம்பித்து இடைஇடையே அவர் உதடுகள் மூடி திறக்கும் நிலைக்கு ஏற்ப நிஜமாகவே நேரில் அவர் பேசுவதை கேட்பதைப் போன்ற உணர்வைத் தரும் விதமாக பேச வேண்டும். அடுத்து குரல் மாடுலேஷன்... ஏற்ற இறக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு நடிகர் ஒரு வசனத்திற்கு எந்த இடத்திற்கு அழுத்தம் கொடுத்து பேசுகிறார். எங்கே இடைவெளி விட்டு ஆரம்பிக்கிறார். குரல் ஃபேஸாக இருக்கிறதா? ஸார்ப்பாக இருக்கிறதா? என்பதை மிகச் சரியாக உணர்ந்து அந்த ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்த மாதிரி குரலை மாற்றி பேச வேண்டும். அப்பொழுதுதான் நடிகரின் முக பாவத்து ஏற்றவாறு குரல் பொருந்தும்.

டப்பிங்கில் சிங், மாடுலேஷன் இந்த இரண்டும் மிக முக்கியமானதாகும். இப்படி எல்லா நடிகர்களும்பேசும் வசனங்களும் டப்பிங் செய்யப்பட்டதும் அந்த குரல்களை பதிவு செய்து Adat என்கிற மேக்னடிக் டேப்பை லேப்பில் கொடுத்து சவுண்ட் நெகட்டிவ்வாக மாற்றுவார்கள். பிறகு அதனை 19-.1/2 பிரேம்கள் முன்னதாக பிக்சர் நெகட்டிவோடு பொருத்தி டபுள் பாஸிட்டிவ் ஃபிலிமை உருவாக்கு-வார்கள். அதை மூவியாலாவில் ஓடவிட்டு அடுத்து ஷார்ப் கட்டிங் என்கிற கடைசி நேர எடிட்டிங் செய்வார்கள்.

<b>ரீ ரிகார்டிங்</b>

இது ஒரு படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலையாகும். அதாவது ஒரு காட்சியின் தன்மைக்கு ஏற்ப நடிகர் நடிகையின் எக்ஸ்பிரஷனுக்கு ஏற்ற வகையில் ஒலியை சேர்ப்பார்கள். இதுவும் இப்போது Adat ல் பதிவு செய்யப்படுகிறது.

ஒரு காட்சியில் எந்த இடத்தில் மியூசிக் ஆரம்பித்து எந்த இடத்தில் முடியவேண்டும் எந்த இடத்திற்கு எந்த மாதிரியான இசைக்கருவியை உபயோகித்து உணர்வுபூர்வமான மியூசிக்கை தரலாம் என இசைய-மைப்-பாளர் உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரியான ட்யூனை ராகத்தை வாசிக்க வைப்பார்கள்.

அடுத்து அந்த காட்சியின் இடையே என்னென்ன ராகத்தில், என்னென்ன இசைக்கருவிகளை உபயோகிப்பது என்று முடிவெடுப்பது இசையமைப்பாளரின் வேலையாகும்.

ஒரு படத்திற்க்கு மிக முக்கியமான ஜீவன் என்று ரீரிகார்டிங்கை சொல்லலாம். அந்தளவிற்கு பார்வையானை காட்சியோடு ஒன்றிப் போக செய்வது ரீ ரிகார்டிங்தான்.

பொதுவாக ஒரு படத்திற்கு ஏழிலிருந்து இருபது நாட்கள் வரை ரீ_ரிகார்டிங் நடக்கும். அது படத்தை இசையமைப்பாளரைப் பொறுத்து மாறுபடும். ரீ ரிகார்டிங்கில் இன்னொரு முக்கியமான விஷயம் தீம் மியூசிக். ஹீரோ, ஹீரோயின், வில்லன்களின் கேரக்டரை உணர்த்தும் விதமாக அவர்கள் வரும் காட்சிகளில் தனித்தன்மையாக படம் முழுதும் ஒரு மியூசிக்கை உபயோகிப்பார்கள் அதுதான் தீம் மியூசிக்.

இந்த தீம் மியூசிக்கும் இசையமைப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்... இயக்குனர் அதில் ஏதும் குறையிருக்கும் பட்சத்தில் வேறுவிதமாக மாற்றி தரச் சொல்லலாம்.. அதற்க இயக்குனருக்கு உரிமை இருக்கிறது.

<b>மிக்ஸிங் :</b>
<img src='http://www.kumudam.com/cinema/dub3.jpg' border='0' alt='user posted image'>
மிக்ஸிங் என்பது நேச்சரல் இசை சேர்ப்பாகும். அதாவது ஒரு காட்சியில் கார் நிற்பது _ புறப்படுவது _ சைக்கிள் பெல் சப்தம் _ குருவிகள் கத்தும் சப்தம் _ கண்ணாடி உடையும் சப்தம் என ஒரு காட்சியில் நிகழும் லைவ் சவுண்டை தருவதுதான் மிக்ஸிங்.

மிக்ஸிங் செய்வார்கள் இரண்டு-பேர்-தான் தியேட்டருக்கு வருவார்-கள் அவர்களிடம் மிகப்பெரிய சூட்கேஷ் இருக்கும் அதில் உலகத்தி-லுள்ள எல்லா சப்தங்களையும் பதிவு செய்ய டேப் அல்லது சிடிக்களை வைத்திருப்பார்கள். சாதாரண பேப்பர் கூட அவர்களுக்கு பறவைகள் படபடக்கும் சப்தத்தை தரும் உபகரணமாகிவிடும்.

அதேபோல் கையில் சிறிய ரப்பரை வைத்துக்கொண்டு அந்த ரப்பர் மூலமாக திரையில் ஷவேுடன் நடந்து வருபவருக்கும் ஹை ஹீல்ஸ் செருப்புடன் நடந்து வருபவருக்கும் ஹவாய் செருப்புடன் நடந்து வருபவருக்கும் மிகச்சரியாக சப்தம் தந்து விடுவார்கள்.

அதேபோல் அருவியின் சப்தம், அலைகளின் சப்தம், இடி இடிக்கும் சப்தம், கூட்ட நெரிசல் சப்தம். பிளைட், லாரி, பலவகை கார்களின் சப்தம் என எல்லாமும் இருக்கும். நாய்களில் தெரு நாய்கள் கத்துவது. அல்சேஷன், பொமரேனியன் என எல்லாவகை நாய்கள் கத்தும் சப்தமும் இருக்கும்.

காட்சியில் எந்த லைவ் சவுண்ட் வந்தாலும் அதற்கு இவர்கள் கேசட் மூலம் சப்தத்தை கொடுத்து அசத்திவிடுவார்கள்.

இந்த லைவ் இசைக்குதான் மிக்ஸிங் என்று பெயர். இதை தனியாக ஒரு டிராக்கில் பதிவு செய்து கொள்வார்கள்.

பிறகு லேப்பிற்கு சென்று டப்பிங் டிராக், மியூசிக் (RR) டிராக், மிக்ஸிங் டிராக் மூன்றையும் இணைத்து முடிவாக ஒரு சவுண்ட் டிராக்கை சவுண்ட் நெகட்டிவ்வில் பதிவு செய்வார்கள். அந்த சவுண்ட் டிராக்கோடு ஃபைனல் எடிட் நெகட்டிவை இணைத்து திரையிடும் படத்திற்கான முதல் பிக்சர் பிலிமை கொண்டு வருவார்கள். இதற்கு தான் பர்ஸ்ட் காபி என்று பெயர். இதிலிருந்து பல காப்பிகள் உருவாக்கப்ட்டு தியேட்டர்களுக்கு செல்லும். அடுத்த வாரம் ஒரு படத்திற்கு பட்ஜெட் உருவாக்குவதை பார்ப்போம்.

தொடரும்...</span>
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-16-2004, 11:39 AM
[No subject] - by AJeevan - 09-16-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 09-16-2004, 08:59 PM
[No subject] - by kavithan - 09-16-2004, 10:13 PM
[No subject] - by AJeevan - 09-17-2004, 12:31 AM
[No subject] - by AJeevan - 09-20-2004, 02:52 AM
[No subject] - by AJeevan - 09-24-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 09-24-2004, 04:02 PM
[No subject] - by AJeevan - 09-29-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 04:13 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 07:51 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:08 AM
[No subject] - by tholar - 10-03-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 10-30-2004, 09:50 PM
[No subject] - by AJeevan - 10-30-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:08 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:16 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:54 AM
[No subject] - by tamilini - 11-06-2004, 11:59 AM
[No subject] - by AJeevan - 11-13-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)