11-12-2004, 11:56 PM
Quote:அப்ப என்ன அவைகள் எல்லாம் பொய் என்கீறீங்களா...?? அப்படி பொய்யாய் இத்தனையான தொகை தேவாரங்களை சும்மா எழுதினார்கள்..?? இப்ப பாருங்க.. இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து நம்ம நாட்டில இருக்கிற கோணேச்சரம் கேதீச்சரம் பற்றி எல்லாம் பாடியிருக்கீறார்கள்..எல்லாம் பொய் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொய் இல்லாமல் கவிதையில்லை. அதேபோலத்தான் இந்தத் தேவாரங்களும். யதார்த்தத்தைக் கணக்கிலெடுக்காது புனையப்பட்ட கற்பனைகள்தான் இவை. இதைத் தற்கால விஞ்ஞான உலகில் வாழும் உங்களைப் போன்றவர்கள் சற்றும் சிந்திக்காது ஏற்பது கவலையளிக்கிறது.
நம்ம நாட்டிலை இருக்கிற கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பற்றி அவர்கள் அறிந்தால் அதைப் பற்றிப் பாடுவது ஒண்டு கஸ்ரமில்லையே? அல்லது அவர்கள் அந்த கோயில்களுக்குப் போய்க் கூடப் பாடியிருக்கலாம் அல்லவா???
Quote:இன்னொரு விடையம் இந்த நாள் கோள் பற்றியெல்லாம் கோளறு பதிகத்தில் பாடப்பட்டிருக்கு.. அதைப்போல் கோளறு பதிகத்தில வருகிற கோள்கள் எல்லாம் விஞ்ஞானிகளினாலேயே நிருபிக்கப்ட்டிருக்கு.. அப்ப அது உண்மையாக இருக்கும் போது ஏன் பாடல் பாடி உயிர்ப்பித்தது கதவை திறக்க செய்தது ... எல்லாம் உண்மையாக இருக்க கூடாது என்கிறீர்கள்...! ?? அப்ப நீங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள்எல்லாம் இல்லை என்கிறீங்களா...??
கோளறு பதிகத்தில் சம்பந்தர் பாடிய எல்லாக் கோள்களையும் விஞ்ஞானம் நிருபிக்கவில்லை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி சனி - பாம்பிரண்டுமுடனே. இதில் முதலில் கூறப்பட்ட ஏழும் உண்மையென்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த பாம்பு இரண்டும் கற்பனைகளே. பாம்பு எண்டு பம்பந்தர் கூறுவது இராகு கேது என்ற கற்பனைக் கேள்களை.
விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட எழு கோள்களும் சம்பந்தரின் கண்டு பிடிப்போ அல்லது இந்து மதத்தின் கண்டு பிடிப்போ அல்ல. இந்தச் கிரக கண்டு பிடிப்பும், சோதிடமும் கிரேக்கர்கள், பாப்பிலோனியர்களின் கண்டு பிடிப்பே. இவையாவும் இந்தியாவுக்கு வந்தது அலெக்ஸ்சாந்தரின் இந்தியப் படையெடுப்பின் பின்பே!!!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

