11-12-2004, 11:25 PM
Quote:ஆராய்ச்சியின் படி ஒரு அவ்வையார் அல்ல பல அவ்வையார் இருந்திருக்கிறார்கள்.அதற்காக அவ்வையார் என்பது கற்பனை என்றும் அவரது பாடல்கள் கற்பனை என்றும் கூற முடியுமாபல ஒளவையார்கள்தான் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் அகத்தியர் ஒருவர் என்றே அறிந்திந்தேன். அதனால்த்தான் அப்படி எழுத வேண்டியிருந்தது. அதற்காக வருந்துகிறேன் மன்னிப்புக் கேட்கிறேன்.
அகத்தியர் கதையும் அவ்வாறே இருக்கும் இது கொஞ்சம் கஷ்டமான விவாதம் நிறையப் படிக்கவேண்டி இருக்கிறது முடிந்தால் அதிகாலைக்குள் சொல்வேன்.
ஆனால் முதற்சங்கம், இடைச்சங்கம், மற்றும் கடைச் சங்கத்துடன் முருகன் சிவன் போன்றவரை இணைத்து எழுதப்பட்டதைத்தான் பார்ப்பனரின் கற்பனை எண்டு எழுதியிருந்தேன்.
நான் பார்ப்பனரைப் பரதேசிகள் எண்டு சொன்னதற்குக் காரணம் அவர்கள் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடே. எமது இனம் சமயம் சாத்திரம் எண்டு தமது சொந்தப் பண்பாட்டை மறந்து ஏதிலி இனமாக இருப்பதற்கு அவர்கள் வழிவகுத்து விட்டார்களே எண்ட கோவம்தான். ஆனால் இவர்களின் ஆக்கிரமிப்புக் எமது தமிழ் மன்னர்களே ஊக்கம் அளித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

