11-12-2004, 06:12 PM
சென்னை அடையாறிலுள்ள நட்சத்திர ஓட்டலில் சில மாதங்களுக்கு முன்பே நடிகர் தனுஷ§ம், ரஜினிகாந்த் மகள் ஐஸ்யர்யாவும் காதலர்கள் போல் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வதாகக் கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டது.
தனுஷிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘ஐஸ்வர்யா என் சகோதரியின் தோழி. அவ்வளவுதான்’ என்று மறுத்தார்.
இன்னொருநாள். தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோ ஒன்றில்! காலையிலேயே தனது கறுப்புநிற காரில் அங்கே வந்திறங்கிய ஐஸ்வர்யா, தனுஷின் கேரவன் வேனுக்குள் சட்டென்று நுழைந்து அமர்ந்துகொள்ள... ஷாட் இடைவேளைகளில் தனுஷ் அங்கே சென்று ஐஸ்வர்யாவுடன் பேசிக் கொண்டிருப்பார். மதியச் சாப்பாடு கூட இருவருக்கும் அந்த வேனுக்குள்ளேயே அனுப்பப்படும். ஷ¨ட்டிங் முடிந்ததும் ஐஸ்வர்யா, வேனிலிருந்து இறங்கி தனது காருக்குச் சென்று புறப்பட்டு விடுவார். இப்படியெல்லாம் ரகசியங்கள் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது திடீரென தனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் என்று பேட்டியளிக்கிறார் தனுஷ்.
தனுஷ் தன் திருமணத் தகவலை அவரே வெளியிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. ரஜினி ஏன் அறிவிக்கவில்லை? அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லையா என்றெல்லாம் வதந்திகள்.
மறுநாள் ரஜினியின் பேட்டியைப் பார்த்ததும்தான் அந்த அதிர்ச்சி ஓய்ந்தது.
தனுஷ் _ஐஸ்வர்யா திருமணம் பற்றி தனுஷின் தந்தை டைரக்டர் கஸ்தூரிராஜா நமக்காக மனந் திறந்த சிறப்புப் பேட்டியளித்தார். இதோ அந்தப் பேட்டி.
‘‘தனுஷ் நடிக்கும் படங்களின் பிரிவியூ காட்சிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரையும் கூப்பிடுவோம். அப்படி வரும்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் என்னோட மகள் விமலாகீதாவும் பிரண்ட்ஸ் ஆனார்கள். அடிக்கடி என் மகளைச் சந்திக்க ஐஸ்வர்யா வருவார். சூப்பர் ஸ்டார் மகள் என்கிற பந்தா இல்லாமல் மிக எளிமையாகப் பழகுவார். அவரை என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்குமே பிடிக்கும். அதேபோல்தான் நடிகை சோனியா அகர்வாலையும் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால், ஐஸ்வர்யாவுக்கும் என் மகன் தனுஷ§க்கும் காதல் என்று பத்திரிகைகளில் கிசுகிசு வந்தது. தொடர்ந்து டி.வி.யில் கூட இது பற்றிச் சொன்னார்கள். இந்த ‘கான்ட்ரவர்ஸி’க்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்வது என்று யோசித்தோம்.
இது சம்பந்தமாக, ரஜினி வீட்டில் பேசும்போது, ‘ஏன், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் என்ன?’ என்று ஒரு திடீர் முடிவுக்கு வந்தோம். என் மகனுக்கும் ஐஸ்வர்யாவின் எளிமை, கலைநயம், குடும்பப் பாங்கு எல்லாம் பிடித்திருந்தது.
ரஜினி சாரும் என் குடும்பத்தினரைப் பற்றி நல்லபிப்ராயம் வைத்திருந்தார்.
அப்போது நாங்கள் அவரிடம் ‘‘பிரஸ்ஸ§க்குக் கூட சொல்ல வேண்டாம். வீண் பிரச்னை கிளம்பும். தனுஷ்_ஐஸ்வர்யா திருமணத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு பத்திரிகைகளுக்குச் சொல்லலாம்’’ என்றேன்.
ஆனால் எப்போதுமே தன்னடக்கமான ரஜினி, என்னோட இந்த யோசனையை மறுத்தார். ‘‘பத்திரிகைகளுக்கும் எனக்கும் எப்போதுமே ஒரு நல்ல உறவு இருக்கிறது. என் மகள் திருமணத்தை அவர்களுக்குத் தெரிவிக்காமல் செய்வது சரியல்ல. அதனால் பிரஸ்ஸ§க்குச் சொல்லிவிட்டே திருமணம் செய்யலாம்’’ என்றார். அப்புறம் அவரே, ‘‘நான் கூட பத்திரிகைகளுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதில்லை.. மாப்பிள்ளை தனுஷே இதைச் சொல்லட்டுமே!’’ என்றார். அதன் பிறகுதான் தனுஷ் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு தன் திருமணச் செய்தியைச் சொன்னார்.
தனுஷை விட ஐஸ்வர்யா வுக்கு வயது அதிகம் என்கி றார்களே?
‘‘அதையெல்லாம் முதலில் நான் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஏதோ ஒரு பத்திரிகையில் படித்துத்தான் தனுஷை விட அந்தப் பெண்ணுக்கு வயசு அதிகம் என்று தெரிய வந்தது. அப்புறம் அந்தப் பெண்ணிடம் கேட்டபோது ‘தனுஷை விட ஒரு வயசு அதிகம்’ என்றது. அதாவது தனுஷ§க்கு 21 _ அதற்கு 22 என்று சொன்னது. அது ஒரு பெரிய பிரச்சினையா? சச்சின் டெண்டுல்கருக்கும் அவர் மனைவிக்கும் நான்கு வயது வித்தியாசம். அவர்கள் சந்தோஷமாக வாழவில்லையா? விட்டுக் கொடுப்பதும், மனப்பக்குவமும்தான் வாழ்க்கை. திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்க விஷயம். அவருக்குச் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது.
தனுஷிடம் எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. அசைவம் கூடச் சாப்பிட மாட்டார். அவருக்கு சரியான துணை _ ஐஸ்வர்யாவாகத்தான் இருக்க முடியும்’னு நினைக்கிறேன். படிச்ச பொண்ணு. எதிலும் உறுதியான முடிவு எடுக்கக் கூடிய துணிச்சல் உள்ள பொண்ணு அது. இந்த நம்பிக்கை எனக்கு வந்ததால்தான் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்தேன்.
தனுஷ§டைய அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை. பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வயதை அவர் தாண்டிவிட்டார். படப்பிடிப்பு முடிந்து வந்ததும் தனி அறையில் போய் உட்கார்ந்து கொள்வார். வீட்டில் உள்ளவர்களுடன் கூட கலகலப்பாகப் பேசமாட்டார். முன்பெல்லாம் அப்படியல்ல; படப்பிடிப்பு முடிந்து வந்ததும் என்னுடன் சீட்டாடுவார். ஆட்டம் முடிய இரண்டு மணி மூன்று மணி கூட ஆகும்.
அவரை ‘‘ஏன், நீ முன் போல இல்லை?’’ என்று ஒருமுறை கேட்டேன்.
‘‘நீங்கள் டைரக்டர். அண்ணன் டைரக்டராயிட்டான். அக்கா டாக்டர் ஆயிட்டாங்க. இன்னொரு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். நான் மட்டும்தான் தனியா இருக்கேன்!’’ என்றார்.
‘‘சரி; இவருக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதுதான் சரி; தனியாக இருக்கும் அவரது அறைக்குள் எப்போதும் போக உரிமை உள்ளவர். அவர் மனைவிதான்’’ என்று ஒருநாள் நினைத்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவருக்குத் திருமணம் செய்வதாக அப்போது திட்டமில்லை. ஐஸ்வர்யாவைப் பார்த்த பிறகு, என் எண்ணம் மாறியது. என் மனைவியிடம் கலந்து பேசி, தனுஷ§க்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.
எந்த ஒரு நடிகருக்கும் மனைவி ஒரு மந்திரி மாதிரி இருக்க வேண்டும்; வழிகாட்டியாக இருக்க வேண்டும். தனுஷ§க்கு ஐஸ்வர்யா இந்த விதத்தில் ரொம்ப ரொம்பப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதனால்தான் 18.11.2004 அன்று திருமணம் அரங்கேறுகிறது!’’ என்கிறார் ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜா.
பேட்டி : சந்துரு, ரவிஷங்கர், வி.மீனாட்சி
படங்கள் : சித்ராமணி.
நன்றி குமுதம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>