Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யசீர் அரபாத் மரணம்
#14
<b>பாலஸ்தீன தந்தை' அராபத் உடல் இன்று அடக்கம்</b>

பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட யாசர் அராபத் நேற்று அதிகாலை பாரிஸ் மருத்துவமனையில் மரமணடைந்ததையடுத்து இன்று அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

பாரிஸ் மருத்துவமனையில் மரணமடைந்த அவரது உடலுக்கு பிரான்ஸ் நாட்டு ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல் சிறப்பு விமானத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோ கொண்டு வரப்பட்டது.

அங்கு விமான நிலையத்தின் அருகே உள்ள மாபெரும் பள்ளி வாசலில் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அராபத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அராபத்தின் உடலை அவர் பிறந்த ஜெருசலேமில் அடக்கம் செய்ய அனுமதி தர இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து ரமல்லாவில் உள்ள பாலஸ்தீன அரசு தலைமையகத்தில் அராபத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அராபத்தின் மரணச் செய்தி வெளியானதில் இருந்து பாலஸ்தீனத்தில் பெரும் சோகம் கவ்வியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அழுதபடி அமர்ந்திருப்பதையும், நெஞ்சில் அடித்துக் கொண்டு பதறுவதையும் காண முடிந்தது. பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு காணும் அவரது கனவு கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது.

இந்த மரணத்தையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பலவித ராணுவக் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு அமலாக்கியுள்ளது.

மறைந்த அராபத்துக்கு அஞ்சலி செலுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சிறப்பு விமானத்தில் கெய்ரோ புறப்பட்டுச் சென்றனர்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

<b>பாலஸ்தீன தூதரகத்தில் சிங் அஞ்சலி :</b>

இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு யாசர் அராபத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள புத்தகத்தில் தனது இரங்கல்களை எழுதினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங், இந்தியாவின் மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டோம் என்றார்.

யாசர் அராபத்துக்கு அஞ்சலி செலுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் கெய்ரோவிலும் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளனர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-11-2004, 12:25 PM
[No subject] - by Nada - 11-11-2004, 12:32 PM
[No subject] - by MEERA - 11-11-2004, 12:34 PM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 04:31 PM
[No subject] - by Thusi - 11-11-2004, 05:07 PM
[No subject] - by Nitharsan - 11-11-2004, 05:11 PM
[No subject] - by mukilan - 11-11-2004, 07:46 PM
[No subject] - by TMR - 11-11-2004, 08:22 PM
[No subject] - by aathipan - 11-11-2004, 08:58 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 12:18 AM
[No subject] - by kirubans - 11-12-2004, 12:22 AM
[No subject] - by hari - 11-12-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 01:15 PM
[No subject] - by naaivaal - 11-12-2004, 10:27 PM
[No subject] - by shanmuhi - 11-13-2004, 09:20 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 11:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)