Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யசீர் அரபாத் மரணம்
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40068000/jpg/_40068586_arafat203index.jpg' border='0' alt='user posted image'>

<b>இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தின் இரும்புக்கரங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிர்கதியாய் நிற்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்குரல்... யசீர் அரபாத்.. பிரஞ் மருத்துவமனையில் அடங்கிக் கிடக்கிறது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!</b>

<b>அடக்குமுறையின் கோரங்களை அனுபவித்தவர்கள் என்ற வகையில் அவ்விடுதலை இயக்க வீரனின் 40 ஆண்டுகால உறுதிமிக்க விடுதலை போராட்ட முன்னெடுப்பை வியந்து பாராட்டும் இன்னேரத்தில் அவனின் இறுதிக்காலம் சர்வதேசத் சதியின் பின்னணியில் வீட்டுக்காவலில் கழிந்தது என்பதுதான் வருந்தத்தக்க விடயம்...! எனினும் இறுதிவரை ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களை வழிநடத்திய பலஸ்தீனத் தளபதிக்கு எமது வீர வணக்கங்கள்....!</b>

யசீர் அரபாத் அண்மைக் காலத்தில் இனம் புரியாத நோய் ஒன்றிற்கு ( நஞ்சூட்டல் காரணமாயும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது) ஆளாகி கடும் சுகவீனமுற்ற நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பதும் கடந்த சில நாட்களாக மூளைமயக்க நிலையில் (கோமா) இருந்தார் என்பதும் இன்றைய தினம் அதிகாலையில் பல்வேறு உறுப்புகளும் செயல் இழந்தமையால் முழு மரணத்தை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...!

இவருடைய இறப்பை அறிந்து பலஸ்தீனதேசம் சோகத்தில் இருக்க... ஒரு மனிதாபிமான எண்ணமே இன்றி இஸ்ரேல் இது பயங்கரவாதத்தின் மரணம் என்று விமர்சித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது....!

இவருடைய வித்துடல் பலஸ்தீன தேசத்துக்கு எடுத்துவரப்பட்டு ரமல்லாவில் அடக்கம் செய்யப்படும் என்று செய்திகள் தெருவித்தாலும் தன்னுடலை ஜெருசலேத்தில் அடக்கம் செய்யவே அரபாத் விரும்பி இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது...அவருடைய இறுதி ஆசையைக் கூட நிறைவேற்ற இஸ்ரேலிய பயங்கரவாத அரசு அனுமதிக்குமா....???! :evil: :?:

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40512000/jpg/_40512999_tears-ap-203body.jpg' border='0' alt='user posted image'>

சாதாரண பலஸ்தீன மக்களின் உணர்வலைகள்...!

-------------------------------------

<b>The veteran Palestinian leader Yasser Arafat's profile...</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39462000/jpg/_39462946_arafat203bodyap.jpg' border='0' alt='user posted image'>

<b>24 Aug 1929: Born in Cairo
(Now his Age : 75)

1948: Founds Fatah

1969: Elected PLO chairman

1974: Addresses UN General Assembly

1982: Expelled from Lebanon by Israelis

1990: Supports Saddam Hussein during First Gulf War

1991: Marries Suha Tawil

1993: At the White House signs peace agreement with Israel

1994: Jointly awarded Nobel peace prize with Rabin and Peres

2001: Israel blockades him inside Ramallah headquarters </b>

Source : bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
யசீர் அரபாத் மரணம் - by kuruvikal - 11-11-2004, 12:04 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 12:25 PM
[No subject] - by Nada - 11-11-2004, 12:32 PM
[No subject] - by MEERA - 11-11-2004, 12:34 PM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 04:31 PM
[No subject] - by Thusi - 11-11-2004, 05:07 PM
[No subject] - by Nitharsan - 11-11-2004, 05:11 PM
[No subject] - by mukilan - 11-11-2004, 07:46 PM
[No subject] - by TMR - 11-11-2004, 08:22 PM
[No subject] - by aathipan - 11-11-2004, 08:58 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 12:18 AM
[No subject] - by kirubans - 11-12-2004, 12:22 AM
[No subject] - by hari - 11-12-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 01:15 PM
[No subject] - by naaivaal - 11-12-2004, 10:27 PM
[No subject] - by shanmuhi - 11-13-2004, 09:20 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 11:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)