11-10-2004, 05:20 AM
கவிதன், இது அநியாயம். அந்த சிங்கப்பூர் காரனை கண்டவுடன் இந்த மன்னனுக்கு அல்வா கொடுத்துவிட்டீர்கள். நாளைக்கே ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றை கூட்டி, நீர் என்னுடன் இருந்த காலத்தில் நீர் செய்த அந்தபுர லீலைகளை அவுட்டு விடப்போகிறேன். இது தொடர்பான தகவல்களை எனது புதிய மந்திரி ஆனந்தசங்கரி தயாரித்துக்கொண்டிருக்கிறார். மேலும் உமக்கு எதிராக இணையத்தில் சுத்துமாத்து கையொப்பவேட்டையும் நடாத்த இருக்கின்றோம். அதுமட்டும் இல்லை மீன் கடையில் நான் கத்தியை திருடியது என்று கூறி என் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக உமக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி சிங்கப்பூரில் ஒரு ரவுண்ட் விடப்படும். கழுதை கிடைக்கவில்லையென்றால் எனது மந்திரியும் வருவார்.

