11-09-2004, 08:58 PM
நிதர்சன் Wrote:தீபாவளி என்பது நரகாசுரன் என்பவன் அழிக்கப்பட்ட நாள் என்று இன்று பலர் விளக்கம் கொடுக்க முயல்கின்றனர். உண்மையில் நரகாசுரனின் அழிவிலிருந்து இந்திருநாள் கொண்டாடப்படவில்லை. ஆனால் இது அவனதுஅழிவு சம்பந்தப்பட்டு வருகிறது நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான் இறக்கும் இந்நாளில் பூவுலக மக்கள் அனைவரும் தமது திருநாளாக அதாவது இருளகன்ற ஒளிபொருந்திய ஒரு நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் அதன் படியே தீபாவளி கொண்டாடப் படுகின்றது.
பரவாயில்லை தீபாவளிக்கு ஒருகதைதான் எண்டு பார்த்தா எக்கச் சக்கமா இருக்குப் போல. ஆனா என்ன எல்லாக் கதையும் மூட நம்பிக்கையை வைச்சிருக்கு எண்டதிலை எதுவித ஐயமும் இல்லை. (நன்றி ஒரு புதுக் கதையைச் சொன்னதுக்கு)
நிதர்சன் Wrote:நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான்நரகாசுரனை அழிக்க முற்படும் இறைவன் ஏனையா அவனைக் கெட்டவனாகப் படைக்கிறார். எல்லோரையும் நல்லவனாக படைத்தால் எல்லாம் நல்லதே நடக்கும் அல்லவா??
நாங்கள் மிக முக்கியமாக தீபாவளியை வெறுப்பற்குக் காரணம் அசுரனை அழித்தமைக்காக அது கொண்டாடப் படுகிறது எண்ட காரணம்தான்.
நிதர்சன் நீங்கள் சமயப் புத்தகங்களிலும் வேறு புராணங்களிலும் இந்த அசுரர்கள் சாமானிய மக்களை துன்பப்படுத்தியிருக்கிறார்கள் எண்டு படித்திருக்கிறீர்களா? அரக்கன் செய்யும் வேலை ஒண்டுதான் அதாவது தேவர்கள்(பார்ப்பனங்கள்) செய்யும் யாகத்தைத் தடுப்பதுதான் இதனால் அவன் அரக்கன் கெட்டவன் ஆகிறான். தயவு செய்து ஒரு கேள்வியை உங்களுக்குள் எழுப்பிப் பாருங்கள் ஏன் அசுரர்கள் தேவர்களின் யாகத்தைத்தைத் தடுக்கிறார்கள் எண்டு!
Quote:கிரகங்களில் ஆராய்ச்சி செய்ய காரணமே இந்து சமயம் தான் என்பது பலருக்குத் தெரியாது ஏனெனில் அதை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரமில்லை. மூட நம்பிக்கை மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்களுக்குத் தெரியுமா? முதலில் உலம் உருண்டையேன்று யார் சொன்னதென்று?ஹி... ஹி...
கிரகங்களை ஆரட்சி செய்ய இந்து மதம் காரணமல்ல கிரகங்களுக்கு கோயில் கட்டவே இந்து மதம் காரணம். இந்த சாத்திரம் கிரக ஆராட்சியெல்லாம் இந்துமதக் கண்டு பிடிப்பல்ல! பாப்பிலோனியர்கள், கிரேக்கர்களின் கண்டு பிடிப்பு. இதுக்கு உங்களை சாக்கடை மதம்தான் காரணம் எண்டு புதுக்கதை சொல்லாதையுங்கோ.
இதோ உலகம் உருண்டை எண்டு உங்கடை இந்து மதம் தீபாவளிக்கதை மூலம் இப்படிச் சொல்கிறது.
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தேவர்களின் முறையீட்டின்மீது மகா விட்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக்கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
வாழ்க இந்து மதம் வளர்க சாத்திரம்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

