07-27-2003, 04:49 AM
காரைநகர் கசூரினா கடற்கரையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கசூரினா கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளாந் தம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கசூரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்களில் சிலர் அங்கு துர்நடத்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மதுபோதையில் கசூரினா கடற் கரைகளில் வாகனங்களை மிக வேகமாகச் செலுத்திச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த வீதிகளில் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு அச்சமடைவதாகவும் கூறப்படுகின்றது.காரைநகரின் இயற்கை எழில்மிக்க இப்பிரதேசத்திலும் அருகில் உள்ள வரலாற்று பிரசித்திபெற்ற ஈழத்துச் சிதம்பரம் ஆலயப் பகுதியிலும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

