Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொன்விழா காணும் எங்கள் தலைவர்
#2
<img src='http://kuruvikal.yarl.net/archives/praba.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழ தாயின்
அருமை மைந்தனே
எங்கள் அண்ணனே
உன் பெருமை சொல்லி
வாய் வீரம் வேண்டாம்
எம் வாய் சொல்லாமலே
உன் செயல் கண்டு
உலகம் அறியும் உன் வீரம்
செயலால் அன்றி வாயால் வீரம்
அது உன் அகராதியில் இல்லை....!

செய் அல்லது செத்துமடி
அது போர்க்களத்திற்கல்ல
வாழ்வுக்களத்திற்கும் பொருந்தும்
அதுவே இளைஞர் எம்
தாரக மந்திரம்
தரமான மனிதராய்
பூமிக்கு அணிகலனாய் வாழ்ந்திட...!

எல்லோர் வீட்டிலும்
மூத்த அண்ணன் நீ
முன்னுதாரணமாய்...
எங்கள் சுமை தாங்கும்
சுமை தாங்கி நீ
உன் கொள்கை சுமப்பதும்
அதன் தர்மம் காப்பதும்
எம் கடன்...!

அகவை ஐம்பதுக்குள்
அடியெடுத்து வைக்கும்
குழந்தை நீ
ஆம்....
உனக்குள் குழந்தையும் உண்டு
குறும்பும் உண்டு
சினந்தெழும் வேங்கையும் உண்டு
அனைத்தும் கொண்டு
தமிழர் தலை நிமிர வைத்த
தாரகையே
நீ விடியலின் தாரகையாய்
தரணியில் பல்லாண்டுகள் மிளிர
இறை ஆசி வேண்டி
அன்புச் சகோதரங்கள் எம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-09-2004, 12:04 PM
[No subject] - by yarlmohan - 11-09-2004, 01:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)