Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊமை விழி....!
#1
ஓசையின்றி எழுதிய
ஓராயிரம் சரித்திரங்கள்
ஓயாமல் படம்பிடித்த
ஒழிவுமறைவில்லாக் காட்சிகள்
ஓங்கிய ராஜ்சியங்கள்
ஓரிரவுள் சரித்த வரலாறுகள்
ஒருவனுக்குள் ஒருத்தியை
ஒருத்திக்குள் ஒருவனை
ஓங்க வைத்து தொலைத்த நிம்மதிகள்
ஓயாமல் அடுக்கலாம் என் சாதனைகள்....!
ஓங்கும் வீரம்
ஓரிருவருக்குள் என்னோடு
ஓசையின்றி ஒருத்தன்
ஓரமாயிருந்து மனமாள
ஒடுங்கிடுவேன் அவன் முன்...!
ஒய்காரம் காட்டி
ஓரங்கட்டும் கன்னியோடும் என்னுறவு
ஓயாமல் போராடி
ஓங்கும் கள வீரனும் என்னுறவு
ஓர் நிலை நின்று
ஓங்கும் மாணவனும் எந்தோழன்
ஓர் நிலை இன்றி
ஓடி அலையும் காமனும் என்னோடு...!
ஓய்வின்றி உழைக்கும் ஒருவனுக்கு
ஓர் வைத்தியன்
ஓடி உழைத்து
ஓயாமல் குடித்தழிக்கும்
ஒருவன் உண்மை சொல்வேன்
ஒழிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்...!
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி
ஒருவேளை என்னுதவி
ஒரு தவறானால்
ஓயாமல் கலங்கிடுவேன்
ஒருத்தி அதையே
ஒரு தயவுதேடித் தப்பாக்கிக் கொள்கிறாள்
ஓ.... அங்கு நான்
ஊமை விழி
அவள் அநியாயம் சொல்ல முடியா
ஊமை....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/eye.gif' border='0' alt='user posted image'>

நன்றி : http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஊமை விழி....! - by kuruvikal - 11-08-2004, 05:57 PM
[No subject] - by hari - 11-08-2004, 06:06 PM
[No subject] - by hari - 11-08-2004, 06:26 PM
[No subject] - by tamilini - 11-08-2004, 06:58 PM
[No subject] - by tamilini - 11-08-2004, 07:02 PM
[No subject] - by kuruvikal - 11-08-2004, 07:18 PM
Re: ஊமை விழி....! - by kavithan - 11-09-2004, 01:47 AM
[No subject] - by hari - 11-09-2004, 05:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)