Yarl Forum
ஊமை விழி....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ஊமை விழி....! (/showthread.php?tid=6484)



ஊமை விழி....! - kuruvikal - 11-08-2004

ஓசையின்றி எழுதிய
ஓராயிரம் சரித்திரங்கள்
ஓயாமல் படம்பிடித்த
ஒழிவுமறைவில்லாக் காட்சிகள்
ஓங்கிய ராஜ்சியங்கள்
ஓரிரவுள் சரித்த வரலாறுகள்
ஒருவனுக்குள் ஒருத்தியை
ஒருத்திக்குள் ஒருவனை
ஓங்க வைத்து தொலைத்த நிம்மதிகள்
ஓயாமல் அடுக்கலாம் என் சாதனைகள்....!
ஓங்கும் வீரம்
ஓரிருவருக்குள் என்னோடு
ஓசையின்றி ஒருத்தன்
ஓரமாயிருந்து மனமாள
ஒடுங்கிடுவேன் அவன் முன்...!
ஒய்காரம் காட்டி
ஓரங்கட்டும் கன்னியோடும் என்னுறவு
ஓயாமல் போராடி
ஓங்கும் கள வீரனும் என்னுறவு
ஓர் நிலை நின்று
ஓங்கும் மாணவனும் எந்தோழன்
ஓர் நிலை இன்றி
ஓடி அலையும் காமனும் என்னோடு...!
ஓய்வின்றி உழைக்கும் ஒருவனுக்கு
ஓர் வைத்தியன்
ஓடி உழைத்து
ஓயாமல் குடித்தழிக்கும்
ஒருவன் உண்மை சொல்வேன்
ஒழிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்...!
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி
ஒருவேளை என்னுதவி
ஒரு தவறானால்
ஓயாமல் கலங்கிடுவேன்
ஒருத்தி அதையே
ஒரு தயவுதேடித் தப்பாக்கிக் கொள்கிறாள்
ஓ.... அங்கு நான்
ஊமை விழி
அவள் அநியாயம் சொல்ல முடியா
ஊமை....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/eye.gif' border='0' alt='user posted image'>

நன்றி : http://kuruvikal.yarl.net/


- hari - 11-08-2004

அடேங்கப்பா! இதை அப்படியே மூச்சுவிடாமல் பாடினால் நல்லாயிருக்கும். குருவிகளே அருமை! வாழ்த்துக்கள்


Re: ஊமை விழி....! - வெண்ணிலா - 11-08-2004

kuruvikal Wrote:ஒளிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி

குருவிகள் அண்ணா கவிதை சூப்பர். கவிதைகள் கடனுக்கும் விடுகிறீர்களா? இல்லை ஹரியண்ணா கேட்டிருந்தார் அதுதான்


- hari - 11-08-2004

தங்கை வெண்ணிலா, அவருடைய கடன் எனக்கு தேவையில்லை, கடன் வேண்டுவது தன்மானத்துக்கு இழுக்கு, அதனாலா நானே கவிதையை சுட்டுட்டன்


- tamilini - 11-08-2004

Quote:ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
சத்தியமாய் கவிதை புரியல.. இந்த ஜென்மத்திற்கு ஒன்று புரியுது.. யாரையோ கதைமுடிக்க கங்கனம் கட்டியாச்சு.. வாழ்த்துக்கள்.. ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-08-2004

Quote:நானே கவிதையை சுட்டுட்டன்
நல்ல தன்மானம் தான்.. :twisted:


- kuruvikal - 11-08-2004

ஊமை விழி கொண்டு... கண்டு... படித்துப் பாராட்டி கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: ஊமை விழி....! - kavithan - 11-09-2004

vennila Wrote:
kuruvikal Wrote:ஒளிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி

கவிதைக்கு வாழ்த்துகள் குருவிகளே <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

யாரை முடிக்க போகிறீர்கள்.... நான் இல்லை தானே ...? Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-09-2004

kavithan Wrote:
vennila Wrote:
kuruvikal Wrote:ஒளிக்க நினைக்கும் ஒரு மனதை
ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்
ஓயாமல் தொடரும் என்சேவை
ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்
ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி

கவிதைக்கு வாழ்த்துகள் குருவிகளே <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

யாரை முடிக்க போகிறீர்கள்.... நான் இல்லை தானே ...? Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதையை சுட்ட என்னையோ தெரியவில்லை ! Cry