07-26-2003, 07:41 PM
யாழ் முகப்பிலிருந்து அஜீவனின் கட்டுரையிலிருந்து
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமோ என்றால் வாய்மூடி மௌனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழ்படங்களை தவிர்த்தால் நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம் வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும். நாம் சத்தமிடும் கலை கலாச்சாரம் புலம்பெயர் நாடுகளில் என்னாவது? அநேகமான படித்த தமிழர்கள் கௌரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்து நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட அநேக தமிழர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான். அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும் இவர்களுக்குப்பிறக்கும் எதிர்காலக் குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிடுவார்கள்.
இக்கருத்து கலாச்சாரத்தை காக்க முற்படுவதான சாயத்தை பூச எத்தனித்தாலும், ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாவதில்லை என்பதுபோல் நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை.
எனவே தென்னிந்திய - மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பதை விட்டு, அவற்றிலிருந்து சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து ஆதரவளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும்.
உங்கள் கருத்துகளைத்தொடர்ந்து இன்னும் சில பகுதிகளை இங்கு இணைத்தல் பொருத்தமாயிருக்கும்என்றெண்ணுகிறேன்

-