11-06-2004, 11:07 AM
<img src='http://www.thatstamil.com/images25/cinema/aish3-290.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/cinema/dhanush-250.jpg' border='0' alt='user posted image'>
<b>தீபாவளி: நள்ளிரவில் டிரஸ் வாங்கிய தனுஷ், ஐஸ்வர்யா !</b>
திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகர் தனுஷûம், ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவும் சென்னையில் உள்ள பிரபல துணிக் கடையில் நள்ளிரவில் வந்து புதிய உடைகளை வாங்கிச் சென்றனர்.
தனுஷக்கும், ஐஸ்வர்யாவுக்கும் வருகிற 18ம் தேதி ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த தனது நண்பரான டாக்டர் ஒருவரின் மகனுக்கே தனது மகளை திருமணம் செய்து வைக்க தீவிரமாய் இருந்தார் ரஜினி. அந்த வாலிபர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனால், தனுஷையே திருமணம் செய்வேன் என ஐஸ்வர்யா திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இத் திருமணத்துக்கு ரஜினி ஒப்புக் கொண்டுவிட்டார்.
இப்போது திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் திருமணத்திற்குத் தேவையான உடைகளை வாங்க தனுஷம், ஐஸ்வர்யாவும் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஆர்.எம்.கே.வீ. என்ற பிரபல ஜவுளிக் கடைக்கு வந்தனர்.
இரவு 11.45 மணியளவில் இருவரும் வந்தனர். கடை 11 மணிக்கு பூட்டப்பட்டுவிட்டாலும், இவர்களுக்காக கடையின் உரிமையாளர்கள் ஊழியர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
உஸ்மான் ரோட்டில் கூட்டம் எல்லாம் கலைந்த பிறகு நள்ளிரவில் இருவரும் வந்தனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக ரஜினி மற்றும் தனுஷின் தரப்பில் இருந்து 3 கார்களில் ஆட்கள் வந்திருந்தனர். பலத்த பாதுகாப்புடன் வந்த இருவரும் கடை முழுக்க சுதந்திரமாக நடமாடினர்.
சுமார் ஒரு மணி நேரம் கடையைச் சுற்றி வந்து தங்களுக்கும் வீட்டினருக்கும் உடைகளை அள்ளிக் கொண்டு 12.45 மணிக்கு அங்கிருந்து கிளம்பினர்.
இதற்கிடையே மகள் திருமணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்க ரஜினி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக பல லட்சம் ரூபாய்க்கு இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஆதரவற்ற சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த வாண்டுகளுக்கு பட்டாசுகளும் வழங்க ரஜினி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகவும் பெரிய அளவில் ஆர்டர் தரப்பட்டுள்ளதாம்.
<b>20ம் தேதி வரவேற்பு</b>
இந்தத் திருமணத்தை மிக எளிமையாக நடத்த முடிவு செய்துள்ள ரஜினி தனது குருவான கே.பாலசந்தர், நண்பரான கமல் ஆகியோர் உள்பட மிகக் குறைவானவர்களையே அழைத்துள்ளார்.
ஆனால், 20ம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாகவே நடத்த முடிவு செய்துள்ளார். இதில் கலந்து கொள்ள முதல்வர் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ரஜினியே நேரில் அழைப்பு வைப்பார் என்று தெரிகிறது.
thatstamil.com
இது எங்களுக்கு அவசியமா என்று கேட்பீர்கள்...தனுஷ் ரசிகர் ரசிகைகளுக்காக...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>