11-05-2004, 08:09 PM
Suji Wrote:தமிழ்நாதத்தின் நீண்டகால அபிமானி என்ற வகையில் இந்தமடலை வரைகின்றேன்.
உங்கள் இணையம் ஈழத்திற்கு ஆதரவான இணையம் என்ற கருத்தில் எனக்கு துளி கூடசந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு மிகவும் வேலைப்பழுவின் மத்தியில் நீங்கள் இந்த இணையத்தை நடத்தி வருவதையும் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் அறிவர். அந்தவகையில் உங்கள் இணையத்தில் இராசரத்தினத்தின் விடுதலைக்கு வந்த செய்தியைப் பார்த்து எங்கள் மின்னஞ்கல் முகவரிகளை அனுப்பிவைத்தோம். ஆனால் பின்பு அது டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரதுரை என்ற துரோகியின் வேலை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தமிழனின் விடுதலைக்காக மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த தமிழ்மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் கண்ட இணையங்களில் வந்திருந்தால் அவற்றை
பொதுபடுத்தியிருக்கமாட்டோம். தமிழ்நாதத்தின்மேல் உள்ள நம்பிக்கையில் இதனைச் செய்துள்ளோம். ஆதலால் உங்கள் இணையத்தின்மேல் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு
இருக்கின்றது. (திடீரென அந்த இணைப்பு வேறு உங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.)
துரோகிகளுக்கு துணைபோனதாக கவலைப்படும் எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியதும் இதற்கு
எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்கள் முன்னால் உள்ளது. தமிழ்நாதமே நீ மௌனமாக இருக்கப்போகின்றாயா?
அல்லது ஏதாவது செய்யப்போகின்றாயா?
ஃ இது சம்மந்தமாக டென்மார்க் தூதுவரலாயங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவர்கள் தங்கள் முகவரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று முறைப்பாடு கொடுக்க முடியுமா? அப்படியாயின் அதற்கான புகாரை ஆங்கிலத்தில் அல்லது டென்மார்க் மொழியில் இணையத்தில் தருவீர்களர்? உங்கள் மௌனம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தயவுசெய்து தமிழ்நாதத்தில் பதில் தாருங்கள்
ன இந்த மடலின் பிரதியை யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் இணைக்கினறேன்.
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
ஓசியில பொலிடோல தந்தாலும் குடிப்பியள் போல-
இதே தமிழ்நாதம் தன்னை பார்வயிட மாதம் 5$ எண்டு சொல்லியிருந்தால் ஆ..தூ உதயார் பாப்பாங்கள் எண்டு சொல்லுவியள்
ஊடகங்களில் தெரியாமல் தவறுநடப்பதும் அது தெரிந்ததும் தெரியாதமாதிரியே விடுவதும் அரசியலில் சகஜமப்பா!
உதரணங்கள் இருக்கிறது ஆனால் அவை இந்த தலைப்புக்கு பொருந்தாது.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

