Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்கு பின்னால்...
#21
<span style='color:blue'>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 9
_ பெ.கணேஷ் _


தமிழ் போன வாரம் உங்களுக்கு உதவி இயக்குனர்களோட கஷ்டம் தெரிஞ்சது இல்லையா? இந்த வாரம் அசிஸ்டெண்ட் கேமராமேன்களோட கஷ்டத்தைப் பத்தி சொல்றேன்.

தமிழ் : அதோ கேமராவுக்கு பக்கத்துலயே இரண்டுபேர் இருக்காங்களே அவங்கதான் கேமரா அசிஸ்டெண்டா?

<img src='http://www.kumudam.com/cinema/Camera2.jpg' border='0' alt='user posted image'>ஆமா அவங்க கேமரா அசிஸ்டெண்ட் மட்டும்தான். அசிஸ்டெண்ட் கேமராமேன்கள் இல்லை. என்ன குழப்பமா இருக்கா? அவங்க கேமராவோட சூட்டிங்கிற்கு வர்றவங்க. புரியும்படி சொல்லணும்னா கேமராவிற்கு பாதுகாப்பே அவங்கதான் கேமராக்களை வாடகைக்கு விடற அவுட்டோர் யூனிட்ல இவங்க வேலை பார்ப்பாங்க. அந்த அவுட்டோர் யூனிட் எந்த படத்திற்கு, கேமராவை அனுப்பினாலும் இந்த இரண்டு பேர்தான் ஷடை்டிங் ஸ்பாட்டுக்கு கேமராவுடன் செல்வார்கள். ஷடை்டிங் முடிந்து பொறுப்பாக மீண்டும் கேமராவை கொண்டு வந்து அவுட்டோர் யூனிட்டில் ஒப்படைத்துவிட்டுதான் வீட்டுக்குச் செல்வார்கள்.

ஷடை்டிங் ஸ்பாட்டில், ஒரு கேமரா அசிஸ்டெண்ட்.. கேமராவின் அருகே இருந்து பாலோ ஃபோக்ஸ் பார்ப்பார்.

அதாவது ஒரு டேக்கில் லாங் ஷாட்டிலிருந்து குளோசப் செல்வதாக வைத்துக்கொள்வோம். அப்படி குளோசப் போவதென்றால் டேக் எடுப்பதற்கு முன்பாக சூம்மிலிருந்து குளோஸ் சென்று அந்த நடிகரின் கண்களை மையப்படுத்தி லென்ஸை போகஸ் அமைத்து _ அதை கேமராவின் அப்ரச்சர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிக்கு மேலே வெள்ளை நிற பென்சிலால்
குறித்துக்கொள்வார்கள்.

இப்போது காட்சியை படம்பிடிக்கும்போது... கேமராமேன் மெல்ல லாங் ஷாட்டிலிருந்து குளோசப்க்கு போகப் போக... அந்த கேமரா அசிஸ்டெண்ட் போகஸை மாற்றிக்கொண்டே வந்து அவர் பென்சிலில் குறித்து வைத்த இடத்தில் சரியாக நிறுத்துவார். இதனால் அந்த காட்சி தெளிவாக அமையும்.
<img src='http://www.kumudam.com/cinema/lense_anim.gif' border='0' alt='user posted image'>
இப்படி சூம் லென்ஸ் உபயோகிக்கும்போது அவருக்கு இப்படி பாலோ ஃபோகஸ் வேலை இருக்கும். அடுத்து 40_75_100 என நார்மல் லென்ஸ்களை உபயோகிக்கும்போது, கேமராவிற்கு நடிகர் நிற்கும் இடத்திற்குமாக இடைவெளியை டேப்பினால் அளந்து அதற்கு ஏற்றவரை அப்ரச்சரை சரிபடுத்த உதவுவார்கள்.

இதில் இன்னொரு கேமரா அசிஸ்டெண்ட்டின் வேலை என்று பார்த்தால் _ ஷடை்டிங்கின்போது ஒவ்வொரு ஷாட்டிற்கும் கேமரா இடம் மாற அங்கங்கே கொண்டு செல்வது அவர் வேலை. 435 கேமரா எனில் அதோடு மானிட்டரும் சிடி ரிக்கார்டிங் அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அப்படி சிடி மானிட்டர் உபயோகிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும் வேலையையும் மானிட்டரையும் அவர் கவனித்துக் கொள்வார்.

தமிழ் : ஓ... இப்ப புரிஞ்சுடுச்சு கேமரா கூடவே வர்றவங்க கேமரா அசிஸ்டெண்ட். அப்படின்னா கேமராமேன்களுக்கு என்ன வேலை?

தமிழ் சினிமாவில் அசிஸ்டெண்ட் கேமராமேன்கள் நிலையும் கடினமானதுதான். இருந்தாலும் உதவி இயக்குனர்களின் வேலையை விட இவர்கள் வேலையை பரவாயில்லை எனலாம்.

எப்படியெனில் உதவி இயக்குனர்கள்கூட சமயங்களில் கேமராமேனின் முகச்சுழிப்புக்கு ஆளாகுவார்கள். ஆனால் கேமரா அசிஸ்டெண்ட்களை இயக்குனர்கூட மரியாதையாகத்தான் நடத்துவார்.
<img src='http://www.kumudam.com/cinema/Camera1.jpg' border='0' alt='user posted image'>
ஒரு படத்திற்கு கேமராமேன் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்து ஐந்து அல்லது ஆறு உதவி கேமராமேன்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த், ஜீவா போன்ற பெரிய கேமராமேன்களிடம் ஐந்து ஆறு பேர் உதவியாளர்களாக வேலை செய்வார்கள்.

உதவி கேமராமேன்களில் முதல் உதவியாளர் இரண்டாவது என பாகுபாடு கிடையாது. ஆனால் சீனியர் என்றால் அவர் ஆபரேடிவ் கேமராவான சில சமயங்களில் வேலை செய்வார்.

அதாவது பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் இரண்டு கேமராக்கள் உபயோகப்படுத்தும்போது கேமராமேன் ஒரு கேமராவையும், முதன்மை கேமரா அசிஸ்ªண்ட் ஒரு கேமராவையும் ஆபரேட் செய்வார்கள்.

அதேபோல் சீனியர் கேமரா அசிஸ்டெண்டுகள் என்கிறபோது ஒரு சில முக்கியமான காட்சிகளின்போது லைட்டிங் போன்றவற்றை கவனித்துக்கொள்வார். அதோடு முதல் கேமரா அசிஸ்டெண்ட் லைட்டோட அளவைச் சொல்கிற ஒளிஅளவுமானி என்கிற மீட்டரில் வெளிச்சம் எவ்வளவு குறைவாக இருக்கிறது? எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை சொல்ல கேமராமேன் அதற்கு தகுந்த மாதிரி அங்கிருக்கும் வெளிச்சத்திற்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றியமைப்பார்.

தமிழ் : அப்ரச்சர் என்பது என்ன? கேமராவின் அப்ரச்சரின் உபயோகம் என்ன?

<img src='http://www.kumudam.com/cinema/aperture.jpg' border='0' alt='user posted image'>
‘‘ஒரு கேமரா இயக்கும் செயல் என்பது இரண்டு விஷயங்களில் அடங்கியிருக்கிறது. ஒன்று அப்ரோச்சர் இன்னொன்று கேமரா ஸ்பீடு.’’

இதில் அப்ரச்சர் என்பது ஒளியை கேமராவிற்குள் எடுத்துச் சொல்லும் துளையாகும்.

அதாவது அப்ரோச்சர் பெரிதாக, பெரிதாக அதிகமான ஒளி கேமராவவிற்குள்ளே செல்லும். குறைய குறைய குறைவான ஒளி கேமராவிற்குள்ளே செல்லும்.

இந்த அப்ரச்சரையும், வேகத்தையும் கேமராவில் உபயோகப்படுத்துகிற பிலிமின் ஒளி கிரகிக்கும் தன்மையை பொறுத்து மாற்றியமைக்க வேண்டும்.

<img src='http://www.kumudam.com/cinema/apertureillus.jpg' border='0' alt='user posted image'>
அதாவது ஏஎஸ்ஏ 200 என்கிற பிலிம் என்றால் அந்த பிலிமிற்கு தகுந்தவாறு அதனுடைய ஒளி கிரகிக்கும் தன்மைக்கு தகுந்தவாறு அப்ரச்சரை திறந்து வைக்கவேண்டும். அப்போதுதான் ஒளியின் அடர்த்தி அதாவது டென்சிட்டி சரியாக இருக்கும். அப்படியில்லாமல் ஒளி அதிகமாக கேமராவிற்குள் சென்றால் ஓவர் எக்ஸ்போஸ் ஆகி படம் வெளீர் என ஆகிவிடும். அதேபோல் குறைவான ஒளி கேமராவிற்குள் சென்றால் அந்த பிலிம்க்கு தகுந்த ஒளி கிடைக்காததால் அண்டர் எக்ஸ்போஸ் ஆகி படம் கறுப்பாகிவிடும்.

தமிழ் : கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க?
<img src='http://www.kumudam.com/cinema/Camera4.jpg' border='0' alt='user posted image'>
அதாவது தமிழ். இந்த அப்ரச்சரும், ஸ்பீடுதான் கேமரா இயக்கத்தின் முக்கிய காரணம்னு சொன்னேன் அல்லவா.. ஸ்டில் கேமராக்களில் நாம் ஒளியைப் பற்றி, பிலிமைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பிலிமிற்கு தகுந்தவாறு ஸ்பீடை கூட்டவோ _ குறைக்கவோ முடியும். ஆனால் சினிமாவில் அப்படியில்லை; ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்கிற வேகத்தில்தான் இயக்கவேண்டும். ஏனென்றால் தியேட்டர் புரொஜக்டர்களில் ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்பது நிர்ணயிக்கப்பட்ட வேகம் ஆகும். அதனால் கேமராவில் அதே வேகத்தில்தான் இயக்கவேண்டும்.

வேகம் என்பது மூவி கேமராவில் நிலையானது என்பதால் நாம் ஸ்பீடை மாற்ற முடியாது. அதற்கு பதில் ஒளியின் அளவிற்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றியமைக்கலாம் என்பதால் ஒளியின் அளவை சொல்லும் மீட்டரின் மூலம் அங்கே இருக்கும் ஒளியை அறிந்து, அந்த ஒளிக்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றுவார்கள்.

தமிழ் : டெப்த் ஆப் பீல்டுனு சொல்றாங்களே அது என்ன?
<img src='http://www.kumudam.com/cinema/mission.gif' border='0' alt='user posted image'>
கேமராவின் அருகிலோ, தூரத்திலோ பிரேமில் துள்ளியமா தெரிகிற பகுதியைத்தான் டெப்த் ஆப் பீல்டு என்பார்கள்.

இந்த தூரம் அதிகம், குறைவு என்பது எப்படி மாறுபடும் தெரியுமா? அப்ரச்சரை குறைக்க குறைக்க அதாவது துளையின் அளவை சிறிதாக்க, சிறிதாக்க டெப்த் ஆப் பீல்டு என்பது அதிகமாகும். அதாவது துள்ளியம் அதிகமாகும். அப்ரச்சரின் அளவு பெரிதாக, பெரிதாக அதாவது துளையின் அளவு பெரிதாக, பெரிதாக, டெப்த் குறையும்.

அப்ரச்சரில் 1.4, 2, 2.8, 4, 5. 6, 8, 11, 16, 22 என பல்வேறு எண்களை குறிக்கப்பட்டிருக்கும். அப்ரச்சரின் அதிகபட்ச பெரிய துளையாக 1.4ம் குறைந்தபட்ச துளையாக 22ம் இருக்கும். அதேபோல் கேமராவின் அப்ரச்சரின் அளவை பொறுத்துதான் கேமராவின் வேகம் நிர்ணயிக்கப்படும். அப்ரச்சர் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கேமரா வேகமும் அதிகமாகும்.

தமிழ் : சரி கேமரா ஸ்பீடுங்கிறது என்ன?
<img src='http://www.kumudam.com/cinema/Camera3.jpg' border='0' alt='user posted image'>
கேமரா இயக்கும் வேகம் என்பது கேமராவில் பிலிம் பதிவாகும் வேகத்தை குறிப்பதாகும். உதாரணத்துக்கு பிலிம் கேமராவில் 1/48 ஃப்ரேம் என்கிற வேகத்தில் அதாவது ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்கள் என்கிற வேகத்தில் படம் பதிவாகிறது.

இது நிலையான வேகம் ஆனால் ஸ்டில் கேமராவில் அப்படியல்ல அங்கே நாம் வேகம் கூட்டவோ குறைக்கவோ முடியும். உதாரணத்திற்கு நிலையான ஒரு பொருளை படம்பிடிக்க 1/60 ஸ்பீடு போதுமானது அதே நடந்துபோகும் ஒரு நபரை படம்பிடிக்க 1/125 ஸ்பீடு தேவைப்படுகிறது. சைக்கிள் ஓட்டும் நபரை படம்பிடிக்க 1/250 ஸ்பீடும், காரில் போகிறவரை படம்பிடிக்க 1/500 ஸ்பீடும் தேவைப்படுகிறது.

ஆனால் சினிமா கேமராவிற்கு எல்லாமே 1/48 ஸ்பீடுதான். அதனால் அப்ரோச்சர் மூலமாக மட்டுமே சினிமாவில் டெப்த் ஆல் பீல்டை அதாவது துள்ளியத்தை கொண்டுவர முடியும். அதற்குதான் உதவி கேமராமேன்கள். ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒளியின் அளவைப் பார்த்து அதற்கு தகுந்த மாதிரி அப்ரச்சரின் அளவை கூட்டியோ, குறைத்தோ படம்பிடிக்கிறார்கள்.

என்ன தமிழ் இப்ப ஓரளவிற்கு கேமராவின் இயக்கமும் உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

அடுத்தவாரம் எடிட்டிங் பற்றி பார்க்கலாம்.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-16-2004, 11:39 AM
[No subject] - by AJeevan - 09-16-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 09-16-2004, 08:59 PM
[No subject] - by kavithan - 09-16-2004, 10:13 PM
[No subject] - by AJeevan - 09-17-2004, 12:31 AM
[No subject] - by AJeevan - 09-20-2004, 02:52 AM
[No subject] - by AJeevan - 09-24-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 09-24-2004, 04:02 PM
[No subject] - by AJeevan - 09-29-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 04:13 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 07:51 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:08 AM
[No subject] - by tholar - 10-03-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 10-30-2004, 09:50 PM
[No subject] - by AJeevan - 10-30-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:08 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:16 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:54 AM
[No subject] - by tamilini - 11-06-2004, 11:59 AM
[No subject] - by AJeevan - 11-13-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)