Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்கு பின்னால்...
#19
<b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 7</b>
_ பெ.கணேஷ் _

--------------------------------------------------------------------------------


பார்வை (look) அதாவது கேமரா லுக் என்பது என்ன?

நாம் ஒரு காட்சியை படம் பிடிக்கும்போது அதை பலவகையான ஷாட்களில் படம்பிடிக்கலாம் என்பதை முன்பே விரிவாகச் சொன்னேன். அப்படி மிட் ஷாட், லாங், குளோசப் ஷாட் என மாறி மாறி படம்பிடிக்கும்போது அந்த ஷாட்களில் நடிக்கிற நடிகர்களின் பார்வை என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

அதாவது ஒவ்வொரு ஷாட்டிற்கும் தகுந்தவாறு கேமரா இருக்கும் நிலை, கோணத்தைப் பொறுத்து நடிகர்களின் பார்வை சரியாக அமையவேண்டும்.

உதாரணத்திற்கு மாஸ்டர் ஷாட்டில் (லாங் ஷாட்டில்) வலதுபுறமாக பார்த்துக்கொண்டிருந்த ஒரு நடிகருக்கு எதிரே அவருக்கு முன் மிக நேர் கோணத்திற்கு கேமரா வருமானால் அப்பொழுது கேமரா இருக்கும் நிலையை பொறுத்து அவர் கேமராவிற்கு வலப்புறமாகவோ... இடப்புறமாகவோ அதில் எது சரியான பார்வை என்பதை உணர்ந்து (பார்வை) லுக் தந்ததால்தான் அடுத்தடுத்து வருகிற ஷாட்களின் கண்டினியுட்டி சரியாக இருக்கும்.

அதை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு அரைவட்ட கோணத்தில் ஆறு நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிரே நடுப்புள்ளியில் கேமரா இருக்கிறது. இப்போது கேமராவிற்கு இடப்புறமாக இருக்கும் நடிகர் வலப்புறமாக இருக்கும் நடிகர்களையும், கேமராவிற்கு வலப்புறமாக இருக்கும் நடிகர் இடப்புறமாக இருக்கும் நடிகர்களை பார்த்து பேசுகிறார் என வைத்துக்கொள்வோம் இது மாஸ்டர் ஷாட் அதாவது லாங் ஷாட்.
<img src='http://www.kumudam.com/cinema/cam1.jpg' border='0' alt='user posted image'>

இதற்கு அடுத்த ஷாட்டில் இடப்புறம் இருக்கும் ஒரு நடிகரின் குளோசப் ஷாட்டோ அல்லது ஓவர் ஷோல்டர் ஷாட்டோ வரவேண்டுமென்றால் கேமராவை வலப்புறமா நடிகரின் இடத்திற்கு மாற்றவேண்டும்.
<img src='http://www.kumudam.com/cinema/cam2.jpg' border='0' alt='user posted image'>

இப்போது வலப்புறமாக இருந்த நடிகரை பார்த்து இடப்புறமுள்ள நடிகரின் வசனம் எடுக்கப்படுகிறது என்றால் அவரது லுக் கேமராவின் வலது பக்க எட்ஜை அதாவது லென்ஸ் கவரின் எட்ஜை பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் மிகச் சரியாக எதிரே இருந்த நபரை பார்த்து பேசுவது போலிருக்கும்.

அப்படியில்லாம் ஓவர் ஷோல்டர் ஷாட் என்றால் கேமரா நிற்கும் இடத்தில் முன்பு இருந்த நடிகரின் இடதுபக்க தோள்பட்டையின் வழியே எதிரே இருக்கும் நடிகரின் குளோப் அதாவது ஓவர் ஷோல்டர் ஷாட் எடுக்கலாம். அப்போது அவரது லுக். ஷோல்டரை காண்பிக்கும் நடிகரின் வலது காதை பார்க்கும்விதமாக இருக்கவேண்டும். அப்போதுதான் மேட்ச் ஆகும்.

அதேபோல் மாஸ்டர் ஷாட்டில் வலது பக்கமாக இருந்த நபரின் குளோசப் என்றால் கேமரா முன்பிருந்த நிலையிலிருந்து இடதுபுறமாக நகர்ந்து இடதுபுறம் இருக்கும் நடிகரின் இடத்திற்கு செல்லவேண்டும்.
<img src='http://www.kumudam.com/cinema/cam3.jpg' border='0' alt='user posted image'>

இப்போது எதிரே இருக்கும் வலப்புற நடிகரின் குளோசப்ஷாட் எடுக்கவேண்டும் என்றால் அவர் கேமரா லென்ஸ் கவரின் இடது பக்க எட்ஜை பார்க்கவேண்டும்.

அதேபோல் ஓவர் ஷோல்டர் ஷாட் என்றால் இடதுபக்கம் இந்த நபரின் வலது தோள் வழியாக எதிரே இருக்கும் நபரின் குளோசப் அதாவது ஓவர் ஷோல்டர் ஷாட் எடுக்கவேண்டும். அப்போது அவரது லுக் தோள்கொடுக்கும் நடிகரின் இடது காதை பார்க்கும் விதமாக இருக்கவேண்டும் அப்போதுதான் மேட்ச் ஆகும்.

அதேபோல் லாங் ஷாட்டில் அதாவது மாஸ்டர் ஷாட்டில் ஒரு நடிகர் எந்த நடிகை பார்த்துக்கொண்டிருக்கிறார் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறார் அவர் பார்வை யார் மீது எங்கே இருந்தது என்பதை கூர்மையாக கவனிக்கவேண்டும்.

அப்போதுதான் அடுத்து அதே நடிகரின் குளோப் ஷாட் தொடர்ச்சி ஷாட்டை எடுக்கும்போது அப்போது கேமரா நிற்கும் நிலை (பொஷிசன்) கோணம் இவற்றைப் பொறுத்து அவரது பார்வையை மிக சரியாக இருக்கும்படி செய்யவேண்டும்.

பார்வை மாறினால் அடுத்து அந்த ஷாட்டே வீணாகிவிடும் சரி. கேமராவிற்கு இடதுபுறமாக லுக் தரவேண்டிய நடிகர் தவறுதலாக வலதுபுறமாக லுக் கொடுத்துவிட்டார் என்ன செய்வது? அதற்கு மாற்று வழியே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது நெகடிவ்வில் உள்ள பிரேமை திருப்பிப்போட்டு பாஸிட்டிவாக மாற்றினால் இடதுபுறமாக லுக் வந்துவிடும் இது. ஆண் நடிகர்களை பொறுத்தவரையில் சாத்தியம். பெண் நடிகை என்றால் அந்த காட்சியில் புடவை அணிந்திருந்தால் ஷாட்டை திருப்பிப்போகும்போது புடவை தலைப்பு வலப்புறமாக வந்துவிடும். அதனால் மேட்ச் ஆகாது.

எனவே எதற்கு சிரமம்? பார்வை என்பதை காட்சி எடுக்கும்போதே கொஞ்சம் கவனத்தில் வைத்து எடுத்தால் பிரச்னையே இல்லை.

தமிழ் : நீங்க சொல்றது சரிதான் ஷடே்டிங்லயே அதை கவனிச்சிட்டா பிரச்னை இல்லைதான். சரி நீங்க எப்ப என்ன ஷடை்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிக்கிட்டு போகப்போறீங்க?

என்னப்பா இது நாம இப்ப ஸ்டுடியோ வாசல்ல நின்னுதானே பேசிக்கிட்டு இருக்கோம். வா உள்ளே போகலாம்.

இதுக்குபேர்தான் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. இங்க கிட்டதட்ட ஒன்பது ப்ளோர்கள் இருக்கு அதாவது ப்ளோர்ங்கிறது உள் படப்பிடிப்பு அரங்கம். இதற்குள்ளே நாம என்ன வேணா செட் போட்டுக்கலாம் பிரமாண்டமான பங்களா, மலைப்பாங்கான இடம், மூங்கில் காடு, குடிசைகள் உள்ள கிராமத்தோட தெருன்னு எதை வேணா போடமுடியும்.

அதே மாதிரி பாடல் காட்சிகளுக்கான விதவிதமான செட்கள், சண்டை காட்சிக்கான பழைய மெக்கானிக் ஷாப் பாழடைந்த மண்டபம்னு எந்த செட் வேணா அமைச்சுக்கலாம்.

அந்த செட்களுக்கென்று நாம் ப்ளோர் வாடகை தினசரி கொடுக்கவேண்டும். அதுபோல ஆர்ட் டைரக்டரின் உதவியால் நாம் விரும்பிய செட்டை போடமுடியும்.

உள்ளே வா... அங்கே மேலே பரண் போன்ற இடத்தில் லைட்டுடன் இருக்கிறார்களே அவர்கள்தான் லைட்மேன்கள் இந்த செட்டிற்கு ஒளியூட்டுபவர்கள் அவர்கள்.

தமிழ்: ஷடே்டிங்கில் எத்தனை பேர் வேலை பார்ப்பார்கள்?

டைரக்டர், உதவி டைரக்டர்கள், கேமராமேன், உதவி கேமராமேன்கள், கேமரா அசிஸ்டென்ஸ், ஆடிட் டைரக்டர் ஆர்ட் அசிஸ்டெண்ட், மேக்கப்மேன், ஏர்டிரஸ்ஸர், டச்சப்பாய் புரொடக்ஷன் மேனேஜர், புரொடக்ஷன் உதவியாளர்கள், லைட்மேன்கள் கிரேன் ஆபரேட்டர்கள், டிராலி தள்ளுபவர்கள், காஸ்ட்யூமர், உதவி காஸ்ட்யூமர், நாகரா இயக்குபவர். மைக் உதவியாளர் போன்ற தொழில் உட்பட பணியாளர்களோடு ஹீரோ, ஹீரோயின் நடிகர், நடிகையர், துணைநடிகர்கள் நடிகர்களின் உதவியாளர்கள் வாகனம் ஓட்டுபவர்கள், ஜெனரேட்டர் ஆபரேட்டர், தயாரிப்பாளர் என்று கிட்டத்தட்ட அறுபதிலிருந்து நூறு பேர் வரை ஷடே்டிங்கில் வேலை செய்வார்கள்.

பாடல் சண்டைக்காட்சி என்றால் அதற்கான மாஸ்டர்கள் நடிகர்கள் என்று பட்டியல் நீளும்.

இங்கே நான் சொன்ன அத்தனை கலைஞர்களுமே மிகக் கடுமையாக உழைப்பவர்கள். அவரவர் தொழில்களுக்கு ஏற்ப அவர்களது உழைப்பு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். சினிமாவில் சுலபம் என்று எந்த தொழிலும் இல்லை. உட்கார்ந்தபடியே நாகரா (டேப்)பை இயக்கும் நபர்கூட அடிக்கடி எழுந்து இடம்மாறி, இடம்மாறி உட்கார்ந்துதான் செய்யவேண்டும். அதேபோல்தான் மெயின் சுவிட்போர்டு அருகே உட்கார்ந்து இருக்கும் எலக்ட்ரீஷியன் கூட அவர் பங்குக்கு கடுமையாக உழைத்தே ஆகவேண்டும்.

சரி தமிழ். என்ன உன் முகம் சரியா இல்ல? நான் சொன்ன இத்தனை பேரும் அப்படி என்ன பெரிசா வேலை பார்க்கிறாங்கன்னு கேட்க வர்ர... அதானே... சரி அவங்க அவங்க என்ன வேலைப் பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா உனக்கு அந்த கேள்வி வராது.

முதல்ல டைரக்டர்ல இருந்து ஆரம்பிக்கிறேன். டைரக்டர்தான் கேப்டன் ஆப் தி ஷிப். அவருக்கு கீழே இரண்டு அசோசியட் டைரக்டர்ஸ், நான்கு அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் வேலை பார்ப்பாங்க. சினிமாவுலயே அதிகம் சம்பளம் கிடைக்காத பாவப்பட்ட ஜென்மங்கதான் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அவங்களோட கஷ்டத்தை அடுத்தவாரம் சொல்றேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-16-2004, 11:39 AM
[No subject] - by AJeevan - 09-16-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 09-16-2004, 08:59 PM
[No subject] - by kavithan - 09-16-2004, 10:13 PM
[No subject] - by AJeevan - 09-17-2004, 12:31 AM
[No subject] - by AJeevan - 09-20-2004, 02:52 AM
[No subject] - by AJeevan - 09-24-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 09-24-2004, 04:02 PM
[No subject] - by AJeevan - 09-29-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 04:13 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 07:51 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:08 AM
[No subject] - by tholar - 10-03-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 10-30-2004, 09:50 PM
[No subject] - by AJeevan - 10-30-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:08 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:16 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:54 AM
[No subject] - by tamilini - 11-06-2004, 11:59 AM
[No subject] - by AJeevan - 11-13-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)