11-04-2004, 12:04 PM
[b]அண்ணா பல்கலையின் தமிழ் சர்ச் என்ஜின் 'கழுகு
இன்டர்நெட்டில் தமிழில் தகவல்களைத் தேடித் திரட்ட உதவும், புதிய தமிழ் சர்ச் என்ஜினை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
கழுகு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த என்ஜினை பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
தமிழ் இணையத் தளங்களில் உள்ள தகவல்களைத் தேடி, திரட்டி, பட்டியலிடும் இந்த என்ஜின்.
பல்வேறு இணையத் தளங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை (Font) பயன்படுத்தி வரும் நிலையில், எல்லா வகையான தமிழ் எழுத்துருக்களையும் அடையாளம் காணும் திறன் கொண்டது இந்த கழுகு சர்ச் என்ஜின்.
இத் தகவலை கழுகு என்ஜினை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மொழியல் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் தகவல்களைத் தேடி, அதைத் தமிழில் மொழி பெயர்க்கும் நவீன சாப்ட்வேரையும் உருவாக்கியுள்ளனர்.
Trans-lingual information accessing tool என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர், பிற மொழிகளில் உள்ள மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய திறன் கொண்டது என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் ஷோபா நாயர் தெரிவித்தார். :wink:
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>