11-04-2004, 02:32 AM
Quote:சிறீறமணன் அண்ணா தான் வந்து சொல்லணும் வாறன் அவர் பிள்ளைகளோடை ஹலோவின் கொண்டாடுறார் போலை.. முடிச்சு கொண்டு ஆறுதலா வரட்டும்ஓம் ஓம் கவிதன்
நான் இதைப் பேய்களின் திருவிழாவாகக் கொண்டாட வில்லை இனிப்பு பெறும் திருவிழாகவே கொண்டாடுறன்
கனடாவுக்கு வந்த முதல் வருசம் மருமக்கள் என்னை வலுக் கட்டாயமாக வீடு வீடாக இழுத்துக் கொண்டு சென்றாங்கள் இனிப்புக்கள் வாங்குறத்துக்காக. ஆனா இப்ப நான் மருமக்களை இழுத்துக் கொண்டு வீடு வீடாப் போறன்.
இந்த முறை நாங்கள் வீடுவீடாச் சென்று சேர்த்தவைகளின் பட்டியல்
1. பெரியரக சொக்கலட் பார்கள் - 6
2. சிறியரகச் சொக்கலட் பார்கள் - 207
3, சூப்புத் தடிகள்(lolly pops) - 163
4. ரொபிகள் 244
ஏனையவை 100இற்கு மேல்
(இதை எண்ணி முடிக்கும் வரைக்கும் என்ரை மருமகன் எனக்கு ஒண்டும் தரவில்லை)
குறிப்பா ஒரு ஐம்பது வீடுகளிலை இருந்து அறுபது வீடுகளுக்குப் போயிருப்பம் இதிலை விசேசம் என்னென்ட பத்துக்கும் அதிகமான வீடுகள் நம்மவரின் வீடுகள் அவையைப் பார்க்கேக்கைதான் கொஞ்சம் சங்கடமாயிருந்தது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

