10-31-2004, 02:07 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>
காதல் என் முதல் எதிரி
கன்னி கடும் எதிரி
காளை என் களத்தில்
கணமேதும் எதிரிகள்
கால் பதிக்க அனுமதித்ததில்லை...!
களம் காணும் முன்னே
களமாடிச் சரித்திடுவேன் எதிரிகளை...!
கால ஓட்டத்தில்
கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....
கண் கவரும் மங்கையாய் அன்றி
மனக் கண் முன்னால்
மாய மலராய் மனதோடு...!
மனிதம் மலர வைத்து
மனம் கவர்ந்தாள்
மாயமாய் களம் புகுந்தவள்
மறைந்துதான் இன்னும்
மனதை வாட்டுறாள்....!
மலருக்குள் அவளாய்
மலர்ந்ததால் களத்தில்
கருத்துக்கரம் பிடித்த வாள்
கசங்கிக் கிடக்கிறது
கன்னியும் தப்பிப் பிழைக்கிறாள்
தப்பியும் களத்தில்
மோதலில்லை மலருடன் என்பதால்....!
காதல் மோகத்தில் இல்லை
இந்தக் காளை
கொண்ட கொள்கைதான்
உயிரினும் மேல்
கன்னியே முகம் காட்டு
மலரை ஆக்காதே
களத்தில் கேடயமாய்....!
களம் பல கண்டும்
கறைபடியாக் காளை மீது
கனிவான மலரை
களமாடிச் சரித்ததாய்
சரித்திரம் வேண்டாம்....!
சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
காதல் என் முதல் எதிரி
கன்னி கடும் எதிரி
காளை என் களத்தில்
கணமேதும் எதிரிகள்
கால் பதிக்க அனுமதித்ததில்லை...!
களம் காணும் முன்னே
களமாடிச் சரித்திடுவேன் எதிரிகளை...!
கால ஓட்டத்தில்
கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....
கண் கவரும் மங்கையாய் அன்றி
மனக் கண் முன்னால்
மாய மலராய் மனதோடு...!
மனிதம் மலர வைத்து
மனம் கவர்ந்தாள்
மாயமாய் களம் புகுந்தவள்
மறைந்துதான் இன்னும்
மனதை வாட்டுறாள்....!
மலருக்குள் அவளாய்
மலர்ந்ததால் களத்தில்
கருத்துக்கரம் பிடித்த வாள்
கசங்கிக் கிடக்கிறது
கன்னியும் தப்பிப் பிழைக்கிறாள்
தப்பியும் களத்தில்
மோதலில்லை மலருடன் என்பதால்....!
காதல் மோகத்தில் இல்லை
இந்தக் காளை
கொண்ட கொள்கைதான்
உயிரினும் மேல்
கன்னியே முகம் காட்டு
மலரை ஆக்காதே
களத்தில் கேடயமாய்....!
களம் பல கண்டும்
கறைபடியாக் காளை மீது
கனிவான மலரை
களமாடிச் சரித்ததாய்
சரித்திரம் வேண்டாம்....!
சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

