10-28-2004, 10:29 AM
அக்டோபர் 28, 2004
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நவ.18ல் திருமணம்
சென்னை:
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் அடுத்த மாதம் 18ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.
முதலில் சிலம்பரசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, பின்னர் அவரிடம் இருந்து விலகிவிட்டார். சிலம்பரசனும் ஐஸ்வர்யாவும் இணைந்து பாப் பாடல் கேசட்டுகளை வெளியிட்டு வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இருவரிடையே திடீரென பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் மூண்டுள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்து வந்தனர்.
சுள்ளான் படப்பிடிப்பின்போது, சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஐஸ்வர்யா அடிக்கடி ஆஜராக ஆரம்பித்தார். இந்தக் காதலை வதந்தி என தனுஷ் மறுத்தார். ஐஸ்வர்யா என் அக்காவுக்கு தோழி. அவ்வளவுதான் என்றார்.
இந்தக் காதலை தனுஷ் வீட்டில் உடனே ஏற்றுக் கொண்டாலும், ரஜினி தரப்பில் ஆரம்பித்தில் எதிர்ப்பு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலில் ஐஸ்வர்யா தீவிரமாக இருக்கவே திருமணம் செய்து வைக்க ரஜினி சம்மதித்துவிட்டார்.
இதையடுத்து தனுசின் தந்தை கஸ்தூரிராஜாவும், அவருடைய மனைவி விஜயலட்சுமியும் ரஜினிகாந்த், லதா தம்பதியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தை அடுத்த மாதம் 18ம் தேதி ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
திருமணம் தொடர்பாக தனுஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன். அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடு படிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும் நட்பாகத்தான் பழகினோம். படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள் சந்திக்கவில்லை.
துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. ஒவ்வொரு காட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்க வந்தபோது, என்கிட்டேயும் நிறைய நேரம் பேசுவாங்க.
காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டு பாராட்டினாங்க. அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத் தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம்.
பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏத்துக்கிட்டாங்க. எங்கள் திருமணம் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. மிகப் பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவர் மகள் ஐஸ்வர்யாவை மனைவியா அடையப் போறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
thatstamil.com