07-25-2003, 05:20 PM
<b>நன்றி சரீஷ்..</b>
பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று
அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை
இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!
அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!
இந்தப்பக்கத்திற்கு இது பொருத்தமான வரிகள்
<b>மீண்டும் நன்றிகள் சரீஷ்</b>
பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று
அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை
இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!
அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!
இந்தப்பக்கத்திற்கு இது பொருத்தமான வரிகள்
<b>மீண்டும் நன்றிகள் சரீஷ்</b>
-

