10-23-2004, 12:22 AM
Quote:கிளிநொச்சி நோக்கிய சத்ஜெய படையெடுப்பின் போது படைத்துறைக்கு சில ரகசிய தகவல் வழங்குனராக இருந்தவர் தான் இந்தச் சங்கரி....
குருவியரே இது மாத்திரமல்ல
ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் போது சிங்கள இராணுவம் யு9 வீதி வழியாக முன்னேறி மங்குளத்தையடைவதே திட்டம் ஆனால் 4 அல்லது 5 மாதங்களாக முயற்சித்தும் புளியங்குளத்தைக் கூட அடைய முடியவில்லை. இந் நிலையில் இந்த சேத்துரோகி ஆனந்த சங்கரி இராணுவத்திற்கு மிகச் சிறந்த ஒரு வழியைக் காட்டிக் கொடுத்தான்.
நெடுங்கேணி புளியங்குள வீதியல் உள்ள நைனாமடுவிலிருந்து உள்வீதிகளால் சென்று கனகராசன்குளத்திற்கு அருகிலுள்ள கரப்புக்குத்தியை அடைந்து பின்னர் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்டமுறிப்பை அடைந்து பின்னர் அங்கிருந்து மாங்குளம் நோக்கி முன்னேறுவது இலகு என திட்டம் வகுத்து இராணுவ அதிகாரிகளுக்கு இவனே வழங்கியிருந்தான்.
பெரியமடுவிலிருந்து 3 அல்லது 4 மைல் தொலைவிலிருக்கும் புளியங்குளத்தை ஐந்து மாதமாக முயற்சித்தும் கைப்பற்றமுடியாத இராணுவத்திற்கு ஆனந்த சங்கரி வழங்கிய யோசனையினால்(திட்டத்தால்) 10 முதல் 15 மைல்கள் தூரத்தை 24 மணிநேரத்திற்குள் கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் புலிகளால் பலமான நிலைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தை நகரவிடாமல் தடுத்த புளியங்குளத்தை தாங்களாகவே விட்டுவிட்டு வரவும் கனகராசன் குளத்தை இராணுவத்திடம் சொற்ப காலத்தில் இழக்கவேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் கிளிநெஞ்சி விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்த மறுகணம் மாங்குளத்தையும் சிறிது காலத்தின் பின்னர் ஒட்டு சுட்டானையும் இராணுவத்தால் கைப்பற்றவும் இந்த நகர்வே காரணமாக அமைந்தது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

